Skip to main content

Posts

Showing posts from June, 2016

தோன்றும் கவிதை வரிகள்

அழகியசிங்கர் காலையில் வாக் போகும்போது எனக்கு கவிதை வரிகள் தோன்றினால் வீட்டில் உள்ள கர்னாடக வங்கி டைரியில் எழுதி வைப்பேன்.  தேதி எழுதுவேன்.  நேரம் எழுதுவேன்.  ஆனால் யாரிடமும் இதுமாதிரி எழுதுவதை காட்ட மாட்டேன்.  கிட்டத்தட்ட 30 க்கு மேல் கவிதைகள் எழுதியிருப்பேன். நானே படித்து ரசிக்கக் கூடிய கவிதைகள் இவை.  அவற்றில் ஒன்று ஜெயமோகன் என்ற தலைப்பில் ஒரு கவிதை.  இதோ உங்களுக்குப் படிக்க அளிக்கிறேன். ஜெயமோகன் ஆயிரக்கணக்கான பக்கங்களில் மஹாபாரதம் எழுதிக்கொண்டே போகிறார் படிக்க படிக்க வளர்ந்துகொண்டே போகிறது எது மாதிரியான எழுத்தளார் இவர் எப்படியெல்லாமோ யோஜனை செய்கிறார் என்பது ஆச்சரியம்தான் எழுத்து அவரை எழுதிக்கொண்டே போகிறதா ஆனால்  என்ன செய்வது அவர் எழுதும் வேகத்திற்கு என்னால் படிக்க முடியவில்லையே.......

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

அழகியசிங்கர் உமாபதியின் வெளியில இருந்து வந்தவன் என்ற கவிதைத் தொகுதி விருட்சம் வெளியீடின் நான்காவது தொகுதி.  வெளிவந்த ஆண்டு நவம்பர் 1991. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஓடி விட்டன.  அவரும் என்னைப் போல் வங்கியில் பணிபுரிந்தவர்.  இப்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.  அவருக்கு வயது எழுபதாவது இருக்கும். இந்தத் தொகுதிக்கு சுந்தர ராமசாமி முன்னுரை எழுதியிருக்கிறார். அவருடைய கவிதைகள் குழப்பமில்லாமல் ஆழ்ந்து யோசனை செய்ய வைக்கும். இந்தத் தொகுதி வரும்போது ஒரு முறை என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்திருக்கிறார்.  அன்று ஒரு பண்டிகை தினம்.   நான் வீட்டில் அவருக்கு விருந்தளித்தேன்.  இப்போது அவர் முகமே எனக்கு மறந்து விட்டது.   ஓசைகள் என்ற இக் கவிதைக்கு ஓவியர் பாஸ்கரன் ஒரு பூனை படம் வரைந்திருக்கிறார்.  பூனை படங்களை வரைவதில் பாஸ்கரன் திறமையானவர் என்று கேள்விப்ப்ட்டிருக்கிறேன். இத் தொகுப்பை திரும்பவும் கொண்டு வர உத்தேசித்துளளேன். உமாபதி ஓசைகள் ஓசைகளின் உபத்திரவம்  தாங்க முடியாமல் போச்சு இன்ன இடமென்றில்லாமல் வீட...

