Skip to main content

Posts

Showing posts from October, 2015

ஆயிரம் கூட்டம் நடத்திய அபூர்வ சிந்தாமணி

அழகியசிங்கர்     ஒரு சினிமாத் தலைப்பை இப்படி மாற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது.  கூட்டம் நடத்துவது எப்படி என்பது தெரியாமல்தான் நான் இதுவரை கூட்டம் நடத்தி இருக்கிறேன்.  எத்தனைக் கூட்டங்கள் என்று நினைக்கிறீர்கள்?  கிட்டத்தட்ட 100 கூட்டங்களுக்கு மேல் இருக்கும். பல நோட்டுப் புத்தகங்களில் யார் யார் வருகைப் புரிந்துள்ளார்கள் என்றெல்லாம் குறித்து வைத்திருக்கிறேன்.  நவீன விருட்சம் என்ற பத்திரிகையை 28 ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வரும்போது கூட்டத்தையும் நடத்திக்கொண்டு வந்தேன்.  பத்திரிகைக்கு ஆகும் செலவை விட கூட்டத்திற்கு ஆகும் செலவு மிக மிக குறைவாகவே ஆகும்.     கூட்டம் நடத்த என்னைப் புகுத்தியவர் என் நண்பர் ஒருவர்.  அவர் தயாரித்த ஒரு பொருளுக்கு விளம்பரம் தரும் நோக்கத்தில் என்னை இலக்கியக் கூட்டம் நடத்தத் தூண்டியவர்.  இரண்டு மூன்று கூட்டங்களுக்குப் பிறகு அவர் ஆதரவு எனக்குப் போய்விட்டது.  பின் நான் மட்டும் கூட்டம் நடத்தினேன்.  என் கூட்டம் தபால் கார்டு கூட்டம்.  தபால் கார்டில் எல்லோருக்கும் தகவல் அனுப்புவேன்.  அதைப்  பார்த்து பலர் கூட்டத்திற்கு வருவார்கள்.  ஆனால் கூட்டத்தில் பேசுவதற்

நவீனவிருட்சம்

நவீனவிருட்சம் 98வது இதழ் வெளிவந்து விட்டது.  வழக்கம்போல கதைகள், கவிதைகள், கட்டுரைகள், புத்தக மதிபபுரை எல்லாம். வழக்கம்போல இதழ் தாமதமாக வந்துள்ளது.  முதன் முதலாக விருட்சம் அட்டையில் ஒரு எழுத்தாளரின் புகைப்படத்தைப் பிரசுரம் செய்துள்ளேன்.  வருத்தமான சூழ்நிலையில்தான இதைச செய்யுமபடி நேரிட்டது.  படைப்பின் ரகசியம் என்ற தலைப்பில் ஞானக்கூத்தன் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.  இதழில் மூன்று சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.  அ மலைச்சாமி என்பவர் ஊமைக் கொலுசுகள் என்ற பெயரில் கதை எழுதி உள்ளார்.  ஜாதுஷ்டிரன் என்ற கவிஞர் யார் என்பது தெரியவில்லை.  அவருடைய கவிதைகளை எல்லாம் திரட்டி வெளியிட்டிருக்கிறேன்.  இன்னும் சில கவிஞர்களின் கவிதைகளை இப்படிப் பிரசுரம் செய்ய உத்தேசம்.  இரண்டு புத்தகங்களுக்கு விமர்சனம் வந்துள்ளன.        கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக நவீன விருட்சம் வெளிவந்து கொண்டிருக்கிறது.  அதிகப் பக்கங்கள் இல்லை எளிமையான பத்திரிகையாகத்தான் விருட்சம் வெளிவந்து கொண்டிருக்கிறது.  இனிமேலும் வரும்.  உங்களுடைய வாழ்த்துகள் தேவை.     வழக்கம் போல் நவீன விருட்சம் தனி இதழ் ரூ15.  ஆண்டுச் சந்தா ரூ.60.  பத்திரிகை யா

