அழகியசிங்கர் விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 16வது கூட்டம் நேற்று நடந்தது. இரண்டு முக்கிய ஆவணப்படங்களை நேற்று ஒளி பரப்பினோம். ஒரு படம் அசோகமித்திரன் அவர்களிள் ஆவணப் படம். இன்னொன்று ஞானக்கூத்தன் படம். அசோகமித்ரன் அவணப்படத்தை கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன் அம்ஷன்குமார் இயற்றி உள்ளார். இக் கூட்டம் டிஸ்கவரி புத்தக பேலஸில் நடந்தது. அசோகமித்திரன் பிறந்தநாள் கொண்டாட்டமாக அவர் கேக் வெட்டினார். பின் அம்ஷன்குமார் அவர் ஆவணப்படத்தைத் தயாரித்த விதத்தைப் பற்றி தன் அனுபவங்களைளப் பகர்ந்து கொண்டார். இந்த ஆவணப்படத்தைத் தயாரிப்பதற்காக அசோகமித்திரன் வாழ்ந்த இடமான ஹைதராபாத்திற்கே சென்று எடுத்திருக்கிறார். அவர் ஆவணப்படத்தைப் பார்க்கும்போது அது ஒரு கதைபோல் எடுக்கப்பட்டிருந்தது. அம்ஷன் குமார் குறிப்பிட்டார். ஒரு ஆவணப்படத்தை எடுக்கும்போது அந்தப் படத்தின் முக்கிய நாயகரான அசோகமித்திரன் இருப்பது ஆவணப்படத்திற்கு அதிக வலு சேர்க்கும் என்று. அவரைப் பொறுத்தவரை இது எட்டாவது படம் என்றார். 30 நிமிடங்கள் போனதே தெரியாமல் சுவாரஸியமான படமாக அது இருந்தது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு