Skip to main content

கமலாவும் நீலாவும்....

 


கந்தாச்ரமத்தில் கமலா என்ற பெண் நாய் இருந்தது.  அது குட்டியாக ஆச்ரமத்திற்கு வந்தபோது அங்கிருந்தவர்கள் அதை வெளியே துரத்தினார்கள்.  அது பெண்ணாக இருந்ததினால் ஒவ்வொரு வருடமும் குட்டிகள் போடும் என்று நிடனைத்து அவ்வாறு செய்தனர்  ஆனாலும் குட்டி கமலா அவர்கள்  திட்டியதையெல்லாம் பொறுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டுச் செல்லாமல் இருந்து விட்டது.  இறுதியில் ஆச்ரமவாசிகள் அவளுடைய உறுதிக்கு மதிப்புக் கொடுத்தனர்.  கமலா ஆச்ரமத்திலேயே வளர்ந்து ஒவ்வொரு வருடமும் குட்டிகளை ஈன்றது.  அவளுடைய குட்டடிகளே சந்தாச்ரமத்தில் ஒரு பெரிய குடும்பமாக விளங்கியது.

மனிதர்களுக்குக் குழந்தை பிறந்தால் எவ்வாறு பத்தாம்நாள்தொட்டிலிடும் சடங்கு நடக்குமோ, அதுபோல கமலா முதன்முறையாக குட்டிகள் ஈன்றபின் அக்குட்டிகளுக்கும் கமலாவுக்கும் பொட்டிட்டு, மாலை சூட்டி அங்கிருந்த அன்பர்கள் மகிழ்ந்தனர்  அன்று பாயசம் மற்றும் இனிப்புகளுடன் ஒரு பெரிய விருந்து நடந்தது.

புதிய அன்பர்கள் முதல் முறையாக கிரிபிரதடசிணம் செய்ய விரும்பினால் பகவான் கமலாவை அழைத்து "அவர்களுக்கு வழிகாட்டி அழைத்து வா" என்று ஆணையிட அதுவும் அவ்வாறே செய்யும்.

நீலா என்ற பெண் நாய் ஒன்று பகவானுக்கு அருகில் எப்போதும் இருந்து அவர் மடியில் அவ்வப்போது அமர்வது வழக்கம்.  வேறு எந்த நாயும் கந்தாச்ரமத்திற்குள் வர அவள் அனுமதிக்க மாட்டாள்.  ஏன், தன் தாயைக் கூட கந்தாச்ரமத்திற்குள் நுழைய விடாமல் விரட்டிவிடுவாள்.  அது நாயாக தப்பிப் பிறந்திருக்கிறது என்று நாயனா கூறுவது வழக்கம்.

நாய்கள் பகவானுடன் நீண்ட நாட்கள் தங்கியிருந்து உயிர்தரிக்காது.  மேலும் பகவானுக்கருகில் எந்தப் பிராணி வந்தாலும் அதற்கு மறு பிறப்பில்லை என்று நாயனா கூறுவதுண்டு  எனவே அவர்
அவைகளை விரட்டிவிடுவார்.

பகவான் அருணாசல மலையில் வசிக்கத் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து நாய்கள் அவர்களுடைய உற்ற தோழனாக இருந்து அவருடைய ஆச்ரம் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்தன.  ஒவ்வொரு நாயின் வம்சாவளியைப் பற்றி அவர் நன்கு அறிவார்.  புதிதாக யாராவது வந்தால் அவரிடம், "இந்தக் கமலாதான் முதலில் வந்த பெண்மணி.  அந்த நீலாவும் ஜாக்கியும் அவளுடைய குழந்தைகள்.  ரோசும் மற்ற இந்தப் பயல்களும் அவளுடைய பேரப்பிள்ளைகள்," என்பார்.  கந்தாச்ரமத்தில் கமலா இறக்கப் போகும் தறுவாயில்,  "ஏண்டா பசங்களா...உங்கள் பாட்டியைப் போய்ப் பாருங்கள்.  உங்களை விட்டு சீக்கிரம் அவள் போகப்போறிளர்" என்றார்.  பின்னர் கமலா இறந்தபிறகு எப்படி மனிதர்களைத் துக்கம் விசார்பாரோ அதுபோலவே குட்டிகளிடத்தில் சென்று, "ரோஸ், பாவம். நீ உன்னுடைய பாடடி கமலாவை இழந்து விட்டாயா" என்பார
 (சரிதமும் உபதேசமும் பாகம் 1ல் இருந்து எடுத்தது)

Comments