ராம் காலனி என்ற மர்மக் குறுநாவல்

அழகியசிங்கர் அப்போது நாங்கள் போஸ்டல்காலனி முதல் தெருவில் குடியிருந்தோம்.  இன்னும் கூட ஞாபகம் இருக்கிறது.  தீபாவளி அன்றுதான் நடந்தது.  எங்கள் வீடு இருந்த தெரு முனையில் உள்ள ஒரு வீட்டில் ஒரு ரிட்டையர்டு ஸ்கூல் டீச்சர் தனியாக இருந்தாள்.  வயதான பெண்மணி. அந்தப் பெண்மணிக்கு சொந்தமான தனி வீடு. அந்தப் பெண்மணி கொலை செய்யப்பட்டிருந்தாள். பயங்கரமான அதிர்ச்சி அது.  இவ்வளவு அருகில் ஒரு கொலை நடந்திருக்கிறது என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை.   கொலை செய்தவன் அந்தப் பெண்மணியின் நகைக்காக கொலை செய்து விட்டான்.  தனிமையில் இருக்கும் அந்தப் பெண்மணி நகைக்காக கொலை செய்ய வருபவனிடம், கேட்டவுடன் நகைகளைக் கழட்டிக் கொடுத்திருக்கலாம்.  அந்தப் பெண்மணி எரிர்ப்பு தெரிவித்ததால் இது மாதிரி நிகழ்ந்து விட்டது. போலீசுகாரர்கள் திறமையானவர்கள்.  ஒருவாரத்தில் அந்தக் கொலையாளியைப் பிடித்து விட்டார்கள். நம் அருகில் இது மாதிரி நிகழ்ச்சி நடக்கும்போது நம்மை அறியாமலேயே ஒரு அதிர்வு ஏனோ ஏற்படுகிறது.  மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது.  நாங்கள் அன்று அப்பட...

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

அழகியசிங்கர் பூனைகள் பற்றி நான் கவிதைகளைத் தொகுக்க ஆரம்பித்தேன்.  பின் ஏனோ அந்த முயற்சியைத் தொடரவில்லை.  என்னிடம் உள்ள நல்ல பழக்கம். நான் எதாவது தொடர்ந்தால் கொஞ்ச நாள் தொடர்வேன் பின் நிறுத்தி விடுவேன்.  இப்படி பாதியில் பாதியில் நின்று போன ப்ராஜக்ட் அதிகம்.  இந்த ப்ளாகும், முகநூலும் வந்த பிறகு  இப்படி தொடராமல் போன எத்தனையோ பாதியில் நின்று போயிருக்கின்றன.  என்றாவது ஞாபகம் வந்தால் தொடர்வேன்.  பூனைகள் குறித்த கவிதைகள் பலர் எழுதி உள்ளார்கள். என்னைப் பொறுத்தவரை கவிதை எழுதத் தொரியாத ஒருவர் கவிதை எழுத விரும்பினால் பூனையை கண் முன் நிறுத்தி எழுதத் தொடங்கினால் கவிதை தானாகவே எழுத வந்து விடும்.  ஏன்எனில் பூனை ஒரு ஆன்மிக விலங்கு. அதைத் தூக்கி மேலே வீசி எறிந்தால் தன் மீது அடிபடாமல் தப்பித்து விடும்.   வீடை ஒழிக்கும்போது ஒரு பெஞ்ச் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது வெளியே வைத்திருந்தேன்.  நேற்று வண்டியை உள்ளே தள்ளிவிட்டு வந்தேன்.  பெஞ்சில் ஒரு பூனை சொகுசாகப் படுத்துக் கிடந்தது.  எனக்கு கெட்ட கோபம்.  என்னிடம் அனுமதி கேட...

சில துளிகள்.......

அழகியசிங்கர்  படுக்கையிலேயே படுத்துக்கொண்டிருந்த அப்பா திடீரென்று எழுந்து உட்கார்ந்து கைகளை அசைத்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்.   ********* நான் எடுத்துப் படிக்க நினைத்த புத்தகங்களின் ஒன்றின் பெயர் கானகன்.  என் கம்பூயூட்டர் டேபிள் பக்கத்தில் வீற்றிருக்கிறது. ********** கடந்த நாலைந்து நாட்களாக நான் சளி, இருமலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன்.  சாப்பாடு பிடிக்கவில்லை.  சோர்வு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.  இன்று கொஞ்சம் பரவாயில்லை.  சாப்பிட முடிந்தது. ********* அழகியசிங்கர் என்ற பெயரில் எழுதுவதை விட்டுவிட்டு மாயோன் என்ற பெயரில் எழுதலாமா?   ********* இன்று 100வது இதழ் விருட்சத்தை ஆரம்பிக்க முடியவில்லை. தில்லியிலிருந்து உறவினர்கள் வந்து விட்டார்கள்.  அவர்களை அலட்சியப் படுத்துகிறேன் என்று நினைத்து விடக் கூடாது என்று அவர்களுடனே இருந்தேன். ********* காலையில் தெருவில் ஒரு சிறுவன் கணீரென்ற குரலில் இடியாப்பம் இடியாப்பம் என்று கத்திக்கொண்டு போவான்.  அவனுடைய சுறுசு...