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 18

         தலைப்பு     ஊடகக்  கலாச்சாரம்        பேசுவோர்     கடற்கரய் மத்தவிலாச அங்கதம்             இடம் :         அலமேலு கல்யாண மண்டபம                          அகஸ்தியர் கோயில் பின்புறம்                          19 ராதாகிருஷ்ணன் தெரு                         தி நகர், சென்னை 600 017     தேதி        31.10.2015 (சனிக்கிழமை)                நேரம்         மாலை  6 மணிக்கு     பேசுவோர் குறிப்பு : பல ஆண்டுகளாக அச்சு ஊடகத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருபவர்.  தீவிர வாசிப்பு, ஆக்கப்பூர்வமான உரையாடல் என இயங்கி வருபவர்.  சிறுபத்திரிகை சூழலோடு நெருக்கமான உறவுக் கொண்டிருப்பவர்.  கவிஞர், கட்டுரையாளர். அனைவரும் வருக, அன்புடன் அழகியசிங்கர் - ஆடிட்டர் கோவிந்தராஜன்   

ஒரு நினைவு - ஒரு திரைப்படம்

பிரபு மயிலாடுதுறை எனது இளம் பிராயத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி மனதில் ஓர் ஆழமான ஞாபகமாக பதிவாகி உள்ளது. அவ்வனுபவத்தின் கூறுகளாக ஒரு திரைப்படமும் நானும் எனது தந்தையும் உள்ளோம். அது நிகழ்ந்த போது, எனக்கு ஐந்து வயது. பள்ளி விடுமுறையாயிருந்த ஒரு சனிக்கிழமையில், எனது தந்தை என்னை சைக்கிளில் முன்னால் அமர வைத்து அழைத்துச் சென்றார். அன்றைய பகலின் வெளிச்சம் கூட தெளிவாக இன்னும் நினைவில் இருக்கிறது. வாகனம் ஒரு திரையரங்குக்கு சென்றது. அது நாள் வரை, மாலை நேரத்தில் திரைப்படம் பார்க்க பெற்றோருடன் அல்லது உறவினர்களுடன் அரங்குக்கு சென்றிருந்த எனக்கு தந்தையும் நானும் மட்டும் படம் பார்க்கச் சென்றது நூதனமாக இருந்தது. பெரிய தாழ்வாரங்கள்,சிறு திறப்பு கொண்ட டிக்கெட் கொடுக்குமிடம், பெரும் உயரம் வரை பொருத்தப்பட்டிருக்கும் சிமெண்ட் ஜாலிகள், சுருண்டிருக்கும் சோள உருண்டைகள், டிக்கெட் கிழித்து உள்ளே அனுப்பும் பணியாளர்கள் மற்றும் நீண்ட வரிசையில் நிற்கும் சைக்கிள்கள் ஆகிய திரையரங்கின் காட்சிகள் மீது திரைப்படம் போலவே ஈர்ப்பு இருந்தது. அங்கே நிறைய பேர் இருந்தனர். இருக்கையில் அமர்ந்ததும் எனது தந்தை

மறதியின் பயன்கள்

    ஞானக்கூத்தன்      பல ஆண்கள் தங்கள் திருமண நாளை இக்காலத்தில் கொண்டாடுகிறார்கள். கொண்டாடுவது என்றால் மனைவிக்குப் புதிய புடவை வாங்கித் தருவது, முடிந்தால் கால் பவுன் அரைப் பவுனில் தங்க நகை வாங்கித் தருவது, காலையில் கோவிலுக்குப் போவது, இல்லையென்றால் மாலையில் போவது. இவற்றில் எது சாத்தியப்படுகிறதோ இல்லையோ, இரவு உணவை ஹோட்டலில் வைத்துக்கொள்வது. இப்படித் திருமண நாள் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் திருமண நாளைப் பெண்கள்தான் நினைவில் வைத்திருப்பார்கள். ஆண்கள் முற்றிலும் மறந்துபோய்விடுவார்கள். அப்படியே நினைவிருந்தாலும் தேதியும், மாதமும் நினைவில் இருக்குமே தவிர கல்யாணமான வருஷம் நினைவில் இராது. எத்தனையாவது வருஷம் என்று தெரியவந்தால் அவர்களுக்கு அதிசயமாகவும் அதிர்ச்சியாகவும்கூட இருக்கும்.    பாரதியாரால் தனது கல்யாணத் தேதி, வருஷம் முதலானவற்றைச் சரியாக நினைவுபடுத்திக்கொள்ள முடிந்ததா என்றால் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. பாரதியின் வரலாற்றை எழுதிய வ. ராமஸ்வாமியால் பாரதியின் திருமணத்தைப் பற்றி, அவருக்கு என்ன வயது இருக்கும் என்பது பற்றி எதுவும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.    கல்யாண

