29.6.10

இலா கவிதைகள் 6


1.
தாலாட்டு


கீழிருந்து மேல் செல்லும் மழையில்

கண்ணாடி அறைக்குள் கண் சுருக்கி

எறும்பின் சிறுநடையில்

சிலபொழுது செலிடாகி

வினாடிகளைக் கோபித்து

வேனிலை விரட்டும்படி செய்து

பனிப்பாறை மீதேறி அமர்கையில்

பவளங்கள் முத்துக்கள்

முக்கனிகள் முன்வைத்து

பால் பொங்கப் பசி நிறைக்க

தாலாட்டில் சாய்ந்து

மீளாமல் போனேன்


2.
கண்ணாடிச் சாலை


கண்ணாடிச் சாலையில்

நடக்க வேண்டியதாயிற்று


தவிர்த்து

தள்ளிவைத்து

காற்றாக மட்டுமே

பயண முடிவு

ஓரடி வைத்தேன்

காலடியில்

கும்மிருட்டு


3.
பயணம்


குழந்தைகள் ஆரவாரம்

புதியவர்களின் வரவு

கண்ணசைவில் கவனிப்பு

வேளைக்கு உணவு

உயிர் காக்கும் தவிப்பின்றி

நீரலையில் பயணம்


கண்ணாடியில் மோதிக்கொண்டே

இருக்கிறேன்

கடல் சென்று சேர்வதற்கு


4.
மானும் புலியும்


வரிக்குதிரையின் கோடுகளில்

வரிசையாய்க் குருவிகள்

சுவற்றில் சாய்த்து வைத்திருந்த

வீணையின் கம்பிகள் மீதேறி

பரணைக்குச் செல்லும் எறும்புகள்

மூடாமல் இருந்த கிணற்றுக்குள்

எட்டிப் பார்த்தபடி கொக்கு

கரையேறும் யானைக் கூட்டம்

கால் நீட்டிக் கதை பேசின

அங்கு வந்த மானும் புலியும்


5.

பூஜ்ஜிய வட்டம்


ஒளிவட்டத்தின் உட்குழியில்

நின்று கொண்டிருக்க

நேற்று நடக்கப் போவதையும்

நாளை நடந்ததையும்

ஒத்துப் பார்க்கும்

நாழிகை கடந்த போதும்

கணக்குப் புத்தகத்தை

கைவிட முடியாமல்

திரும்பவும் பூஜ்ஜிய

வட்டத்திற்குள்

வந்து விழுந்தேன்


6.


மேற்குச் சூரியன்


உத்திரத்திலிருந்து தொங்கும்

பொம்மை விமானமேறி

உலகெங்கிலும் பவனிவர

ஆழ்கடலின் மீன்குரல்

கேட்டு பனிமலை மீதிறங்கி

கழுகிடம் இறக்கைகள்

இரவல் வாங்கி

விடியாத இரவிடம்

கோபித்து கொள்கையில்

மேற்குச் சூரியன்

தெரியத் தொடங்கியது.


26.6.10

மொழிபெயர்ப்புக் கவிதை

மொழிபெயர்ப்புக் கவிதை
மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து
என்னிடம் கூறப்பட்டதைப்போலவே - அதிகாலையில்
மகனின் வாகனத்திலேறி அதிக தொலைவு பயணித்து
நகரமொன்றின் தெருவோர மரநிழலில் வாகனத்தை நிறுத்தியவேளை
மூச்சுத் திணறியபோதும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை நான்
நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே
உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென
நின்றேனிங்கு முன்பொரு இரவில் - அதிசயம்தான்
மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது
உனைப் பெற்றெடுத்த நாள்முதலாய்
இணையற்ற அன்பைப் பொழிந்தவளிடம்
போய்வருகிறேன் என்றேனும் பகராமல் நீ செல்கையில்
உள்ளம் பொங்கி வழிகிறது விழிகளினுடாக
கைக்குள் திணித்துச் சென்ற ஆயிரம் ரூபாய் நோட்டு பெரும் சுமையாகிட
உள்ளத்தின் உறுதியைக் கண்களில் திரட்டுகிறேன்
பதற்றமேதுமின்றி வாகனத்தை ஓட்டிக்கொண்டு
பத்திரமாக வீடுபோய்ச் சேர்ந்திடுவாய் என் மகனே


மூலம் - மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல

24.6.10

60+இன் புலம்பல்

2010ல்

ம். என்ன இது! கத்திரிக்காய் கிலோ ரூ.50; அரிசி 35/-; தங்கம் பவுண் 13000. இப்படி விலைவாசி இருந்தால் எப்படி? மாதம் 10000 வருமானம் வந்தால்கூட குடும்பம் நடத்துவது சிரமமாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் பிள்ளைகளோ பெற்றோரை மதிப்பது கூட இல்லை. வீட்டிலே உக்காந்து ‘நாக்கு முக்க’, என்று கூப்பாடு போடுகிறான். என்னடா என்றால், சினிமாப் பாட்டு என்கிறான். இப்படி ஒரு பாட்டு! இப்போ வருகிற பாடல்கள் எல்லாம்... ம்.. என்ன சொல்ல! 2 பேர் கள்ளக்கடத்தல் செய்கிறான். தாதாவாக இருக்கிறான். அதில் ஒருவன் கதாநாயகன்; மற்றவன் வில்லன் என்கிறான். என்னடா படம் இது, இரண்டு பேரும் அயோக்கியன்தானே என்று சொன்னால், அதெப்படி?! நடிப்பதில் ஒருவன் ஹீரோ, அதனால் அவன் நல்லவன் என்கிறான். மொத்தத்தில் எல்லாமே சுத்த மோசம்! எங்கள் காலத்தில் எல்லாம் இப்படியா? பாரதிராஜா, பாக்கியராஜ், இளையராஜா, எவ்வளவு அற்புதமானவர்கள்!! ம்.. அது ஒரு பொற்காலம் சார்!!!

X---X---X

1985ல்

மாதம் ரூ.1000 வருமானம் வந்தும் குடும்ப பட்ஜெட் உதைக்கிறது. கத்தரிக்காய் கிலோ 5ரூபாய்; அரிசி கிலோ 10/- தங்கம் பவுண் Rs.800. இந்த விலை விற்றால் எப்படி குடும்பம் நடத்துவது? பயல்களை கண்டிக்க முடிவதில்லை. ‘ஓரம்போ!!’ என்று கத்துகிறான். என்னடா என்றால், அருமையான சினிமாப் பாட்டு என்கிறான். தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருக்கிறது. இப்போல்லாம் சினிமாவா எடுக்கிறான்? படம் பார்ப்பவர்கள் காதில் பூ சுற்றுகிறான். ஒரே டைரக்டர் 2 படம் எடுக்கிறான். ஒரு படத்தில் கதாநாயகியை தாலியை கழற்றிவிட்டு காதலனுடன் போகும்படி செய்கிறான். இன்னொரு படத்தில், தாலியைக் கழற்றும் தைரியம் உனக்கு இருக்கிறதா? கணவன்தான் முக்கியம்; காதலன் அல்ல, என்று அட்வைஸ் செய்கிறான். ஒரே கூத்து! எங்கள் காலத்தில் இப்படியா? ஒரு பாசமலர் போதுமே. காலகாலத்துக்கு பதில் சொல்லுமே! எவ்வளவு அருமையான சினிமா! எவ்வளவு அருமையான பாட்டு. ம்.. அது ஒரு பொற்காலம் சார்!!!