எதாவது ஒரு பக்கத்தை எடுத்துப் படிப்பேன்

அழகியசிங்கர் என் கல்லூரி நாட்களிலிருந்து நான் கன்னிமேரா லைப்ரரியின் உறுப்பினன்.  எதாவது புத்தகங்கள் எடுத்துக்கொண்டு வருவேன்.படிக்கிறேனோ இல்லையோ புத்தகங்களை அங்கிருந்து எடுத்துக்கொண்டு வருவது வழக்கம்.  முழுக்க என்னால் புத்தகத்தைப் படிக்க முடியாவிட்டாலும், நான் எடுத்துக்கொண்டு வரும் புத்தகத்திலிருந்து எதாவது ஒரு பக்கத்தை எடுத்துப் படிப்பேன்.  எந்தப் பக்கம் என்பது தெரியாது.  சிலசமயம் அந்தப் புத்தகத்தை யார் கொண்டு வந்துள்ளார்கள் என்று பார்த்து வாங்கி வைத்து விடுவேன். ஒருமுறை ரமண விருந்து பாகம் 3 கிடைத்தது.  படிக்க படிக்க சுவாரசியமாக இருந்தது.  உடனே வாங்கி வைத்துக் கொண்டேன். இப்போதெல்லாம் என் மனம் சஞ்சலம் (அவ்வளவு லேசில் அடைவதில்லை) அடைந்தாலோ போரடித்தாலோ என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தாலோ ரமண விருந்தை எடுத்து எதாவது ஒரு பகுதியை எடுத்துப் படிப்பேன்.   அது எனக்கு எதாவது உணர்த்தும்.  நானே கற்றுக்கொள்ளும் பாடமாகக் கூட இருக்கும்.  அதிலிருந்து சாப்பாட்டு யோகம் என்ற பகுதியை உங்களுக்குப் படிக்க அளிக்கிறேன். ரமணாச்ரமத்திற்க...

இரண்டு கவிதைகள்

அழகியசிங்கர் ஒன்று நான் பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன் இருக்கை எதுவும்                                                             தட்டுப்படவில்லை பஸ் ஊர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தது பல ஊர்களைத் தாண்டியது பல மனிதர்களைச் சுமந்த சென்றது வயல்களைத் தாண்டியது உயரமான மரங்களைத் தாண்டியது கூட்ட நெரிசலில் ஒழுங்கற்ற சப்தம் பஸ்ஸில் சுழன்றபடி சென்றது ஊர்ந்து ஊரந்து பஸ் நகர்கிறது நான் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருக்கிறேன் இரண்டு இந்த இடத்திற்கு நான் வருவதற்குமுன் இந்த இடம்தானா என்று எனக்குத் தோன்றியது...                                                                         (2011)...