வெங்கட் சாமிநாதனைப் பற்றி சில தகவல்கள்......

அழகியசிங்கர்  சமீபத்தில் நான் பங்களுர் சென்றேன்.  கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கழித்து. என் உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லை என்றுதான் சென்றேன்.  எப்போதும் நான் பங்களூர் செல்லும்போதெல்லாம் எழுத்தாளர்கள் சிலரை சந்திக்காமல் இருக்க மாட்டேன்.  அப்படிச் சந்திக்காமல் இருந்து விட்டால் பங்களூர் என்னை ரொம்பவும் தனிமைப் படுத்தி விடுவதாக தோன்றும். மல்லேஸ்வரத்தில் உள்ள என் உறவினர் வீடு ரொம்ப பிரமாதமான இடம். ஆனால் நான் விரும்புகிற மாதிரி பேசுகிற நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.  சென்னையில் நான் இருந்தேன் என்றால் எதாவது பேசிக்கொண்டிருப்பேன்.  எழுதிக் கொண்டிருப்பேன்.  ஆனால் பங்களூரில் அதுமாதிரி முடியாது.  வெயிலை அதிகமாகக் காண முடியாத அந்த இடமும் என்னை வெறுப்படைய வைத்துவிடும். நான் மதிக்கும வெங்கட் சாமிநாதன் சென்னையிலிருந்து பங்களூர் சென்று விட்டார்.  அவர் மனைவி இறந்த பிறகு.  அவருடைய ஒரே பையன் வீட்டில்தான் அவர் வசித்து வந்தார்.  இந்த முறை பங்களூர் வந்தபோது அவரைக் கட்டாயம் பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். அதுதான் கடைசி முறையாக அவரைப் பார்க்கிறேன் என்பது எனக்கு இப்போதுதான் தெ

கிராமீயப் பாடல்கள்

        1. பிள்ளையார் பிறந்தார்                             வடக்கே தெற்கே ஓட்டி         வலது புறம் மூரி வச்சு         மூரி ஒழவிலே         முச்சாணி புழுதி பண்ணி         சப்பாணி பிள்ளையார்க்கு         என்ன என்ன ஒப்பதமாம்.         முசிறி உழவிலே         மொளச்சாராம் பிள்ளையாரு         ஒடு முத்தும் தேங்காயை         ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு         குலை நிறைஞ்ச வாழைப்பழம்         கொடுக்கறமாம் பிள்ளையாரக்கு         இத்தனையும் ஒப்பதமாம்         எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு குறிப்பு : பிள்ளையார் பிறப்பில் அவருடைய தாய் தந்தையார்கள்  யார் என்று சொல்லப்படவில்லை.  விநாயகர் சிவ குமாரனென்றோ, உமையாள் மகனென்றோ அழைக்கப்படவில்லை.  உழவன் உழும்போது புழுதியிலிருந்து தோன்றுகிறார் பிள்ளையார். சேகரித்தவர் :  கவிஞர் சடையப்பன்                  இடம் : சேலம் மாவட்டம்                    