X---X---X


1965ல்

முதலாளி எவ்வளவோ நல்லவர். மாதம் 150 சுளையாகத் தருகிறார். இருந்தும் என்ன பிரயோஜனம். மனைவிக்கும் சிக்கனத்துக்கும் சம்பந்தமே இல்லை. இந்தப் பணம் போதவில்லையாம். அரிசி படி 2 ரூபாய் ஆகிவிட்டதாம். கிலோ 10 பைசா விற்ற காய்கறி எல்லாம் 60 பைசா, 70 பைசாவாக விற்கிறதாம். தங்கம் பவுண் ரூ.100 ஆகிவிட்டதாம். எப்படி கட்டுபடியாகும் என்கிறாள். பிள்ளைகளோ, MGR, சிவாஜி படம் என்று வாரம் தவறாமல் படம் பார்க்கிறார்கள். தலைக்கு 40 பைசா சினிமா செலவு எவ்வளவு ஆகிறது? கேட்டால் ‘இலந்தப் பழம்’ என்கிறார்கள். சீசன் இல்லாத நேரத்தில் இலந்தப் பழம் ஏது என்று கேட்டால், அப்பா, அது சினிமாப் பாட்டு என்கிறான். எல்லாமே இரவல் பாட்டு. ஒருவன் வாயசைக்கிறான். ஒருவன் பாடுகிறான். கேட்டால் பின்னனிப் பாடல் என்கிறான். இந்தப் பயல் சொல்கிறான் என்று சமீபத்தில் வந்த ஒரு படம் பார்த்தேன். சகிக்கவில்லை. அண்ணன், தங்கை பாசமாம். தங்கைக்கு திருமணம் ஆனபின்னும் கணவன் வீட்டுக்கு அனுப்ப மாட்டானாம். வீட்டோடு மாப்பிள்ளையாம். சரி, அப்படி மாப்பிள்ளை மட்டும் இருந்தாலும் பரவாயில்லை. மாப்பிள்ளை வீட்டார் ஒரு கும்பலே வருகிறது. பகை வருகிறது. கதாநாயகன் தங்கையை அவர்கள் வீட்டுக்கு அனுப்பினால், தன்னுடைய மானம் போய்விடும் என்று கூப்பாடு போடுகிறான். அவர்களோ, அப்படியானால் நீ வெளியே போ என்று சொல்கிறார்கள். சரி என்று உடனே வெளியே போய் விடுகிறான். இப்போது மட்டும் மானம் போகவில்லையா? கேட்டால் அவன் கதாநாயகன், தியாகி என்கிறார்கள். எங்கள் காலத்திலெல்லாம் இப்படியா? அந்த காலத்தில் கேட்ட பாகவதர் குரல் எவ்வளவு இனிமையாக இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது! அப்போதெல்லாம் நாட்டில் பாலும் தேனும் ஓடியது. ம்.. அது ஒரு பொற்காலம் சார்!!!

X---X---X

1945ல்

ம். என்ன செய்வது? இந்த பஞ்ச காலத்தில் இந்தப் பிள்ளைகள் பிறந்து இருக்கிறது. எங்கள் காலத்தில் 1ரூபாய்க்கு 16படி அரிசி விற்றது. ஆனால் இப்போது வெறும் இரண்டரைப் படி அரிசிதான். மாதத்தில் 10 நாள் பட்டினி கிடக்க வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் மாதம் 5 ரூபாய் சம்பளத்தில் 25 பைசா மிச்சம் பிடிப்போம். இப்போது மாதம் 10 ரூபாய் கிடைத்தும் கஷ்டம்தான். தங்கம் வாங்க வேண்டுமென்றால் கூலி சும்மாவா கிடைக்கிறது; பவுண் 13 ரூபாய் சொல்கிறான். முன்பெல்லாம் 1 அணா கொடுத்து நாலு நாள் விடிய விடிய வள்ளி திருமணம் நாடகம் பார்ப்போம். சம்பூர்ண ராமாயணம் தெருக்கூத்து 4 நாள் விடிய விடிய நடக்கும். ராஜா வேடம் போடுபவர், ராஜ நடை போட்டு, வந்தேனேனன மகராஜன் வந்தேனேனன என்று எட்டுக் கட்டையில் பாடுவது எவ்வளவு கம்பீரம்! இப்போது 4 மணி நேரம் மட்டும் வெள்ளை வேட்டியில் நிழல் படம் காட்டி 2 அணா வசூல் செய்து ஊரை ஏமாத்துகிறார்கள். இதுவும் ஏமாறுதுகள்! என்ன கொடுமையப்பா?! ம்.. அந்தக் காலம் ஒரு பொற்காலம் சார்!!!

X---X---X

2045ல்

TV, கம்ப்யூட்டர், சினிமா புரஜக்டர் எல்லாம் வீட்டில் இருந்தாலும், பிள்ளைகள் தியேட்டரில் போய் படம் பார்க்க வேண்டும் என அடம்பிக்கிறதுகள். குடும்பத்தோட 1 படம் பார்த்து வர 20000 ரூபாய் செலவாகிறது. ஒரு பாக்கெட் பாப்கார்ன் ரூ.500, ஒரு டீ ரூ.500 என்கிறான். பணத்தோட அருமை பிள்ளைகளுக்கு எங்கே தெரிகிறது? சம்பளம் என்ன அள்ளியா கொடுக்கிறான்? பிச்சக்காசு அஞ்சு லட்சம் கொடுக்கிறான். இது எந்த மூலைக்குப் போதும்! அரிசி கிலோ 500, காய்கறி 800, தங்கம் 1 பவுண் ஒன்னரை லட்சமாக விற்கிறது. ஆசைக்கு ஒரு வீடு கட்டலாம் என்றால், ஒரு ப்ளாட் காலி இடம் 2 கோடி ரூபாய் சொல்றான். இது எல்லாம் பிள்ளைகளுக்கு எங்கே தெரிகிறது? கொஞ்சமும் பொறுப்பு இல்லாதவர்கள். 30 வருடத்துக்கு முன் என் அப்பா காலத்தில் விலைவாசியெல்லாம் கொள்ளை மலிவு. ம்.. அது எல்லாம் ஒரு பொற்காலம் சார்!!!

        பின்குறிப்பு 1 :- இந்தக் க(ட்டுரை)தைக்கு ஆதாரம் சுமார் 2000 வருடங்களுக்கு முன் தத்துவமேதை சாக்ரடிஸ் சொன்ன வார்த்தைகள்தான்.

        “இந்தக் காலத்துப் பிள்ளைகள் பொறுப்பில்லாதவர்கள்; பெரியவர்கள் பேச்சை மதிப்பதில்லை. மரியாதை தெரியாதவர்கள்.”

பிகு 2 :- 2045ம் ஆண்டு தவிர, மற்ற வருட விலைவாசிகள் முழு உண்மை. கற்பனை அல்ல.

பிகு 2a :- அது சரி. 2045ம் ஆண்டு விலைவாசி மட்டும் கற்பனை என்று யார் சொன்னது?


23.6.10

நானும் என் எழுத்தும்
நான் நான்காம் வகுப்பு முடிய திருச்சி ஜில்லாவில் லால்குடி தாலுகா ஆங்கரை என்னும் சிற்றூரில் படித்தேன். நான் படித்த பள்ளிக்கூடத்தில் ஐந்து வகுப்பு வரையே உண்டு. கிட்டத்தட்ட 200 மாணவர்கள் படித்தார்கள். அருள் புரிவாய் கருணைக் கடலே என்ற சுத்தானந்த பாரதியின் பாடல்தான் பிரார்த்தனைக்குரிய பாட்டு.

ஊரில் 100 வீடுகள் போல உண்டு. நாங்கள் தெற்கு கோடியில் வசித்து வந்தோம். கர்ணம் மாமா (கணக்குப் பிள்ளை) வீட்டில்தான் தினமணி நாளிதழ் வாங்குவார்கள். அவர் யாருக்கும் வீட்டுக்கு எடுத்துப் போய்ப் படிக்க பேப்பர் தர மாட்டார். படிக்க ஆர்வமுள்ள பெரியவர்கள் அவர் வீட்டு கூடத்தில் கூடுவார்கள். ஒருவர் உரத்த குரலெடுத்து செய்திகளைப் படிப்பார். அப்பொழுது ஆளவந்தார் கொலை வழக்கு விசாரணையில் இருந்தது. தினமணி இரண்டாம் பக்கத்தில் வழக்கு விசாரணை விலாவரியாக அச்சிடப்பட்டிருக்கும். நான் அதைக் கேட்ட ஞாபகம் இன்னும் இருக்கிறது. இதுதான் பத்திரிகை உலகத்துடன் எனக்கு ஏற்பட்ட முதல் தொடர்பு.


