அழகியசிங்கர்
62 சிறுகதைகள், 7 குறுநாவல்கள், ஒரு நாடகம் கொண்ட üஅழகியசிங்கர் கதைகள்ý என்ற மொத்தப் படைப்புகளுக்கான புத்தகம் கொண்டு வருகிறேன். புத்தகக் காட்சிக்குள் வந்துவிடும். 650 பக்கங்களுக்கு மேல் உள்ள இப்புத்தகம் கெட்டி அட்டைப்ப்போட்டு தயாரிக்கப்பட உள்ளது. இதன் விலையை ரூ.600 ஆக வைப்பதாக உள்ளேன். நான் இதுவரை 12 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். இத் தொகுப்பு என் 13வது தொகுப்பு.
என் முதல் கதையின் பெயர் üசெருப்பு.ý 1978ஆம் ஆண்டு எழுதியது. ஒரு சிறுபத்திரிகையில்தான் பிரசுரம் ஆனது.
அந்தக் கதையைப் படித்துவிட்டு என் அலுவலகத்தில் உள்ள ஒரு பெண்மணி, 'உங்கள் செருப்பு நன்றாக இருக்கிறது,' என்றாள். உடனே நான் என் காலில் மாட்டியிருந்த செருப்பைப் பார்த்தேன்.
'உங்கக் கால் செருப்பைச் சொல்லலை, சார்.. உங்கக் கதையைச் சொல்றேன்,' என்றாள். அவள் சொன்னதைக் கேட்டு என் கையைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். அந்த நேரத்தில அந்தப் பெண்மணி சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அதேபோல் முதன் முதலாக போராட்டம் என்ற என் குறுநாவல் ஒன்று கணையாழியில் அக்டோபர் 1986ல் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தது. தேர்ந்தெடுத்தவர் அசோகமித்திரன். என்னால் நம்ப முடியவில்லை. இப்படியும் நடக்குமா என்ற ஆச்சரியம்தான் அப்போது. ஆனால் அந்தத் தருணத்தில் வங்கியில் எழுதிய சிஎஐஐபி தேர்வில் தோல்வி அடைந்துவிட்டேன். அப்போது கணையாழியில் குறுநாவல் வருவதுதான் வெற்றி என்று நினைத்துக்கொண்டேன்.
அப்போது கணையாழி ஸ்தாபகர் கஸ்தூரி ரங்கன் ஒன்று சொன்னார். ''கதைக்காக பணம் அனுப்ப மாட்டோம். ஆனால் கணையாழி பத்து வருடங்கள் வரும்,'' என்று. ஆனால் சில மாதங்களிலேயே அனுப்புவதை நிறுத்தி விட்டார். ஏன் என்று நானும் கேட்கவில்லை. போராட்டம் என்ற கதையைத் தொடர்ந்து 6 குறுநாவல்கள் கணையாழில் ஒவ்வொரு வருஷமும் தி ஜானகிராமன் போட்டியில் வெளிவந்து கொண்டிருந்தது.
இதோ 'மாற்றம்' என்ற பெயரில் 67வது சிறுகதையும் டிஸம்பர் 2017ஆம் ஆண்டு வெளிவந்து விட்டது. இன்னும்கூட என் கற்பனையில் கதை இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் முன்பு இருந்த முனைப்பு கொஞ்சம் குறைந்துவிட்டது.
இதோ கதைகள் எல்லாவற்றையும் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வர வேண்டுமென்ற என் ஆர்வம் சற்றும் குறையவில்லை. 650 பக்கங்கள் தயார் செய்துவிட்டேன். இப்புத்தகத்தின் விலை ரூ.600. ஆனால் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.300க்குக் கொடுக்க விருப்பம். புத்தகக் காட்சி வரைதான் இந்தச் சலுகை.
இதைப் படிப்பவர்களுக்கு இப் புத்தகம் வேண்டுமென்றால் ரூ.300 கொடுத்தால் போதும். நவீன விருட்சம் கணக்கில் பணம் அனுப்பி பதிவு செய்துகொள்ள வேண்டுகிறேன். கணக்கைப் பற்றிய விபரம் இதோ:
Name of the Account : NAVINA VIRUTCHAM,
BANK : INDIAN BANK, ASHOKNAGAR BRANCH.
ACCOUNT NUMBER No. 462584636
`IFSC CODE : IDIB 000A031
பணத்தைக் கட்டிவிட்டு எனக்குத் தகவல் அனுப்பவும். என்னுடைய தொலைபேசி எண்: 9444113205 9176613205.
நானும் புத்தகம் வருவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
Comments