பத்து கேள்விகள் பத்து பதில்கள்

பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில்  படைப்பாளிகளைப் பேட்டி எடுத்து என்னுடைய இணையதளத்திலும் முகநூலிலும் கொண்டு வருகிறேன்.     முதல் பேட்டி அசோகமித்தரனை வைத்து எடுத்தது.  அடுத்தது எஸ் வைதீஸ்வரனின் பேட்டியை வெளியிட்டேன்.      மூன்றாவதாக சாருநிவேதிதாவைப் பேட்டி எடுத்துள்ளேன்.      சமீபத்தில் சாருநிவேதிதாவின் இரண்டு நாவல்களைப் பார்த்து அசந்துவிட்டேன்.  ஒரு நாவல் ராஸ லீலா, இன்னொரு நாவல் புதிய எக்ûஸல்.  புதிய எக்ûஸல் நாவலை இப்போதுதான் படிக்கத் தொடங்கி உள்ளேன்.  867 பக்கங்கள் கொண்ட நாவல் இது.  எனக்குப் படித்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகுமென்பது தெரியாது.  ஏற்கனவே அவருடைய புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.  படித்து முடித்தப்பின் என் கருத்துகளை வெளியிடுவேன். எழுத்தாளர் சாருநிவேதிதா

புத்தக விமர்சனம் 11

அழகியசிங்கர்       துளசிங்கப் பெருமாள் கோயில் வழியாக நான் டூ வீலரில் போய்க் கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு வீட்டின் முன் வாசலில் மின்சார விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.  கொஞ்சம் நின்று பார்த்தேன். அது பாரதியார் நினைவு இல்லம்.  எனக்கு உடனே புரிந்தது.  செப்டம்பர் 11 ஆம் தேதி பாரதியார் நினைவு தினம்.  அதைக் கொண்டாட விளக்கு வெளிச்சம் ஒளிர்ந்து கொண்டிருந்தது.     நான் அன்று ஞானக்கூத்தன் வீட்டிற்குத்தான் போய்க் கொண்டிருந்தேன்.  அவர் சொன்ன ஒரு தகவல் எனக்கு சற்று திகைப்பாக இருந்தது.  கோவில் யானை என்ற தலைப்பில் அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.  அவர் என்னிடம் என்ன சொன்னார் என்றால் பார்த்தசாரதி கோயில் யானை பாரதியாரை ஒன்றும் செய்யவிலலை என்று.  பாரதியார் கோவில் யானை என்ற பெயரில் ஒரு நாடகம் எழுதியிருக்கிறார்,  அந்த நாடகத்தில் வஜ்ரி என்ற அரசக் குமாரனைத்தான் காளி கோயிலில் உள்ள யானை துதிக்கையால் தள்ளி விட்டது.  அதைத்தான் பாரதியாருக்கு ஏற்பட்டதாக எல்லோரும் கதை விட்டிருக்கிறார்கள் என்கிற மாதிரி சொன்னார்.       இது குறித்து அவர் ஒரு கட்டுரையும் எழுதி இருக்கிறார்.  என்னால் இதை நம்ப முடியவில்லை. 

வேறொரு கோணத்தில்.......

      அழகியசிங்கர்     செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி உலக இதய நாள்.  பல மருத்துவர்கள், பல மருத்துவ மனைகள் பலவித அறிவுரைகள்.  ஒருவர் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று படித்தால் சற்று பயம்தான் வரும்.     ஆனாலும் இதயத்தைக் காப்பது அவசியமான ஒன்றாகத்தான் இருக்கிறது.  நோய் என்று வந்துவிட்டால் அதை எதிர்த்துப் போராட முடியுமா?  அல்லது பணிந்துதான் போய் விட வேண்டுமா? தெரியவில்லை.       ஆரம்பத்தில் நான் வங்கியில் சேர்ந்தபோது எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.  துள்ளும் உடலுடன் கூடிய துள்ளும் மனது.  பரபரவென்று  இருந்தேன். வங்கியிலும் சாதாரண வேலை.  பெரிய பொறுப்பெல்லாம் கிடையாது.  வங்கியும் ஆரம்பத்தில் என்னை பயமுறுத்தவில்லை.  வீடு பக்கத்தில் அலுவலகம்.  காலை பத்துமணிக்குச் சென்றால் மாலை ஓடி வந்து விடலாம்.  பத்து மணி அலுவலகத்திற்கு 9 மணிக்குக் கிளம்பினால் போதும்.  அலுவலகம் போவது ஒரு பிக்னிக் போவதுபோல் ஜாலியாக இருந்தது.     ஆனால் போக போக ஒரே மாதிரியான வேலை போர் அடித்தது.  இன்னும் கொஞ்சம் மேலே போக வேண்டுமென்று தோன்றியது.  வங்கியில் சட்ட திட்டங்கள் மாறின.  கிளார்க் இருந்தாலும் தொடர்ந்த