எங்கள் குடும்பம் வசதி குறைந்தது. ஆனால் சிறுதையூர் டூரிங் கொட்டகையில் சக்ரதாரி பார்த்தது, லால்குடி சினிமா தியேட்டரில் அந்தமான் கைதி (எம் ஜீ ஆர் நடித்தது), ஜெமினியின் வள்ளியின் செல்வன், ஏழை படும் பாடு பார்த்த ஞாபகம் இன்னும் இருக்கிறது.


பிற்பாடு என் மேல் படிப்புக்காக (சும்மா ஜோக்) பொருளாதார மேம்பாட்டுக்கு சென்னை வந்துவிட்டோ ம். நான் என் சித்தி வீட்டில் விடப்பட்டேன். சித்தி என்றால் அம்மாவின் தங்கை. சூளை மேட்டில் அவர்கள் வீடு இருந்தது. பக்கத்திலேயே மாநாகராட்சிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்தேன். பகல் இரண்டு மணியிலிருந்து ஐந்துமணிவரைதான் எனக்கு வகுப்புகள். காலைநேரம் வீட்டு வேலையில் ஒத்தாசையாக இருப்பேன். அப்பொழுது நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் கிடையாது. கோடம்பாக்கம் விட்டால் சேத்துப்பட்டுதான். வெள்ளிக்கிழமை காலை என் கையில் இரண்டனாவோ நான்கனாவோ கொடுத்து என் சித்தி விகடன் வாங்கி வர பணிப்பாள். கோடம்பாக்கத்திலிருந்து சூளை மேடு என் சித்தி வீடுவரை பொடி நடைதான். அரை மணி நேரம் பிடிக்கும். நான் வரும் வழியில் விகடன் முழுவதும் படித்து விடுவேன்.


விகடன் படித்ததில் எனக்கு இன்னும் நினைவில் இருப்பது அதில் வந்த தொடர்கதைகள்தான். லட்சுமி தேவன் த நா குமாரஸ்வாமி போன்றோரின் தொடர்கதைகள் அப்பொழுது வெளியாகிருந்தன. லட்சுமி, தேவன், கதைகளில் சுவாரஸ்யமான கதை சொல்லல் இருக்கும். த.நா குமாரசுவாமியிடம் நயம், நாசுக்கு இருக்கும். அவருடைய ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா போன்றவை மேன்மையான எழுத்து என்று எனக்குப் படி ஆரம்பித்தது. தேவனின் லட்சுமி கடாட்சம் என்ற தொடர்கதையை சமீபத்தில் படித்தேன். நெடுந்தொடருக்கு ஏற்ற சரக்கு. அக் கதைகளைத்தான் உல்டா செய்கிறார்களோ என்னவோ மெகா தொடர் கதாசிரியர்கள்?


நான் உயர்நிலைப் பள்ளி படிக்கும்போது தியாகராயநகருக்கு வந்துவிட்டேன். அப்பொழுது ஆக்கூர் அனந்தாச்சாரியன் என்ற தேசபக்தர் வருடம் தோறும் பாரதிவிழா வாணிமகாலில் கொண்டாடுவார். ம.பொ.சிதான் நட்சத்திரப் பேச்சாளர். மற்ற அறிஞர்களும் பேசுவார்கள். அந்தக் கூட்டத்தில் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் கூறிய கருத்து என் மனதில் ஆழப்பதிந்தது. 'தமிழ்நாட்டில் எழுத்தாளராக மட்டும் விளங்கி பெயர் வாங்க முடியாது, மேடைப் பேச்சாளராகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சுலபமாக மக்களை சென்றடைய முடியும்.'


இப்படிப் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் பெயர் பெற்ற நபர்களில் நா பார்த்தசாரதி அவர்களும், கலைமகள் ஆசிரியர் கி வா ஜகந்நாதனும் முக்கியமானவர்கள். இருவரும் முறையாக தமிழ் பயின்றவர்கள். நா.பார்த்தசாரதி பொன் விலங்கு, குறிஞ்சி மலர் முதலிய நாவல்களை எழுதி மக்கள் மனதில் இடம் பெற்றவர். கி வா ஜவும் சிறுகதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். நா.பா பேச்சில் விறுவிறுப்பு இருக்கும். கி வா ஜ பேச்சில் நகைச்சுவை இருக்கும். இன்னும் மு வரதராசன், அ.சீனிவாச ராகவன், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், அ சா ஞானசம்பந்தம், மே வீ வேணுகோபால பிள்ளை இவர்கள் பேச்சுக்களை கேட்கவும் தென் சென்னை பூராவும் வட்டமிட்டிருக்கிறேன் என் பள்ளி நாட்களிலேயே. அரசியல், மருத்துவம், கர்நாடக இசை போன்ற துறை விற்பன்னர்கள் தங்கள் பெண்கள், பிள்ளைகளை தங்கள் தொழிலேயே ஈடுபடுத்த துடிதுடிப்பதை பார்க்கிறோம். ஆனால் நான் மேற் குறிப்பிட்ட தமிழ் ஆசான்கள் யாரும் தங்கள் மக்களை தங்கள் துறைகளில் ஈடுபடுத்த இயன்றதாக தெரியவில்லை.


நான் மயிலை கல்லூரி ஒன்றில் பி காம் சேர்ந்தபோதுதான் கிட்டத்தட்ட முப்பதாயிரம் நூல்கள் கொண்ட நூலகத்தை முதலில் பார்த்தேன். அந்த நூலகத்தில் நீங்கள் உள்ளே நுழைந்து நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடியாது. வாயிற் காப்போனாக நூலகர் அமர்ந்திருப்பார். நூலகப் பட்டியலைத் துழாவி நீங்கள் விரும்பும் நூல்களின் பெயரை எழுதி அவரிடம் தர வேண்டும். அவர் உள்ளே சென்று நூல்களை எடுத்து வந்து உங்கள் கையில் கொடுப்பார். வாரம் இருமுறை நூல் எடுக்க அங்கு செல்வேன் நான். நான் தேர்ந்தெடுத்த நூல்கள் பெரும்பாலும் ஆங்கில நாவல்கள், கவிதைகள், தத்துவம் சார்ந்தவை. நூலகர் தன் வேலைப் பளு அதிகமாய்விட்டதாய் உணர்ந்து ஒருநாள் என்னிடமும் சத்தம் போட்டார்.


''நீ படிப்பதோ பி.காம். உனக்கு எதற்கு ஆங்கில நாவல்கள்..உங்கள் இலாகா பேராசிரியரிடம் உன்னைப் பற்றி புகார் செய்யப்போகிறேன்.'' எனக்குப் படபடவென்று வந்தது. என்னுடன் வந்த நண்பர் என்னை சமாதானப்படுத்தி, 'நண்பா நீ வருத்தப்படாதே. இந்த மாதிரி நூல்களை நீ படிக்க விரும்புகிறாய். நான் உனக்கு வேறு நூலகங்களை அறிமுகப்படுத்துகிறேன்..' என்று சொல்லி என்னை அமெரிக்க நூலகத்திற்கும், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திற்கும் அழைத்துச் சென்று அங்கத்தினர் ஆக்கினார். அமெரிக்க நூலகம் நுழைவுக் கட்டணம் கூட வாங்கவில்லை. ஒரு சமயம் நாலு புத்தகங்கள் எடுத்து வரலாம். கல்லூரியில் படிப்பதற்கான அத்தாட்சி கடிதத்தைக் காட்டியதும் உறுப்பினராகி விட்டார்கள். பிரிட்டிஷ் கவுன்ஸிலில் ஐந்து ரூபாய் நுழைவுக் கட்டணம் என்ற நினைவு. அதன்பிறகு எங்கள் கல்லூரி நூலகத்திற்குள் நான் நுழையவே இல்லை.


