Skip to main content

Posts

Showing posts from February, 2018

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - பகுதி 2

அழகியசிங்கர் நேற்று கடற்கரை மத்தவிலாச அங்கதம் பேட்டியை வெளியிட்டிருந்தேன். அது முதல் பகுதி.  இதைக் குறிப்பிட மறந்து விட்டேன்.  இதோ இரண்டாவது பகுதியைப் பாருங்கள்.

பத்து கேள்விகள் பத்து பதில்கள்

அழகியசிங்கர் 09.02.2018 அனறு பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில் 15வதாக கடற்கரை அவர்களைப் பேட்டி எடுத்தேன்.  அமைதியாக அவர் அளித்தப் பதிலை கேட்டு ரசிக்கவும்.  சமீபத்தில் பாரதி விஜயம் என்ற தலைப்பில் மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் கொண்ட புத்தகத்தைத் தயாரித்துள்ளார்.1040 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் ஒரு அரிய பொக்கிஷம்.

நடிகை ஸ்ரீ தேவியின் மரணம்

அழகியசிங்கர் நடிகை ஸ்ரீ தேவியின் மரணத்தை அறிந்தவுடன் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.  ஸ்ரீதேவி என்ற நடிகை நடித்தப் பல படங்களைப் பார்த்து ரசித்தவன்.  அவருக்குக் குழந்தைத் தனமான ஒரு முகம். அட்டகாசமான நடிப்புத் திறன் கொண்டவர்.  படம் பார்த்துவிட்டு வந்தபின்னும் சில தினங்கள் அவர் ஞாபகம் இருந்துகொண்டு இருக்கும்.  நம்ம் வீட்டில் உள்ள ஒரு பெண்மணி என்று தோன்றும். ரஜனியுடனும் கமல்ஹாசனுடன் அவர் நடித்த 16 வயதினிலே என்ற படத்தை என்னால் மறக்க முடியாது.  இப்படி கவர்ச்சிகரமான ஒரு தமிழ் நடிகை மும்பையில் ஹிந்திப் படங்களில் நடிக்கப் போய்விட்டாரே என்று தோன்றும்.  பின்பு அவர் மும்பையிலேயே திருமணம் செய்துகொண்டு இருந்துவிட்டார் என்ற செய்தி எட்டியபோது, அந்த நடிகையைப் பற்றிய கவனம் சற்று கலைந்து போயிற்று.  நேற்று இரவு அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்ற செய்தியை அறிந்தபோது வருத்தமாக இருந்தது.  54 வயதுதான்.  மாரடைப்பால் ஏற்படும் மரணம் குறித்து என் சிந்தனை குதித்து ஓடிற்று. நான் பந்தநல்லுரில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது என் அலுவலகத்தில் பணிபுரியும் காஷ÷யர் ஒருநாள் காலையில் ஒரு மாதி

ஆனால் தற்போது இதன் விலை ரூ.50 மட்டுமே.

விருட்சம் கவிதைகள் தொகுதி 1 அழகியசிங்கர்  1988 ஆம் ஆண்டிலிருந்து 1992ஆம் ஆண்டு வரை நவீன விருட்சம் இதழில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு நூல் விருட்சம் கவிதைகள் தொகுதி 1 என்ற பெயரில் வெளியிட்டுள்ளேன்.  94 படைப்பாளிகளின தொகுப்பு நூல் இது.  புதிதாக கவிதை எழுத விருமபுகிறாவர்கள் அவசியம் இத் தொகுப்பு நூலை வாங்கி வாசிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கறேன்.  230 பக்கங்கள் கொண்ட இத் தொகுப்பு நூலின் விலை ரூ.120.  ஆனால் தற்போது இதன் விலை ரூ.50 மட்டுமே.  வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் : 9444113205  எஸ் வைத்தியநாதன் என்பவர் எழுதிய நாற்காலி என்ற கவிதையை வாசிக்கவும். வேண்டும் சமயம் சென்றமர்வேன் புத்தகங்களை வைப்பேன் உடைகளை வைத்ததுண்டு உயரமெட்ட உபயோகித்ததுண்டு காணாதது போல் இருந்ததும் உண்டு கிடந்து கட்டிலில் கால் வைத்துக்கொள்வேன் சமீபத்தில் நாற்காலியாகிப் போனேன்