மனோரமா என்கிற மகத்தான நடிகை

... அழகியசிங்கர்         சனிக்கிழமை இரவு மனோரமா என்ற நடிகை இறந்த செய்தி கேள்விப்பட்டேன்.  அது முதல் மனோரமா என்ற நடிகையைப் பற்றி யோஜனை செய்து கொண்டு வருகிறேன்.  உலக அளவில் இவ்வளவு அதிகமான படங்களில் நடித்த நடிகை யாராவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.  தன் நடிப்பாற்றலால் எல்லார் மனதையும் கவர்ந்தவர் நடிகை மனோரமா.       ஒரு காலத்தில் தமிழ்ச் சினிமாவின் பெரும் பகுதியை மனோரமாவும் நாகேஷ÷ம் தங்களுடைய நடிப்பாற்றலால் கலகலக்க வைத்தவர்கள்.  தமிழ் சினிமாவில் ஒரு நடிகரோ நடிகையோ நீண்ட ஆண்டுகள் நடித்துக் கொண்டிருப்பது திறமை மட்டும் இருந்தால்தான் முடியும்.  அதுவும் ஆபாசம் எதுவும் இல்லாமல் நகைச்சுவைக்காகவும் குணச்சித்திர நடிப்புக்காகவும் பெயர் பெற்றவர் நடிகை மனோரமா.     பொதுவாக ஒரு நடிகை நடித்துக்கொண்டிருக்கும் போது அந்த நடிகையை அப்புறப்படுத்த வேற சில நடிகைகளும் முன் வருவார்கள்.  மனோரமாவுக்கு மாற்றாக இன்னும் சில நகைச்சுவை நடிகைகள் தோன்றாமல் இல்லை.  ஆனால் மனோரமாவை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.     எல்லா நடிகர்களின் அன்புக்கும் பாத்திரமானவர் அவர்.  நாகேஷ் போன்ற நடிகருடன் போட்டிப் போட்டுக

கோயிலுக்குள் ஒரு யானை

September 6, 2015 ~ ஞானக்கூத்தன் படைப்புகள்     ‘மாஸ்கோ நகரம் மிகவும் நேசித்த எழுத்தாளரான ஆண்டன் செகாவின் சவப்பெட்டி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பச்சை நிறத்தில் இருந்த அந்த ரயில் பெட்டியின் கதவில் பெரிய எழுத்துகளில் ‘ஆயிஸ்டர்களுக்காக’ என்று எழுதியிருந்தது. ரயில் நிலையத்தில் காத்திருந்த கூட்டம் சவப்பெட்டியைத் தொடர்ந்து சென்றது. அப்போது இறுதி மரியாதைக்கான ராணுவ இசை முழங்கிற்று. செகாவுக்கு ராணுவ மரியாதையா என்று கூட்டம் வியப்படைந்தது. ஆனால் அவர்கள் தொடர்ந்து சென்ற ராணுவ அதிகாரியின் சவப்பெட்டி மஞ்சூரியாவிலிருந்து வந்தது. விஷயம் தெரிந்ததும் செகாவின் இறுதி மரியாதைக்கான கூட்டம் சிரித்தது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் மேல் இராது’ – இப்படி எழுதியிருக்கிறார் செகாவின் சமகால எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி. செகாவின் இறுதி ஊர்வலத்தில் நேரில் கலந்துகொண்ட கார்க்கி அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை நூறுக்கு மேல் இல்லை என்றார். ஆனால் அவரே தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் அந்தக் கூட்டத்தில் கலந்து