எங்கள் சித்தப்பா அப்பொழுது தண்டையார் பேட்டையில் குடியிருந்தார். அவர் வீட்டிற்கு நான் விடுமுறை நாட்களில் போவேன். அவர் தம்பி முப்பது வயதான நபர் அகால மரணமடைந்து விட்டார். அவர் ஒரு வெள்ளைக்கார கம்பெனியில் ஸ்டெனோவாக இருந்தார். அவர் நினைவாக அவர் சேர்த்து வைத்திருந்த கிட்டத்தட்ட நூறு புத்தகங்களை சித்தப்பா தன் வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டார்.


எல்லாமே ஆங்கில நூல்கள். ஆல்டஸ் ஹக்ஸ்லி, சாமர்செட் மாம், முதலிய ஆங்கில ஆசிரியர்களின் அத்தனை நாவல்களையும் அங்குதான் நான் படித்தேன்.


பி.காம் முடித்ததும் மவுண்ட்ரோட் ஒட்டிய ஒரு கம்பனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்பொழுதுதான் மத்திய நூலகம் மவுண்ட்ரோடில் திறந்திருந்தார்கள். அங்கு உறுப்பினர் ஆகி தமிழ் நூல்கள் படிக்கத் துவங்கினேன். கன்னிமாரா நூலகத்திலும் உறுப்பினரானேன். ஞாயிற்றுக்கிழமைகளில் கன்னிமாரா நூலகத்தில் நேரத்தைக் கழிப்பேன். க.நா.சு எழுதிய அசுரகணம் அங்குதான் படிக்கக் கிடைத்தது. அது என்னை உலுக்கியது. பழைய கன்னிமாரா நூலகத்தில் பழைய பத்திரிகைகளை பைண்ட் செய்து கீழ் தளத்தில் வைத்திருப்பார்கள். கும்பகோணத்திலிருந்து ஐம்பதுகளில் வந்த காவேரி, க.நா.சு வின் இலக்கிய வட்டம் ஆகிய பத்திரிகைகளைப் படித்தேன். தீவிர இலக்கியத்தின் மீது ஆறாக் காதல் உண்டாகியது.


மத்திய நூலகத்தில் இலக்கியச் சங்கம் என்ற பெயரில் சில இளைஞர்கள் ஒன்று கூடி மாதந்தோறும் கூட்டம் நடத்துவார்கள். அந்தக் கூட்டங்கள் என்னை வெகுவாக ஈர்த்தன. ஆரோக்கியமான விவாத மேடையாக அந்தச் சங்கம் செயல்பட்டது. அந்தச் சங்கம் நடத்திய நால்வரில் ஒருவர் தரமான நூல்களை வெளியிடும் கெளரவமான பதிப்பாளராகிவிட்டார். மற்றொருவர் சாகித்திய அகாடமி பரிசு வாங்கிவிட்டு ஞானபீட பரிசுக்கு காத்துக்கொண்டிருக்கிறார். (தஞ்சை பல்கலை வழங்கும் ராஜ ராஜ சோழன் பரிசு இன்னும் இருக்கிறதா? இருந்தால் அதையும் வாங்கிவிடுவார் இவர்). மற்ற இருவா இலக்கிய உலகிலிருந்து தொலைந்து போய்விட்டார்கள்.


சேலத்திலிருந்து நடை என்றொரு பத்திரிகை வெளி வந்தது. கட்டம் போட்ட சட்டை போட்ட சாமியார் என்ற தலைப்பிட்டு ஒரு சிறுகதையை அவர்களுக்கு அனுப்பினேன். 'ஒரு வேளை' என்ற தலைப்பில் அந்தக் கதை அந்தப் பத்திரிகையில் வெளிவந்தது. சிறுகதை ஆசிரியரும் பிற்பாடு நாடக ஆசிரியராகவும் அறியப்பட்ட ந. முத்துசாமி அந்தக் கதையை பாராட்டி சில சிறிய குறைகளையும் சுட்டிக்காட்டி எனக்கு ஒரு போஸ்ட் கார்ட் போட்டார். தொடர்ந்து சிறுகதைகளை எழுதுகிற உத்வேகத்தை எனக்கு அந்தக் கடிதம் உண்டாக்கியது.


நடை சில இதழ்களுடன் நின்று போயிற்று. அதைத் தொடர்ந்து இலக்கியச் சங்க நண்பர்கள். கசடதபற என்று ஒரு பத்திரிகையை துவங்கினார்கள். இதில் நான் பங்கேற்று புதுக் கவிதைகள், விமர்சனக் கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், நிலம், நீர், ஆகாயம் என்ற குறிப்பிடப்பட்ட சிறுகதை இவற்றை அச்சில் கொணர முடிந்தது.


டெல்லியிருந்து இதே கால கட்டத்தில் கணையாழி என்ற பத்திரிகை வெளிவந்தது. இந்தப் பத்திரிகைக்கு மூன்று ஆசிரியர்கள். முதலாளி ஆசிரியர் டெல்லிவாசி. சிறுகதை தேர்ந்தெடுக்க ஒரு டெல்லி பேராசிரியர். சென்னையில் ஒரு பொறுப்பாசிரியர். கடைசி நேரத்தில் பக்கங்களை இட்டு நிரப்புவது இவர் பணி. இதில் நான் வெகுஜன சினிமா, சபா நாடகங்கள், இலக்கியக் கூட்டங்கள் பற்றி விமர்சித்து எழுதிய கண்ணோட்டத்தை அந்தப் பத்திரிகையின் த்வனியுடன் ஒத்துப் போனது. என்னுடைய சில நல்ல சிறுகதைகளையும் இந்தப் பத்திரிகை வெளியிட்டது.


அறுபதுகளின் மத்தியில் நா பார்த்தசாரதியின் தீபம் சென்னையிலிருந்து வந்தது. இதற்கு ஆரம்பத்தில் சில சிறுகதைகளை தபாலில் அனுப்பி வைத்தேன். அவர்களும் வெளியிட்டார்கள். இந்த மண்ணும் இன்னொரு மண்ணும் என்ற தலைப்பில் உள்ளூர் புத்திசாலிகள் என்று வெளி நாடுகளில் வேலைக்குப் போவதை கட்சி கட்டாமல் சிறுகதையாக எழுதி தீபத்திற்கு அனுப்பினேன். பிறகு நா.பாவை ஒரு பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்துகொண்டு பேசினபோது, அவர் சொன்னார். 'நீங்கள் இந்தக் கதையை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்,' என்று. 'போன அவள் நின்ற அவள்' என்ற என் சிறுகதையை வெளியிட்ட அவர் அதை விவாதத்திற்கு உரியதாக அறிவித்திருந்தார். பத்திரிகை வெளியாகி பத்திருபது நாட்களுக்குப் பின்னர் என்னை அவர் அலுவலகத்திற்கு வரவழைத்து என் கதையை விவாதித்து வந்திருந்த ஐம்பது அறுபது கடிதங்களைப் படிக்கச் சொல்லி என்னிடம் கொடுத்தார். உண்மையில் மன நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது அந்த நிகழ்ச்சி. ஆஜானுபாகுவான அவர் தோற்றமும், மிடுக்கான நடையும், தலை நிமிர்ந்த பார்வையும் அவருடன் பழகுவது கடினம் என்ற நினைப்பை என்னுள் உண்டாக்கியிருந்தேன். அவர் எவ்வளவு மென்மையான மனம் படைத்தவர். தான் ஒரு படைப்பாளியாக இருந்த போதிலும் சக எழுத்தாளர்களை பாராட்டுகிற பண்பு கொண்ட உத்தமமான மனிதர் என்பது அன்றுதான் எனக்குப் புலனாகியது.


ஒரு திடமான கட்டுப்பாடு, ஒரு எட்டாத தன்மை என்ற சிறுகதையை மட்டும் நா.பா பிரசுரிக்க மறுத்தார். அப்பொழுது அக் கதையைத் திருப்பி அனுப்பியபோது என்ன சொன்னார் தெரியுமா? இந்தக் கதையை கணையாழியில் பிரசுரிப்பார்கள். அதன்படியே கணையாழியில் அனுப்பியதும் அடுத்த இதழிலேயே பிரசுரித்தார்கள்.