ஓர் உரையாடல்

அழகியசிங்கர் மாதம் ஒருமுறை ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறார் அழகியசிங்கர்.  உண்மையில் இந்தக் கூட்டத்தின் நோக்கம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.  ஆனால் பொதுவாக புத்தகங்களைப் பற்றித்தான் பேச வேண்டும்.  அவர் வீட்டில் பால்கனியில் காத்துக்கொண்டிருக்கிறார்.  வழக்கம்போல் அவரைப் பார்க்க ஜெகனும், மோகினியும் வருகிறார்கள்.  காலிங் பெல்லை அடித்துவிட்டு வாசலில் நிற்கிறார்கள்.  "வாருங்கள் வாருங்கள்.." என்று வரவேற்கிறார் அழகியசிங்கர். மூவரும் ஒரு அறையில் உட்கார்ந்து பேச ஆரம்பிக்கிறார்கள்.  மோகினி : உங்கள் மனைவி எங்கே? அழகியசிங்கர் : பெண் வீட்டிற்குப் போயிருக்கிறாள். ஜெகன் : கமல்ஹாசன் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறாரே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்? அழகியசிங்கர் : இந்த அரசியலே எனக்குப் புரியவில்லை.  மதுரையில் நடந்த கூட்டத்தைப் பார்த்தால், இந்தக் கூட்டத்திற்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கும்?  இதெல்லாம் யார் கொடுத்திருப்பார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. மோகினி : நீங்கள் நடத்திற இலக்கியக் கூட்டம் என்று நினைத்தீரா? அழகியசிங்கர் : நான

கு அழகிரிசாமியும் நானும் என்ற தலைப்பில் கல்யாணராமன் பேசிய பேச்சின் மூன்றாம் பகுதி

அழகியசிங்கர் கிட்டத்தட்ட முக்கயமான கு அழகிரிசாமியின் சில கதைகளைக் குறித்த கல்யாணராமன் ஆற்றய உரை மூன்று பகுதிகளாக வந்துள்ளன.  முதல் பகுதி இரண்டாம் பகுதிகளைப் பார்த்து ரசித்திருப்பீர்கள்.  இதோ மூன்றாவது பகுதியும் இறுதிப் பகுதியும் அளிக்கிறேன்.  பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் உற்சாகமடைவேன்.

கு அழகிரிசாமியும் நானும் - 2

கு அழகிரிசாமியும் நானும் என்ற தலைப்பில் கல்யாணராமன் பேசிய பேச்சின் இரண்டாவது பகுதி அழகியசிங்கர்

கு அழகிரிசாமியும் நானும் என்ற தலைப்பல் கல்யாணராமன் பேசிய பேச்சின் முதல் பகுதி

அழகியசிங்கர் கிட்டத்தட்ட முக்கயமான சில கதைகளைக் குறித்த கல்யாணராமன் ஆற்றய உரை மூன்று பகுதிகளாக வந்துள்ளன.  முதல் பகுதியை இன்று அளிக்கிறேன்.  உங்கள் கருத்துக்களைப் பதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 

மூன்றாவது சனிக்கிழமை நடந்த கு அழகிரிசாமியும் நானும் என்ற கூட்டம்

அழகியசிங்கர் இது வரை 8 கூட்டங்கள் நடத்தி உள்ளேன்.  முதலில் தி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் திரூப்பூர் கிருஷ்ணன் தலமையில் ஜøன் மாதம் 2017 ஆண்டு இக் கூட்டத்தைத் துவக்கினேன்.  திருப்பூர் கிருஷ்ணன்தான் இதுமாதிரியான தலைப்பைத் தேர்ந்தெடுத்தார்.  அதிலிருந்து ஒவ்வொரு எழுத்தாளரைக் குறித்தும்  கூட்டங்களை நடத்தி வருகிறேன்.  இதுவரை நடந்த கூட்டங்கள் ஒவ்வொன்றும் எனக்குத் திருப்தியை அளித்து உள்ளன. எல்லாவற்றையும் ஆடியோவிலும் வீடியோவிலும் பதிவு செய்துகொண்டு வருகிறேன்.   போன மாதம் தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ராகஷ் பற்றி பேசினார். இதோ இந்த மாதம் 17ஆம் தேதி கல்யாணராமன் (பேராசிரியர்) கு அழகிரிசாமியைப் பற்றி.. இக் கூட்டங்களில் இரண்டு விதமான போக்குகளை நான் காண்கிறேன். ஒன்று : ஒரு எழுத்தாளரை நன்கு அறிந்துகொண்டு அவருடன் பழகிய நட்புடன் அவர் படைப்புகளைக் குறித்தும், அவரைக் குறித்தும் பேசுவது.  இன்னொரு போக்கு அந்த எழுத்தாளரையே தெரியாமல் அவர் படைப்புகளை மட்டும் படித்துவிட்டுப் பேசுவது.  கல்யாரணராமன் அழகிரிசாமியின் கதைகளை மட்டும் படித்துவிட்டுப் பேசினார்.   அந்தக் கதைகளை முழுக்க ம