ஏழு வரிக் கதை

ஆயிரங்கால் மரவட்டை நகுலன் மணி4.30 ஆகிவிட்டது.  வெளியில் போக ஒரு பரபரப்பு.  வேறு காரணமும் உண்டு.   சென்ற வழியில் நண்பனைச் சந்தித்தேன்; அவனும் என்னைப் போல ஒரு புஸ்தகப் பிரியன்.  அப்பொழுதுதான் üüகரிச்சான் குஞ்சுýý வின் üüபசித்த மானிடம்ýý படித்து முடித்திருந்தேன்.  அதை யாரிடமாவது சொல்லி என் அகமகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று ஒரு துடிப்பு.  நானும் அவனும் கரிச்சான்குஞ்சுவின் படைப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.  அவனும், üகரிச்சான் குஞ்சுýவின் சிறுகதைகளைப் படித்திருக்கிறான். அப்பொழுது நீ வந்து சேர்ந்தாய்; பேச்சு பரிசு கொடுக்கும் ஸ்தாபனங்களைப் பற்றித் திரும்பியது.  எந்த எந்த ஸ்தாபனத்தில் எப்படி எப்படி இந்தப் பரிசு விஷயம் நிச்சயிக்கப்படுகிறது என்பதில் பேச்சுத் திரும்பியது.  ஆலோசனைக்குழு, காரியக் கமிட்டி, இவற்றில் எதில் எதில் யார் யார் இருக்கிறார்கள், இவரில் யார் யாரைவிட முக்கியம், பரிசு பெற என்ன என்ன தகுதிகள், எதை எதை எப்படி எப்படிச் செய்யவேண்டும் என்றெல்லாம் பேச்சுத் திசை மாறிப் போனதும், என் நண்பன் என்னைப...

குமரகுருபரன் என்ற கவிஞர்

அழகியசிங்கர் குமரகுருபரன் என்ற கவிஞர் எதிர்பாராதவிதமாய் மரணம் அடைந்தது அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது.  உண்மையில் எனக்கு அவர் யார் என்று தெரியாது.  சமீபத்தில் எழுதுபவர்களில் பல படைப்பாளிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் பலருடைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு வருகிறேன்.  குறிப்பாக கவிதைத் தொகுதிகளை வாங்க வேண்டுமென்று நினைத்துக் கொள்வேன்.  யார் இந்த குமரகுருபரன் அவர் எப்படிப்பட்ட கவிதைகளை எழுதுவார் என்றெல்லாம் தெரியாது.   அவருக்கு இயல் விருது கிடைத்த செய்தியை அறிந்தபோது அவரைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று நினைத்தேன்.  யூ ட்யூப்பில் அவருடைய புத்தக வெளியீட்டு விழா நடந்த விபரம் அறிந்து பார்த்திருக்கிறேன். பாண்டிச்சேரியில் நடந்த விமர்சனக் கூட்டத்தில் இந்திரன் பேசியதையும் பார்த்தேன். இப்போது இதெல்லாம் சாத்தியமாகி இருக்கிறது.  முன்பு அதெல்லாம் கூட சாத்தியம் இல்லை.  இப்படித்தான் சில நிகழ்ச்சிகள் நடந்து நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. நான் படித்த காஸ்டினேடா புத்தகங்களில் üமரணம்தான் உன் எதிரிý  என்ற வாக்...

ஓர் உரையாடல்

  அழகியசிங்கர்   பால்கனியிலிருந்து வேடிக்கைப் பார்ததுக் கொண்டிருந்தார் அழகியசிங்கர். தெருவில் தூரத்தில் ஜெகனும், மோகினியும் வந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களைப் பார்த்து கையை ஆட்டினார்.  அவர்களும். வீட்டிற்குள் வந்தவுடன் முதல் கேள்வி ஜெகனிடமிருந்து.  ýýஏன் நீங்கள் இப்போதெல்லாம் வெளியே வருவதில்லை.  அழ கியசிங்கர் :     அப்பாதான... மோஹினி :  இப்போது எப்படி இருக்கிறார்? அழகியசிங்கர் :  அப்படியேதான் இருக்கிறார்.  என்ன சில நாட்கள் இரவில் சத்தம் போட்டு கூப்பிடுவார்.  சில நாட்கள் அவர் இருப்பதே தெரியாது. ஜெகன் : கஷ்டம்தான். மோஹினி :  உங்களுக்கு வெளியே போக வேண்டிய அவசியம் இல்லை அல்லவா? அழகியசிங்கர் : ஆமாம்.  நான் வெளியூர் சென்று ஒரு வருடம கூட ஆகிவிடும் போல் தோன்றுகிறது.  எந்தக் கூட்டத்திற்கும் சென்றாலும் என்னால் 3 மணி நேரம 4 மணிநேரம் என்று இருக்க முடியாது. ஜெகன் :  எதிர்பாராதவிதமாக நடந்த புததகக் காட்சியைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? அழகியசிங்கர் ...

