அல்லது
அல்லாடிப் பறந்து
தன்மீதே
குழந்தையின் கிறுக்கெழுத்தில்
நல்ல நீல நிற மசியினில்
எழுதப்பட்டிருந்த
அந்த சில வரிகளைக் கொண்டு
அது யாரைத்தேடுகின்றது?
மிதந்து நடனமாட
தென்றலையா?
யாராவது படித்து
"ஆஹா" போடுவதற்கா?
எழுதிய குழந்தை வந்து
மீதத்தை எழுதி முடிக்கவா?
நானறியேன்-
எடுத்து
என் காலணியிலிருந்த
அழுக்குத்துளியைத்
துடைத்தெறிந்தேன்-
Comments