என் கதைக்குக் கிடைத்த ஆறுதல் பரிசு

அழகியசிங்கர் தினமணியைப் படித்துக்கொண்டு வரும்போது üதினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியைýப் பற்றிய விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன்.  எப்போதும் நான் கதைகள் எழுதுவது என்பது குறைவாகத்தான் இருக்கும்.  கதை எழுது என்று எந்தப் பத்திரிகைக்காரரும் என்னைக் கேட்பதில்லை. ஏன் யாரையும் கேட்பதில்லை?   என் பத்திரிகையில் நான் எழுதுவது தவிர.  எந்தப் பத்திரிகையிலும் நான் கதை அனுப்பினால் கிணற்றில் கல்லைப் போட்டதுபோல் இருக்கும்.  பத்திரிகைகாரர்களைக் குறை சொல்ல முடியாது.  ஏகப்பட்ட கதைகள் அவர்களுக்கு வரும்.  அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது அவர்களிடையே குழப்பமாக இருக்கும்.  ஏன் போட்டியாகக் கூட இருக்கும்.  ஒருமுறை அசோகமித்திரனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் அடிக்கடி என்னிடம், üமற்றப் பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதி அனுப்புங்கள்,ý என்று கூறிக்கொண்டிருப்பார்.  üயாரும் கண்டுக்க மாட்டாங்க, சார்,ý என்பேன் நான்.  ஏனென்றால் எல்லாப் பத்திரிகைகளிலும் எனக்குத் தெரிந்தவர்கள் இருப்பார்கள்.  ஆனால் அவர்களுக்கு என் கதைகளை அனுப்பி தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைப்பவன் நான். எனக்கும் சங்கடம்.  அவர்கள

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 33

கு அழகிரிசாமியும்  நானும் சிறப்புரை :  கல்யாணராமன் இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்     மூகாம்பிகை வளாகம்     4 லேடீஸ் தேசிகா தெரு     ஆறாவது தளம்     மயிலாப்பூர்     சென்னை 600 004 (சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)     தேதி 17.02.2018 (சனிக்கிழமை) நேரம் மாலை 6.00 மணிக்கு பேசுவோர் குறிப்பு :   சமீபத்தில் ஆரஞ்சாயணம் என்ற பெயரில் காலச்சுவடு பதிப்பகமாக ஒரு கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது.  பேராசிரியர், விமர்சகர். அனைவரும் வருக, அன்புடன் அழகியசிங்கர் 9444113205

குவிகம் இருப்பிடத்தில் நடந்த கூட்டம்

அழகியசிங்கர் குவிகம் இருப்பிடத்தில் நேற்று நண்பர்களைச் சந்தித்தேன். இதுமாதிரியான கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்பது தெரியும்.  அதுமாதிரியே வந்திருந்தார்கள்.   கலந்து கொண்டவர்களில் ஒருவர், 'உங்களுக்கு கவிதையா கதையா எதில் விருப்பம்?' என்ற கேள்வி கேட்டார்.  'முதலில் எல்லோரும் கவிதைதான் எழுதுவார்கள்.  அதன்பின்தான் கதை எழுத ஆரம்பிப்பார்கள்.  பின் கட்டுரைகள் எழுதுவார்கள்..நாவலும் எழுதுவார்கள்,' என்றேன்.  'ஆனால் சில எழுத்தாளர்கள்தான் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவார்கள்?' என்றேன்.   இது எல்லோரும் சேர்ந்து பேசுகிற கூட்டம்.  'ஒரு புத்தகத்தைப் பற்றி விமர்சனம் செய்யும்போது, எல்லோர் முன்னும் அதை மோசமாக விமர்சனம் செய்யாதீர்கள்.  உங்கள் கருத்து உங்களுக்கு மட்டும்தான் உண்மை.  அதைத் தெரிவிக்கும்போது மற்றவர்களிடம் வைரஸ் மாதிரி பரவி புத்தகம் வாங்குபவர்கள் வாங்காமல் இருந்து விடுவார்கள்,' என்றேன்.  நான் சொன்னதை அங்குக் கூடியிருந்த நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.  

பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....14 - பகுதி 2

பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....14 - பகுதி 2 பா ராகவன் பேட்டி அளிக்கிறார் நேற்று பா ராகவன் பேட்டியில் முதல் பகுதி வெளியிட்டேன்.  இப்போது இரண்டாவது பகுதி.  கேள்வி கேட்பவரை விட பதில் சொல்பவர்தான் முக்கியமானவர்.  அந்த விதத்தில் ராகவன் சிறப்பாக பதில் அளித்துள்ளார்.  அவருக்கு என் வாழ்த்துகள். 

பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....14 - பகுதி 1

பா ராகவன் பேட்டி அளிக்கிறார் இந்தத் தலைப்பில் இதுவரை பா ராகவனையும் சேர்த்து 14  பேர்களைப் பேட்டி எடுத்துள்ளேன்.  எல்லாம் எளிமையான கேள்விகள் எளிமையான பதில்கள்.  சமீபத்தில் நான் ராகவன் வீட்டிற்குச் சென்றேன்.  உண்மையில் அமேசான் கின்டலில் என் புத்தகத்தை மின்னூலாக மாற்றுவதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்ளச் சென்றேன். அப்போது பத்து கேள்விகள் பத்து பதில்களுக்கான பேட்டியும் எடுத்தேன். 

தயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்

அழகியசிங்கர் தயாரிப்புக் கவிஞர் ஒருவர் தயாரிப்பு இல்லாத கவிஞரை அசோக்நகரில் உள்ள சரவணா ஹோட்டலில் சந்தித்துவிட்டார்.  தயாரிப்பு இல்லாத கவிஞர் எப்படி இவரிடமிருந்து தப்பிப்பது என்று யோசிக்க  ஆரம்பித்துவிட்டார்.   ஏனென்றால் அவரைக் கண்டாலே த இ கவிஞருக்குப் பிடிக்கவில்லை.   கவிதையே எழுதத் தெரியாது ஆனால் கவிதை எழுதுவதாக பாவலா பண்ணுகிறார் என்ற நினைப்பு த. இ.7 கவிஞருக்கு.  தயாரிப்புக் கவிஞருக்கோ யார்யாரெல்லாசூமோ கவிதைப் புத்தகம் கொண்டு வருகிறார்கள்.  இவர் அப்பாவியாக இருக்கிறாரே என்ற நினைப்பு. "வணக்கம்.  என் புதிய கவிதைப் புத்தகத்திற்கு உங்களிடம்தான் முன்னுரை வாங்க நினைத்தேன்.." "ஐய்யய்யோ..எனக்கு அந்தத் தகுதியே கிடையாது," என்றார் த. இ. கவிஞர். "ஏன் தகுதி இல்லை.  நானும் நீங்களும்தான் முதன் முதலாக எழுத ஆரம்பித்தோம்.  இதோ நான் பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்துள்ளேன்.  ஆனால் நீங்கள் ஒன்றுகூட கொண்டு வரவில்லை.." "நான் வேலையில் மூழ்கிவிட்டேன்.  வீட்டுப் பிரச்சினை வேறு.. எங்கே கவிதை எழுதுவது.." "நீங்கள் ஒ

எதிர்பாராத சந்திப்பு

அழகியசிங்கர்                                                                                                   என்னுடைய முழு சிறுகதைத் தொகுதி வாங்குபவர்களுக்கு சென்னையில் இருந்தால் அவர்கள் வீட்டிற்குச் சென்று புத்தகம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.   அப்படி சிலருக்குக் கொடுத்துக்கொண்டும் இருக்கிறேன்.  ஞாயிற்றுக்கிழமை அன்று மடிப்பாக்கத்தில் உள்ள பெண் வீட்டிற்குச் சென்றுவிட்டு வரும் வழியில் என் அலுவலக நண்பர் சுரேஷ் அவர்களிடம் என் புத்தகம் ஒன்றை கொடுக்கச் சென்றேன்.  அவர்கள் வீட்டு மாடிப்படிக்கட்டிற்குப் போகும்போது ஜாக்கிரதையாகப் போக வேண்டும். தடுமாறி விழ தரை ஒரு விதமாக ஏமாற்றும்.   அவரிடமும் புத்தகம் கொடுத்துவிட்டு ஷண்முக சுந்தரம் என்ற நண்பரை ஆதம்பாக்கத்தில் சந்தித்து கதைப் புத்தகம் கொடுக்கச் சென்றேன். புக்கிஸ் என்ற பெயரில் ஒரு புத்தகக் கடை வைத்திருக்கிறார் ஷண்முக சுந்தரம்.  ஒரே ஆச்சரியம்.  ஏகப்பட்டப் புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கிறார். பளீரென்ற விளக்குகள் வெளிச்சத்தில்.  இரும்பு அலமாரிகளில் பெரும்பாலும் தமிழ் புத்தகங்கள்..  வாடகை நூல் நிலையம் வைத்து நடத்த