கசடதபற ஜøலை 1971 - 10வது இதழ்

தெலியலேது ராமா - ஜ ர துஷ்டிரன் 'ப்ராங்க்ளின் கொட்டைப்ராந்து முத்துச்சாமி செத்த எலி' செல்லப்பா சொல்லி விட்டார் நாப்பா போட்டு விட்டார் IDENTITY CRISIS ALIENATION FEELING 'இழப்பில்' இதுவெல்லாம் எங்கேயும் இல்லையாம் செல்லப்பா சொல்லிவிட்டார் நாப்பா போட்டுட்டார். தமிழ்நாட்டில் தமிழ்க் குலத்தில் தமிழ்ச் சரித்திர வரலாற்றில் சோகத்துக்கிடமில்லை - இதயச்  சோரத்துக் கிடமில்லை ஸந்தோஷம் ஸல்லாபம் ஸம்போகம் தார் மீகம் சத்தான சொல்லடுக்கு தமிழ்க் கதைக்கு மிக மிடுக்கு செல்லப்பா சொல்லிட்டார் நாப்பா போட்டுட்டார் இனி - ஆறடி உயரம் அழகான பெண்மைமுகம் (மேற்கொண்டு வர்ணனைக்கு நாப்பாவைக் கேளுங்கள்) சத்தான கருத்துக்கள் நாயகன் அவிழ்த்துவிட ஐந்தடி உயரம் ஐந்தடி கூந்தல் திரண்ட தமிழறிவும் தியாகேசர் கீர்த்தனையும் தெரிந்த நல்நாயகி திடீரென வந்து நிம்போமேனியாவில் நாயகனைக் காதலுற்று லக்ஷணமாய் குண்டு குண்டாய்ச் சித்திரங்கள் போட்டு ட்ராஜடியாய் காமடியாய் ட்ராஜிக் காமெடியாய் (தெலியலேது ராமா தமிழ் நாவல் மார்க்கம

புத்தக விமர்சனம் 10

                  அழகியசிங்கர்     சமீபத்தில் நான் படித்தப் புத்தகம் தேவன், மனிதன், லூசிஃபர். 224 பக்கங்கள்  கொண்ட இந்த நாவலை எழுதியவர் சைலபதி.  இந்த நாவலைப் படித்து முடித்தப்பின் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.  நான் அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போது இரா முருகன் என்ற எழுத்தாளர் நான் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டுவிட்டார்.  அவருடைய முகநூலில்.  வெகு நாட்கள் கழித்து ஒரு கிருத்துவ நாவலை இப்போதுதான் படிக்கிறேன்.  அதை அலுப்பில்லûôமல் எழுதி இருக்கும் சைலபதிக்கு வாழ்த்துகள்.  பொதுவாக கிருத்துவ சமுதாயத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள், கிருத்துவ மதச் சம்பந்தமாக எழுதுவதில்லை.      இந் நாவலில் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் கிருத்துவ மதத்துக்கு மாறுவதாக விவரிக்கிறார். ஆனால் உண்மையில் பிராமண வகுப்பைச் சார்ந்தவர்கள் கிருத்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு அதில் மாறுவது என்பது மிகக் குறைவான எண்ணிக்கைக் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.  பொதுவாக தலித்துகள்தான் வறுமையின் பொருட்டு கிருத்துவ மதத்திற்கு மாறுவது சகஜம்.  கிருத்துவமதத்தைச் சார்ந்தவர்கள்தான் இப்படி மதத்தை பிரச்சாரம் செய்து மற்ற மதத்தை