தீபத்தில் நான் மொத்தம் இருபது முப்பது கதைகள் எழுதியிருப்பேன். அந்த ஆபிஸில் வைத்துதான் நான் டெல்லி எழுத்தாளர் ஆதவனைச் சந்தித்தேன். அவர் எழுத்தை நான் அமெரிக்க எழுத்தாளர் ஸ்காட் ஃபிட்ஸ் ஜெரால்ட் எழுத்துடன் ஒப்பிட்டுப் பேசினேன். அவர் என் மீது பிரியம் கொண்டார். டெல்லியிலிருந்து சென்னை வரும்போதெல்லாம் என்னை சந்திக்க தவற மாட்டார். அவர் சொன்ன ஒரு கருத்து இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. 'நீங்கள் அதிகம் படிக்கிறீர்கள். குறைவாக எழுதுகிறீர்கள். படிப்பதை அடியோடு நிறுத்தி விடுங்கள். தினமும் ஒரு மணி நேரம் எழுத நேரம் ஒதுக்குங்கள்.'


இன்னொரு டெல்லி எழுத்தாளரான சம்பத் இதற்கு மாறுபட்ட கருத்தை சொல்வார். நாம் எழுத்துலகில் பிரகாசிக்க வேண்டுமென்றால் அங்கு என்ன நடக்கிறது என்பதை எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழில் புதிதாக வெளிவரும் படைப்புகளை காசு கொடுத்து வாங்கி நம்மை upto date ஆக வைத்துக்கொள்ள வேண்டும்.


அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன் ஒரு அற்புதமான மனிதர். கிரியா ஊக்கி. என்னை எழுதத் தூண்டி அமுதசுரபி தீபாவளி மலர் இரண்டொன்றில் என் சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறார்.


சுதேசமித்திரன் தீபாவளி மலர் நான்கு வருடங்கள் என்னுடைய சிறுகதைகளை வெளியிட்டு என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறார் அதன் பொறுப்பாசிரியா ஸ்ரீனிவாசன். கண்ணதாசன் பத்திரிகை நிர்வாக ஆசிரியர் இராம கண்ணப்பன் என் எழுத்தினை ரசிப்பவர். அவர் எனக்கு தந்த ஆலோசனை. 'ஏன் இவ்வளவு இறுக்கப் பிடிக்கிறீர்கள்? தளர்வாக எழுதுங்கள். விஸ்தாரமாக விவரமாக எழுதுங்கள்.'


எழுபதுகளின் மத்தியில் பிரக்ஞை என்ற ஒரு பத்திரிகை தியாகராய நகரிலிருந்து வந்தது. அதை நடத்தி வந்த இளைஞர்கள் என்னை விட ஐந்து, பத்து வயது குறைந்தவர்கள். அவர்கள் என்னை ஞானகுருவாக ஏற்றுக்கொண்டார்கள். அது எனக்கு ஒரு மிதப்பை தந்தது. பாம்புகள் பற்றிய பயம் என்ற ஒரு செக் மொழிக் கதையை அதில்தான் வெளியிட்டேன். நிறைய புது கவிதைகள், மொழிபெயர்ப்பும் அவர்களுக்காக செய்து தந்தேன்.


சித்ராலயா பத்திரிகையில் நண்பர் கோபாலி தூண்டுதலின் பேரில் உலக சினிமா வரலாறு பதினைந்து வாரம் எழுதினேன். ஐம்பது வாரம் எழுத உத்தேசித்திருந்தேன். அலுவலக நெருக்கடியால் தொடர முடியாமல் போயிற்று.


நா.பா அவர்கள் தினமணி கதிரில் பொறுப்பாசிரியராக இருந்தபோதும் அவருடன் என் பிணைப்பு தொடர்ந்தது. என்னுடைய நல்ல பல சிறுகதைகளை அவர் தினமணி கதிரில் பிரசுரித்திருக்கிறார். அவர் கதைக் கதிர் என்ற மாத நாவலுக்கும் பொறுப்பாசிரியர். மாத நாவல் எழுதிக் கொடுத்திருந்தாலும் அவர் வெளியிட்டிருப்பார். நான் ஏன் இயல்பான சோம்பேறித்தனத்தால் எழுதித் தரவில்லை. தவறு என்னுடையதுதான்.


கல்கி பத்திரிகையில் என் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. வெவ்வேறு புனைபெயர்களில். சாவி பத்திரிகையில் சிறுகதை வந்திருக்கிறது. சாவி அவர்கள் தினமணிகதிரில் பணியாற்றியபோது துணை ஆசிரியர் ஜெயபாரதி தூண்டுதலில் பேரில் இரண்டொரு கதைகள் எழுதியிருக்கிறேன்.


சுபமங்களாவில் கோமல் சுவாமிநாதன் அவர்கள் ஆசிரியராக இருந்தபோது ஒரு சிறுகதை வந்திருக்கிறது. ஞானரதம் பத்திரிகையில் தேவ சித்ர பாரதி வற்புறுத்தலின் பேரில் ஒரு இலக்கியப் பத்தி எழுதி வந்தேன். அவர் ஒரு உத்தமமான பத்திரிகை ஆசிரியர்.


மணியன் அவர்கள சிறுகதைக்கென்றே ஆரம்பித்த இதழில் என் சிறுகதை கேட்டு வாங்கிப் போட்டார்கள். இந்த முயற்சி சில இதழ்கள் வெளியீட்டுடன் நின்று போனது தமிழின் துரதிருஷ்டம்.


பாவைச்சந்திரன் அவர்கள் ஆசிரிய பொறுப்பு வகித்தபோது குங்குமத்தில் ஒரு கதை எழுதினேன். பிறகு அவர்கள் புதிய பார்வையில் ஆசிரியப் பதவி வகித்தபோது சில மொழிபெயர்ப்பு கதைகளும், சுயமான கதைகளும் பிரசுரம் செய்தார்.


தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் நான் மாஜி எழுத்தாளனாக ஆக வேண்டியது. நவீன விருட்சம் ஆசிரியர் என்னை தூசித்தட்டி தொடர்ந்து என் இலக்கிய முயற்சிகளை வெளியிட்டு வருகிறார். இன்றைக்கும் உயிருள்ள எழுத்தாளனாக நான் இருப்பதற்கு அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

என்னுடைய நாலைந்து சிறுகதைகளை என்னுடைய அலுவலக நண்பர் சிரஞ்சிவி அவர்கள் மொழிபெயர்த்து தெலுங்குப் பத்திரிகைகளில் அவற்றை வெளியிட்டுள்ளார். காலஞ்சென்ற திருமதி சரஸ்வதி ராம்நாத் அவர்கள் என்னுடைய 'போன அவள் நின்ற அவள்' என்ற சிறுகதையை ஹிந்தியில் மொழிபெயர்த்து ஹிந்தி பத்திரிகை ஒன்றில் பிரசுரித்துள்ளார்.


என்னுடைய சிறுகதை ஒன்றை காலஞ்சென்ற எம் எஸ் ராமஸ்வாமி அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஸ்வராஜ்யா ஆங்கில இதழில் வெளியிட்டுள்ளார். தற்கால தமிழ்ச் சிறுகதைகள் என்ற Writer's Workshop (கல்கத்தா பிரசுரகர்த்தார்கள்) வெளியிட்டுள்ள தொகுப்பு நூலிலும் இந்த சிறுகதை இடம் பெற்றுள்ளது.


கிரேக்க தத்துவ ஞானி ஒருவன் சொன்னான். உலகம் ஒரு கண்காட்சி மைதானம். பத்து சதவிதம் பேர் இதில் வித்தைக் காட்ட, வேடிக்கைகள் செய்ய, வியாபாரம் பண்ண முயற்சிக்கிறார்கள். தொன்னூறு சதவிகிதம் பேர் பார்வையாளர்கள். அந்தப் பார்வையாளர்களில் ஒருவனாக இருக்கவே நான் விரும்புகிறேன்.


நான் ஒரு dabblar in literature. ஆங்கில இலக்கியத்தில் Max Beerbohm என்று ஒரு எழுத்தாளர் பெயரைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். தமிழ் இலக்கியத்தில் Max Beerbohm ஆக அறியப்படுவதையே நான் விரும்புகிறேன்.