நூறு ருபாய்க்கு நான்கு ஆங்கில நாவல்கள்

அழகியசிங்கர்  ஒவ்வொரு புத்தகக் காட்சியின்போது  புத்தகம் விற்பதோடல்லாமல் புத்தகம் வாங்குவதும் என் வழக்கம்.   சிலர் கிண்டல் அடிப்பார்கள்.  üநீங்கள் புத்தகம் விற்பதை விட, வாங்குவதுதான் அதிகமாக இருக்கிறது,ý என்று.  இந்த முறை அடித்த ஜோக்.  எல்லோரையும் போட்டோ எடுப்பதற்காகவே புத்தகக் கடையைத் திறந்து வைத்திருப்பதாக. யுனிவர்சல் என்ற பெயரில் ஒரு கடை.  அங்கு ஆங்கிலப் புத்தகங்களை கூறு கட்டி விற்றுக் கொண்டிருந்தார்கள்.  ரூ.100 க்கு 4 ஆங்கிலப் புத்தகங்கள் எடுத்துக்கொள்ளலாம். எனக்கு ஆச்சரியம். கடைக்குள் புகுந்து தேடினேன்.  எனக்குப் பிடித்த 4 புத்தகங்களை அவசரம அவசரமாக எடுத்தேன்.  அதில் ஒன்று   KISS என்கிற   ED MCBAIN புத்தகம். எனக்குப் பிடித்த எழுத்தாளர் எட் மெக்பெயின்.  திரில்லர் கதைகளை எழுதும் வல்லவர். இவருடைய ஒரு கதையை உலக அளவில் பிரபலமான ஜப்பான் டைரக்டர் அகிரா குரசோவா ஹை அன்ட் லோ என்ற பெயரில் படம் எடுத்துள்ளார்.  அந்தப் படம் பார்த்ததிலிருந்து எட் மெக்பெயின் புத்தகங்களைப் பார்த்தால் உடனே வாங்கிவிடுவேன். இந்தப...

வரவே மாட்டார்கள்......

அழகியசிங்கர் எங்கள் வீட்டு வாசலில் உள்ள இளைஞர்கள் விளையாடிக்கொண்டே இருக்கிறார்கள்.   தினமும்.  எதாவது ஒரு விளையாட்டு.  என் வீட்டு வாசலில் அவர்கள் போடும் கூச்சல செவிப்பறையைப் பிளந்துவிடும்.  பெரும்பாலும் கிரிக்கெட் விளையாடுவார்கள்.  அல்லது பந்தை தூக்கிப் போட்டு விளையாடுவார்கள்.  கேட்டைத் திறந்து என் வீட்டிற்குள் நுழைந்து கலாட்டா செய்வார்கள்.   நான் பால்கனியிலிருந்து சத்தம் போடுவேன்.   ஒருமுறை வீட்டு வாசல் படிக்கட்டில் இருந்து ஸ்மார்ட் போனை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.  பத்து பேர்களாவது ஒரே விளையாட்டை ஸ்மார்ட் போனில் விளையாடி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள்.  ராத்திரி பத்து மணிக்கு மேல் இது மாதிரியான விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தார்கள்.  நான் வீட்டு வாசலில் இப்படி விளையாடக் கூடாது என்று சத்தம் போட்டேன்.   போய் விட்டார்கள்.இருபது வயதுக்கு மேல் உள்ள இந்த இளைஞர்கள் கல்லூரி படிப்பவர்களாக இருக்கிறார்கள்.  அல்லது படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்களாக இருக்கிறார்கள்.  இது மாதிரியான இளைஞர்கள் ஒரு ...