ரோஜா நிறச் சட்டை

அழகியசிங்கர் என்னுடைய சிறுகதைத் தொகுதியான ரோஜா நிறச் சட்டை மின்னூலாக வந்துள்ளது.  ஒரு விதத்தில் பா ராகவன் தூண்டுதல் இப் புத்தகம் வர உதவியது. மேலும் என் நண்பர் கிருபானந்தன் இப் புத்தகத்தை மின்னூலாக மாற்ற உதவி செய்தார்.  ஏற்கனவே நேர் பக்கம் என்ற கட்டுரைத் தொகுதி மின்னூலாக உள்ளது. AMAZONKINDLE ல் KDPAMAZON. COM  போய்ப் பார்க்கவும்.  

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

அழகியசிங்கர்   சுக்வீர் கவிதைகள் 2. வண்ணங்கள் வண்ணங்கள் சாவதில்லை அவை கரைந்து விடுகின்றன அல்லது அடித்துக் கொண்டு போகப்படுகின்றன அல்லது பூமியின் அந்தகாரத்தில் விதைக்கப்படுகின்றன. வண்ணங்கள் மலர்களாக மாறுகின்றன, மேகங்களின் ஒளிர்ந்து உதடுகளில் புன்னகை பூக்கின்றன, கண்ணீரைப் பெருக்கி ஒளியை ஈன்றெடுக்கின்றன. வண்ணங்களாகிய நாம்; வண்ணங்கள் உருவாக்கும் நாம் வாழ்க்கையை நம் முதுகுகளில் சுமந்து கொண்டோ நம் பின்னால் இழுத்துக் கொண்டோ நம் சிறகுகளில் அலைத்துக்கொண்டோ இங்கு வந்து சேர நூற்றாண்டுகளைத் தாண்டியிருக்கிறோம், இருள் முதல் ஒளிவரை உள்ள எல்லா வண்ணங்களுமான நாம் பல தடவைகளில் அடித்துக்கொண்டுபோகப்பட்டு மறுபடியும் பிறந்திருக்கிறோம். இன்றும் காலத்திரையை வண்ணங்கொண்டு தீட்டுகிறோம் அனாதிகாலத்தொட்டுப் பிறந்து வரும் நாம் வாழ்க்கையின் அமுதைக் குடித்ததால் இன்றும் நஞ்சுடன் கலந்த வாழ்க்கையமுதைச் சுவைக்கிறோம் கனவுகளை உருவாக்குகிறோம் மூலம் : பஞ்சாபி தமிழில் : மேலூர் சுக்வீர் (1925) நாவல்,  சிறுகதை, கவிதை இத்துறைகளில் பஞ்சாபி மொழியில் சிறந்து விளங்குகிறார். நான்கு கவி

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 83

அழகியசிங்கர்   தேவராஜ் விட்டலன் கவிதை வளைந்த மரக்கிளையில் அமர்ந்து கொண்டு சப்தமிடுகிறது ஒரு சிட்டுக் குருவி... .விடுபட்ட சொந்தங்களை சப்தமிட்டு அழைக்கிறது... யாரும் வராத கணத்தில் ஏக்கத்தோடு பறந்து செல்கிறது மரக்கிளையை விட்டு. நன்றி : ஜான்சிராணியின் குதிரை - கவிதைகள் - தேவராஜ் விட்டலன்- வாசகன் பதிப்பகம், 167 ஏவிஆர் காம்ப்ளக்ஸ், அரýசுக் கலைக்கல்லூரி எதிரில், சேலம் - 636 007, கைபேசி : 9842974697 - பக்கங்கள் : 64 - விலை : ரூ.50

என்னுடைய 'திறந்த புத்தகத்திற்கான' அறிமுக உரை பகுதி 5

அழகியசிங்கர் சமீபத்தில் நடந்த புத்தகக் காட்சிக்காக வந்திருந்த பா ராகவனிடம் என் 'திறந்த புத்தகம்' பிரதியைக் கொடுத்தேன்.  உடனே படித்துவிட்டு ராகவன் எனக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.  அவரை இப் புத்தகம் பற்றி சில நிமிடங்கள் பேச இயலுமா என்று கேட்டுக்கொண்டேன். அவர் அதற்கு சம்மதித்தார்.  இதோ அவர் பேசியதை இங்கு ஒளிபரப்புகிறேன்.  ஏற்கனவே 4 பேர்கள் இப் புத்தகத்தைப் பற்றி பேசி உள்ளார்கள்.  ஐந்தாவதாக ராகவன்.  புத்தகம் வேண்டுபவர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444113205.