பின் குறிப்பு :


ஐராவதம் கதைகளைத் தொகுத்து ஒரு சிறிய கதைத் தொகுதி 'கெட்டவன் கேட்டது' என்ற பெயரில் விருட்சம் வெளியிடாக வர உள்ளது. ஞானக்கூத்தன் ஆசிரியராக இருந்த 'கவனம்' என்ற பத்திரிகையில் இக் கதை பிரசுரமானது. ஐராவத்திடம் எனக்குப் பிடித்த விஷயம் அவரது நகைச்சுவை உணர்வு. கெட்டவன் கேட்டது என்ற பெயரில் புத்தகம் கொண்டு வர வேண்டும் என்று சொன்னபோது, ஐராவதம் வேறு தலைப்பில் கொண்டு வரச் சொல்கிறார். தமிழைப் பொறுத்தவரை எந்தக் கதைப்புத்தகமாக இருந்தாலும் 100 பிரதிகள் விற்பது சிரமம். லைப்ரரி ஆர்டரை நம்பித்தான் புத்தகம் போட வேண்டும். அதுவும் கட்டாயம் கிடைக்குமென்று சொல்ல முடியாது. தலைப்பு எதுவாக இருந்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது.


- அழகியசிங்கர் 23.06.2010 at 9.51pm


22.6.10

A SHORT-STORY BY AZHAGIYASINGER

A note on AZHAGIYASINGER, Editor, Navina Virutcham, a Little Magazine in Tamil .Original name Chandramouli. He has been contributing as a poet, short-story writer and also the editor of a Tamil Literary Magazine by name Navina Virutcham, actively engaged in doing his might to enrich Contemporary Tamil Literature. So far, his two poem-collections titled ‘Yaarudanum Illai’ ( ‘With None’ - 1995) and ‘Tholaiyadha Dhooram’( ‘The Distance That Never Ceases To Be’ – 2001) and also a volume of his full collection of poems have been published. Already three short-story collections of Azhagiyasinger have been published. His short-story titled Uncle has fetched him the prestigious Katha Award. And, he has received the esteemed ‘Thirupur Thamizh Sangam Award for his translation-work titled ‘Yugantha’. Azhagiyasinger’s poems and short-stories have been translated into English, Hindi , Punjabi and several other Indian languages. Single-handedly and steadfastly, unmindful of the fact that his literary efforts have not been duly recognized, he has been publishing the Tamil Literary Quarterly ‘Navina Virutcham which has provided place for many a promising writer and poet to prove their worth for the past 20 years. He is the compiler of the Anthology of Virutcham Poems titled .Virutcham Kavidhaikal’. Azhagiyasinger has also published quite a number of meritorious works of contemporary writers through VirutchamVeliyidu (Virutcham Publications). And, he has organized many a literary meet as part of his Virutcham activities. He is working as an officer in Indian Bank and now stationed in Myladuthurai, Tamil Nadu. His family lives in Chennai.Writer azhagiyasinger can be reached at navina.virutcham@gmail.com
Address : AZHAGIYASINGER
EDITOR – NAVINA VIRUTCHAM
6/5, POSTAL COLONY
FIRST STREET
WEST MAMBALAM
CHENNAI – 600 033
PH: 9444113205AN INCOMPREHENSIBLE PROBLEM
(a short-story in Tamil captioned ‘Puriyaadha Prachinai)

There was a phone-call from Padmanaban. I felt really surprised. For the past four years I have never received any call from him. After getting a transfer and shifted to Pandanallur he had never contacted me. When he was in Chennai we were very good friends. And, we used to go everywhere together. Moreover, both of us live in West Mambalam. Still we are living in this area only. His family is still residing in West Mambalam. He alone is staying in Pandanallur. In fact, Pandanallur is 28 kilometres away from Myladuthurai. He is staying in Mylduthurai and I am working as a stenographer in the Head-Office.After his transfer I had seen him just once. He had thinned. But, I couldn’t talk to him for long. As per the rules of our Office if some official is transferred within Tamil Nadu then he or she should be there for ever. After Padmanaban left Chennai I felt really miserable. When he was here we would never fail to go and have Pongal and Coffee in Saravana Bhavan every Sunday. But, after he left Chennai I didn’t feel like going to the Hotel and eating all by myself.In course of time I had almost forgotten Padmanaban. Hence, when I heard his voice over the phone, that too early in the morning, I felt greatly surprised.“How are you Padmanaban? Wherefrom you are calling? Have you come over to Madras?”
“Yes, I have come on temporary transfer… It is just a month since I have come back”.
“Where are you now?’
“In Hasthinapuram”.
“Is it so? You have not told me at all”.
“What to say… after all, it is just a temporary transfer… Ah, tell me, what is yoir daughter’s name?’
“What for you are asking?”
“If I am right, her name is Shruthhi, correct?”
“Of course”.
“what is she doing?”
“doing B.Tech… in MIT”
“Ah, what I thought is correct then..”
“What have you thought?”
“I came across a girl resembling Shruthi…. But, she couldn’t identify me..”
“It is we two who meet often together…moreover the youngsters of these days don’t care to recognize anybody…”
“What I wanted to tell you is an entirely different matter… something you should seriously take note of… My office begins at 8.30 … and I have to get ready and run to the station by 7.3o … and I keep running in this fashion everyday… sometimes MIT students will also come in the train at that hour…the train will be overcrowded….the boys and girls will be laughing and chatting all through the journey…everyday I see your daughter…she is not able to recognize me as your friend… there will always be four or five boys surrounding her… all are college students only… I don’t want to tell you the horrible thing…these fellows will not keep quiet…they would be moving close to Shruthi and talking all nonsense with her…some boy would even put his hand round her shoulder… once I say a chap kissing her on the cheek…and he was telling Shruthi that kissing on the lips alone is prohibited… Oh god, I felt repulsive to hear his words…”
Listening to Padmanaban I felt terribly upset. “ What is it Padmanaban, what are you saying?’ – I shouted.
“Please don’t mistake me. For the past one week I was having a great conflict in my mind wondering how I should reveal this to you… you have to deal with it very carefully…Without speaking anything about it to your daughter, you should somehow put an end to it…”
“Padmanaban, thank you very much…shruthi is a nice girl… but, somewhat childish and gullible…. Somehow I should promptly deal with this matter… and I need your help in this…please…”
At home I didn’t tell anyone about Padmanaban’s call. If my wife would come to know of it she would start worrying. The whole day I was feeling restive; ill at ease.
In the evening, when Shruthi returned from college I paid her more attention than usual. “ How is college….?” I enquired.
“Fine dad”, said she.
“Do you have ragging and all in your college?”
“Nothing of that sort…If our Principal comes to know of any such thing he would send the mischief-mongers bag and baggage to their homes. Moreover, it is more than four months since the college had re-opened?” – Shruthi responded.
The whole night I couldn’t sleep. The next morning, as soon as Shruthi started for college I too set out. She was blissfully unaware of it all. I got into the same compartment in which she had entered. Of course, I took proper care not to reveal my presence to her. Four or five students saw her and waved at her boisterously. And, Shruthi began to move towards them.
“See, I have reserved a place exclusively for you…” said a fellow, grinning.
At this juncture I raised my voice and called out, “Shruthee” and she looked at me, shocked and startled. “Daddy…!”, she said in a weak voice.
“Come here and sit next to me”, said I . And, she obeyed.
“who are those fellows?” , I enquired.
“Friends”, said she.
And, she remained sitting next to me in silence. I looked at those chaps who were in the habit of mocking at Shruthi. They all looked educated. And, all of them had tiny note-books in their hands and invariably mobile-phones. Seeing me they all got down at the next station and climbed into another compartment.
“Are you traveling with these fellows everyday?”
“Yes”
“It seems they are making fun of you”
“NO, they do no such thing”.
“Padmanaban informs me so. Why do you deny it?”
They are my class-mates. Daily we travel together, laughing and chatting and having great fun”
“What about the other girls? Don’t they travel with you?’
“Malliga will also accompany us…. In my class there are just a few girls …”
“Shruthi, as far as I am concerned, these are all not proper… patting your sheek, putting hand around your shoulder…you may be friends, but there should be a limit…let me come and have a word with your college people…”
Shruthi started crying. “Oh dad, please don’t come to college and all”, pleaded she.
When the Chrompet Station came I too alighted along with her. Eyeing me and Shruthi her friends had gone ahead of her and disappeared from sight. “When will the college be over?”
“Can’t say for sure…sometime it will be over by 4 o’ clock… But, if there is some special class, then it will extend till 5 o’ clock…”
“Ok, you go to class”, said I and accompanied her till the entrance of the college. Then I rang up Padmanaban.
“Why, I didn’t see you today”, he enquired.
“today I came with Shruthi”, I informed.
“How long you can accompany her thus?”, asked he.
“That is what I am also wondering”, said I.
“We should see whether there is any other way to solve this problem”.
That evening, after her classes were over, Shruthi came out., with her gang of friends. Some of them noticed me waiting for her at the entrance. “Shruthi, your father”, informed one and they all began to walk away from her. With fear and apprehension shruthi approached me. I gestured her friends to come. They came hesitatingly.
“Shruthi is going to get married. If you are seen together like this, people would mistake her…” reasoned I.
“Sorry uncle… hereafter we wont come like this”, - saying they left.
Shruthi and myself were waiting for the train. “why are you lying to them daddy… they are good boys… we are friends and we are having fun… just that…”, said Shruthi.
“There is a limit to everything Shruthi”, I insisted.
The next morn I boarded the train with Shruthi. That day also I didn’t come across Padmanaban. And, Shruthi’s pals were also not seen. And, when she was coming out of her college in the evening I once again stood there, waiting for her. “they are good fellows”, muttered Shruthi. I didn’t say anything. Thus, for a week or so I accompanied her to college and back home. I talked to Padmanaban over the phone. “ Yes, I am watching all that you are doing. It is good that your daughter doesn’t know me”, said he.
After a week Shruthi went to college by herself. I felt it impossible to accompany her always. Further, I regained my faith and confidence in my daughter. And, I felt sure that those chaps wouldn’t come back to her.
After a gap of four or five days I called up Padmanaban and enquired. “Ofcourse, I am watching. But, now-a-days we can see several other girls chatting and laughing with the boys”, informed he. I felt relieved to hear that.
After two days I got an urgent call from Padmanaban. “you know what, your daughter Shruthi has also joined those girls and now all of them are chatting and laughing with the boys all through the journey”, informed he agitatedly.
I stood there, wondering what to do.