புத்தகக் காட்சி கற்றுத் தரும் பாடம்

அழகியசிங்கர் ஒவ்வொரு முறையும் சென்னைப் புத்தகக் காட்சி எனக்கு பாடம் கற்றுத் தர தவறுவதில்லை.  இந்த முறையும். என் நோக்கம் புத்தகங்களைப் பதிப்பித்து லாபம் சம்பாதிப்பது அல்ல.  அப்படியே அதுமாதிரியான நோக்கம் இருந்தாலும் அது நிறைவேறப் போவதுமில்லை. என்னை விட பல பேர்கள் இதில் கில்லாடியாக இருக்கிறார்கள். விருட்சம் வெளியீடாக நான் கொண்டு வருவது ஐம்பது அறுபது தலைப்புகளில் அடஙகிவிடும்.  அதில் பெரும்பாலும் கவிதைத் தொகுதிகள்.   கிட்டத்தட்ட 800 கடைகள் கொண்ட இந்தப் புத்தக ஸ்டால்களைப் பார்க்குமபோது ஆச்சரியமாக இருக்கிறது.   பல இடங்களை முழுதாகப் பார்க்க முடியவில்லை.  எல்லோரும் விதம் விதமாய் புத்தகங்களைக் கொண்டு வருகிறார்கள்.  என் மனம் துள்ளாமல் இல்லை.  நான் வெளியிட்டுள்ள கொஞ்சமாகக் கொண்டு வந்துள்ள புத்தகங்களை ஒரு டேபிள் முழுவதும் நிரப்பிவிட்டு மற்ற பதிப்பாளர்களின் புத்தகங்களையும் அடுக்கி வைத்துள்ளேன்.   புத்தகக் காட்சியைப் பொறுத்தவரை எனக்கு யார் யாரோ உதவி செய்திருக்கிறார்கள்.  இன்னும் உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.   முதன் ...

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து

அழகியசிங்கர்  2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு புத்தகக் காட்சியில் என்னுடைய ஸ்டாலில் ராம் காலனி என்ற என் சிறுகதைத் தொகுதியை  அசோகமித்திரன் வெளியிட அதை ஞானக்கூத்தன் பெற்றுக் கொள்கிறார்.  அன்று என் ஸ்டாலில் ஏகப்பட்ட கூட்டம்.  சா கந்தசாமி, நாஞ்சில்நாடன், மலர் மன்னன், க்ருஷாங்கினி, ஆர் ராஜகோபாலன், அம்ஷன்குமார் என்று பல இலக்கிய நண்பர்கள் வந்திருந்தார்கள்.  ஒரு பிரதியை என் மனைவியின் சகோதரி பெற்றுக்கொண்டார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து புத்தகக் காட்சியில் பெருந்தேவியின் புத்தக வெளியீட்டில் கலந்து கொள்ள பலரை அழைத்துள்ளேன்.   இன்று மாலை 6.30 மணிக்கு அழுக்கு சாக்ஸ் என்ற புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு ஸ்டால் 594-ல் நாம் திரும்பவும் சந்திக்கிறோம்.

இரண்டு சந்தன மாலைகள்

அழகியசிங்கர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் பதவி மூப்பு அடையும்போது என் அலுவலக நண்பர்கள் எனக்கு சந்தன மாலை அணிவித்தார்கள்.  அதை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.  ஒருமுறை  விசிறி சாமியாரைப் பார்க்க திருவண்ணாமலை போனபோது அவர் தங்கிருந்த வீட்டு வாசலில் உள்ள ஆணியில் ரோஜாப்பூ மாலைகளை தூர எறியாமல் மாட்டியிருந்தார்கள்.  ரோஜாப்பூ மாலைகள் நிறம் இழந்து கருத்த நிறத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.  ஏன் அதைத் தூக்கி எறியாமல் மாட்டியிருந்தார்கள் என்று யோசித்துக் கொண்டிருப்பேன்.  விசிறி சாமியார் ஒரு யோகி.  அதற்கு எதாவது காரணம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் சந்தன மாலை அப்படி அல்ல.  அதை எத்தனை ஆண்டுகளாக இருந்தாலும் பத்திரப்படுத்தி வைத்திருக்கலாம்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனக்கு அணிவித்த அந்த சந்தன மாலையை இன்னும் தூக்கி எறியாமல் வைத்திருக்கிறேன். இப்போது இன்னொரு சந்தன மாலை கிடைத்திருக்கிறது.  படிகம் என்ற நவீன கவிதைக்கான இதழ் நடத்தும் இலக்கியக் கூட்டத்தில்.  எனக்கு ஆச்சரியம்.  பெரும்பாலும் எந்த இலக்கியக் கூட்டங்களி...

அசோகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு

நான் இந்த மாதம் வரை 5 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன்.  ஐந்தாவது புத்தகம் அசோகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு.  232 பக்கங்கள் கொண்ட தொகுப்பு இது.  கதைகளும் கட்டுரைகளும் கலந்த தொகுப்பு.  இத் தொகுப்பைப் படிப்பவருக்கு  தெரியும்.  அசோகமித்திரன் எதை கதையாக எழுதியிருக்கிறார், கட்டுரையாக எழுதியிருக்கிறார் என்று.   ஒரு கூட்டத்தில் ஒரு எழுத்தாளர் அசோகமித்திரன் கதை ஒன்றைப் படித்துவிட்டு அது கதை அல்ல கட்டுரை என்று உரத்து சத்தம் போட்டு வாதம் செய்தார்.  அசோகமித்திரன் என்ன பதில் சொல்கிறார் என்றும் எதிர்பார்த்தார்.  உங்கள் பார்வையில் அப்படி பட்டால் நான் இனிமேல் ஒன்றும் செய்வதற்கில்லை என்று குறிப்பிட்டார். அசோகமித்தரன் போன்ற படைப்பாளிக்கு எது கதையாக வருகிறது, எது கட்டுரைகயாக வருகிறது என்பது நன்றாகவே தெரியும்.  நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் கன்னிமேரா லைப்ரரியில் பழைய பத்திரிகைகளின் இதழ்களைப் பார்க்க நேரிட்டது.  அப்போது ஒரு பெண் எழுத்தாளரின் கதையைப் படித்தேன்.  என்னால் படிக்கவே முடியவில்லை.  ஆனால் அவர் பின்னால் புகழ்...

வம்சி முதல் விருட்சம் வரை....

அழகியசிங்கர்  நேற்று சென்னைப் புத்தகக் காட்சி தொடங்கி விட்டது.  இம் முறை தீவுத் திடலில்.  கிட்டத்தட்ட மாலை 4 மணிக்குத்தான் சென்றேன்.  புத்தகக் கட்டுகளை எடுத்துக்கொண்டு என் ஸ்டாலில் கொண்டு போவதற்குள் படாதபாடு பட வேண்டியிருந்தது.  ஏனென்றால் என் ஸ்டால் இருக்கும் வரிசை ரொம்ப நீளமானது. அதில் கடைசீ. புத்தகம் வைக்க பெரிய மேஜைகளைத் தேட வேண்டியிருந்தது. ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக மிக நிதானமாகத்தான் எல்லாவற்றையும் வைக்க வேண்டியிருந்தது.  எனக்கு உதவி செய்யும் கிருபானந்தன் எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் மடமடவென்று புத்தகங்கள் எல்லாவற்றையும் அடுக்கி வைத்து விட்டார்.  நாங்கள் இருந்த பக்கத்தில் காற்றே இல்லை.   ஒரு பேனிலிருந்து வரும் காற்றை நம்பி ப்ளாஸ்டிக் நாற்காலியை நகர்த்த வேண்டியிருந்தது.  பில்  போட சரியான மேஜை கிடைக்கவில்லை. குப்குப்பென்று வியர்த்தது.  என்னால் நிற்கவே முடியவில்லை.  உட்கார்ந்தே இருக்க வேண்டுமென்று தோன்றியது.   நேற்று என்னை யாராவது பார்த்தால் பெரிய நோயில் அடிப்பட்டவன் போல் இருக்கிறான் என்று நினை...