20.6.10

பூனைகள்.....பூனைகள்.....பூனைகள்...27
பூனை


ப.மதியழகன்


ஆட்களை கண்டால்

உற்று நோக்கும்

மாயக் கண்களில்

ஆயிரம் மர்மங்கள்

புதைந்திருக்கும்

அதுவும் கறுப்புப் பூனையைக்

கண்டாலே

மனசு விதுக்கென்று

இருக்கும்

நாய்

வீட்டில் நல்லது நடக்கும்

நாலுவாய் சோறு

திங்கலாம் என்று

நினைத்திருந்தால்

பூனை

எப்ப இழவு விழும்

யாருமற்ற வீடாகும்

என்று நினைக்கும்

புழங்காத இடம்

தேடியலையும்

பூனை மனிதர்களும்

உலகில் உண்டு

பதுங்கிப் பாயும்

புலியினமாயிற்றே

பூனை!

18.6.10

பழம் புத்தகக் கடைஅப்போது எல்லாருக்கும் மட்றாஸ்தான். சென்னை என்று சொல்லுவது நாகரிகமற்ற கர்னாடக வழக்கமாய்க் கருதப் பட்டிருக்கலாம். நான் மட்றாசுக்கு வருமுன்பே அப்பாவின் மூலம் அறிந்திருந்த முக்கியமான இடங்களில் ஒன்று மூர்மார்க்கெட். மதறாசில் எனக்கு மிகவும் பிடித்த இடமே இதுதான். இதன் இந்தோ சாராசானிகக் கட்டிட பாணியின் அழகை சொல்லி மாளாது. நுழைவாயில்களில் கருங்கள்களாலான வளைவுகளும், கூரைக் கைப்பிடிச் சுவர்களில் இடம் விட்டு இடமாய் கோயில் கலசங்களின் வடிவில் கல்கலசங்களுமிருந்தன. இன்று அல்லிக் குளத்தின் மேல் எழுப்பபட்டுள்ள புதிய மூர்மார்கெட் அங்காடியின் சுவர்களில் மேற்கூறிய கல் வடிவங்கள் பத்திரப்படுத்தப் பட்டிருந்தது பொருத்தப்பட்டுள்ளன. அந்தக் காலத்து அசல் மூர் மார்க்கெட்டின் உள்ளே மத்தியில் மரங்களுக்கிடையில் அழகிய நீரூற்று ஒன்றும் அமைக்கப் பட்டிருந்தது. இந்த மூர்மார்க்கெட்டில் அன்று பெற்ற அப்பா அம்மாவைத் தவிர மற்றது எல்லாம் கிடைக்கும். பழைய பொருளும் கிடைக்கும், புதிய பொருளும் கிடைக்கும்.


பழைய புத்தகங்கள், புதிய புத்ககங்கள், எல்லா மொழிகளிலும் புத்தகங்கள், பத்திரிகைகள் கிடைக்குமிடம். ஒரு கடையில் பத்து வருடத்து ஆங்கில செய்தித்தாள் கூட (The Mail) கிடைப்பதாக, பழைய அபூர்வ பேனாக்களை வாங்கி விற்கும் ஒரு கடைக்காரர் எனக்குச் சொன்னார். அன்றைய மஞ்சள் பத்திரிகைகளான தீரன், இந்து நேசன் இதழ்களின் (1940) பைண்டு செய்த தொகுப்புகளை நான் மூர் மார்க்கெட் கடையொன்றில் பார்த்திருப்பதோடு, வாடிக்கையாளன் என்ற சலுகையுடன், ஸ்டூலில் அமர்ந்து புரட்டிப் படித்துப் பார்த்துமிருக்கிறேன். அந்தக் காலத்து அனுமான், காண்டீபம், நாரதர் போன்ற இதழ்களின் பைண்டு செய்த தொகுப்புகளையும் அதே கடையில் பார்த்தும் படித்துமிருக்கிறேன்.


மூர்மார்க்கெட் பழைய புத்தகங்கள், பத்திரிகைகள் என்பனவற்றோடு இன்னொரு முக்கிய விஷயத்திற்கும் புகழ் பெற்றது. கிராமஃபோன் இசைத்தட்டுக்கள். எல்லா மொழிகளிலும் வெளிவந்த சாதாரண இசைத் தட்டுக்கள் முதல் ''எல் பி ரெக்கார்டுகள்'' வரை கிடைக்கும். கர்னாடாக இசை, இந்துஸ்தானி இசை, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள சினிமாக்களின் இசைத்தட்டுக்கள் முதல் ''எல் பி ரெக்கார்டுகள்'' வரை கிடைக்கும். ஆங்கிலோந்திய குடும்பங்கள் மேனாட்டு இசைத்தட்டுக்களை விற்கவும், வாங்கவும் ஒன்றைக் கொடுத்துவிட்டு இன்னொன்றை பரிமாறிக் கொள்ளவும் எப்போதும் அலையும் இடமாயிருக்கும் மூர்மார்க்கெட். நம்மிடமுள்ள இசைத் தட்டுக்களை கொடுத்துவிட்டு அதற்குப் பதில் நாம் வேறு இசைத் தட்டை எடுத்துக் கொள்ளலாம். கடைக்காரர் கூடுதலாக சொற்பக் காசை மட்டும் கேட்பார். அதிலும் பேரம் பேசலாம். கூடவே சொல்லுவார் :


''கேட்டனுபவிச்சிட்டு இங்கியே கொண்ணாந்து குடு, வேற எதுவேணுமோ எடுத்துக்கிட்டுப் போ.''


மூர்மார்க்கெட் தலை வாசல்லேயே இசைத் தட்டுக்கடைகளின் தரகர்கள் காத்திருப்பார்கள். கையில் இசைத் தட்டோ டு வருபவர்களைக் கண்டதும் பாய்ந்து இழுப்பார்கள்.


''நம்ம கடைக்குப் போகலாம்.''


''டேய், சார் நம்ம கடை வாடிக்கைடா, நீ வா சார்.''


வைதீஸ்வரன் கோயில் பஸ் நிலையத்தில் இறங்கியவுடன் செருப்பு - அர்ச்சனைத்தட்டு விஷயமாய் ஏஜெண்டு கள் நம்மை இழுப்பது கணக்காய்....
என்னைத்தேடி ஊரிலிருந்து வருபவர்களை நேராக என் அறைக்கு வரச் சொல்லாமல் மூர்மார்க்கெட் தலை வாசலில் இத்தனை மணிக்கு வந்து நிற்கச் சொல்லுவது என் வழக்கம். நண்பர்களோடான எனது சந்திப்புக்கள் பெரும்பாலும் மூர்மார்க்கெட் வளாகத்தில் வைத்தே நிகழ்ந்து வந்த நாட்கள் அதிகம்.


மூர்மார்கெட் வளாகத்தில் முக்கியமான இரண்டு வரையாக பழைய புத்தகங்கள் விற்பனையிலிருக்கும். ஒன்று, நிரந்தர கடைகள். இவை பழைய பர்மா தேக்கில் நேர்த்தியாய்ச் செய்து கண்ணாடிச் சட்டமிட்ட கதவுகளைக் கொண்ட பிரம்மாண்டமான பீரோக்களில் பெயர் தெரியும்படி அடுக்கப்பட்ட தோல் பைண்டலான வெளி நாட்டு - உள்நாட்டு அரிதான நூல்கள். ஒரு நுற்றாண்டு வயது நிரம்பியவை. அதற்கும் மேலான தாத்தா கொள்ளுத்தாத்தா. எள்ளுத் தாத்தா காலத்து நூல்கள் எல்லாம் இந்த பீரோக்களிலிருக்கும். சாதாரண - பேப்பர் பேக்ஸ் வகை நூல்கள் வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இரண்டு மூன்று முறை வாங்கிய சுருக்கில் வாடிக்கையாளர் அந்தஸ்தைப் பிடித்து விடலாம். கடைக்காரருக்கு கவனம் பிசகாது. பத்திரிளகைகளைக் குடைய வேண்டும்போது சிறு ஸ்டூலைக் கொடுத்து உட்கார்ந்தே நம் காரியத்தைப் பார்க்கச் சொல்வார். சில அபூர்வ இலக்கிய கட்டுரைகள் பேட்டிகளை வியப்பூட்டும் வகையில் கொண்டிருந்த விலையுயர்ந்த அமெரிக்க ஆபாச பத்திரிகையான ''ப்ளே பாய்'' இதழ்களை இப்படித்தான் நான் வாங்கிப் பார்த்துவிட்டுத் திருப்பித் தருவேன். பிக்காஸோவைப் பற்றிய சால்வேடார் டாலியைப் பற்றிய அரிதான கட்டுரைகளும் ழான் பல் சார்தரோடான அரிய நேர்காணல் ஒன்றும் ப்ளோபாய் இதழ்களில் நான் படிக்க நேரிட்டவை. இதே கடையில் பழக்கம் மற்றும் நம்பிக்கை மேலிட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்துவிட்டு ஒன்றிரண்டு நூல்களை எடுத்தப் போனதுண்டு.


மற்றொரு வகை விற்பனையாளர் ''கேர் ஆஃப் பிளாட்பாரம்'' தினுசு. இவர் மூர்மார்கெட் வெராண்டாக்களில் நிரந்தர கடைக்காரர்களின் தயவில் கடை விரித்திருப்பார்கள். பெரும்பாலும் போப்பர் பேக் நூல்களும் பழைய பத்திரிகைகளுமாயிருக்கும். விற்காமல் தேக்கம் அதிகரிக்கும்போது நூல்களையும் பத்திரிகைகளையும் அவற்றின் தகுதியறிந்து கூறு கூறாகப் பிரித்து அம்பாரமாக்கிக் குவித்து ''இதெல்லாம் பத்து ரூபாய் இதெல்லாம் ஐந்து ரூபாய அதெல்லாம் எது எடுத்தாலும் ஒரு ரூபாய் எது எடுத்தாலும் எட்டணா'' என்று எழுதிய அட்டைகளைகக் குத்தி வைப்பார்கள். நிரந்தர புத்தக விற்பனையாளர்களில் முதலியார் என்றும் நாயக்கர் என்றும் ஐரே என்றும் எல்லாராலும் அழைக்கப்பட்ட மூவர் எனக்கு பழக்கமானார்கள்.


1961ல் நான் உருப்படியாக மூர்மார்கெட்டில் வாங்கிய சில புத்தகங்களில் குறிப்பிடத்தக்கது ஒரு பிரிட்டிஷ் சைத்திரகனின் சுயசரிதை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஆங்கில பத்திரிகையுலகில் கேலிச்சித்திரம் மற்றும் பல்வேறு மனிதர்களை உருவகப்படுத்தும் ''கோகேச்சர்'' வகைப் படங்கள் வரைவதில் புகழ் பெற்றிருந்த ஃப்ராங்க் ரேனால்ட்ஸ் ஜூனியர் என்பவரின் சுயசரிதை நூல் அது. ஏராளமான கருப்பு வெள்ளைக் கோட்டோ வியங்களோடு சிற்சில நீர் வண்ண ஓவியங்களும் கொண்ட நூல் அது. இந்த நூல் முகப்பு அட்டையும், பின் அட்டையுமிழந்த கதியில் எது எடுத்தாலும் ஒரு ரூபாய் அம்பாரக் குவியலில் கிடைத்தது. இப் புத்தகத்தின் ஒவ்வொரு தாளும் இன்று நீங்கள் ''தாள்'' என்று பார்த்துத் தடவி உணரும் வகையைச் சார்ந்ததே அல்ல. இன்றைய சராசரி தமிழ் நாவல் ஒன்றின் முகப்பு மற்றும் பின் அட்டையளவுக்கு கனம் கொண்ட தாள் அது. தாள் என்பதைவிட அட்டையென்றே சொல்லிவிடலாம். அப்படியான அந்தத் தாள்கள் ஒரு எண்பது கொண்ட அந்த நூலின் தலைப்பு FRANK RAENOLDS, JR என்பது. ரேனால்ட்ஸ் தன் சிறு வயது, பள்ளி நாட்கள், ஓவியப் பயிற்சி பத்திரிகைகளோடான தொடர்பும் அனுபவமும், பொது வாழ்வில் சந்திக்க நேரிட்ட பல்வேறு முகங்கள் பற்றியெல்லாம் புத்தகத்தில் சொல்லிக்கொண்டே போகையில் அதையெல்லாம் - அவர்களையெல்லாம் பென்சிலால், க்ரேயானால், கருப்பு மையால், வண்ணங்களால், அடுப்புக் கரியால் எல்லாம் வரைந்த படங்களையும் நெரிப்படுத்தி இடம்பெறச் செய்திருக்கிறார். இவரது கேரிகேச்சர் படங்கள் அபூர்வமானவை. துல்லியமும் நேர்மையுமானவை. இவரது கார்டூன்களும், இதர படங்களும் ஓரளவுக்கே புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. அவற்றை அவற்றின் கால வரிசையில் பார்க்கையில் ஒரு நூற்றாண்டின் ஓட்டத்தில் நடந்தேறியிருக்கும் ஐரோப்பாவின் ஆண் - பெண் - குழந்தைகளுக்கான சிகையலங்காரம், ஆடை தினுசுகளின் வடிவமைப்பு, காலணி மற்றும் தொப்பி தினுசுகள், பல்வேறு பருவ நிலைக்கேற்ப அமைக்கப்பட்ட அவற்றின் படிப்படியான தோற்றத்தையும் வளர்ச்சியையும் அறியலாம். இப்புத்தகம் இங்கிலாந்தில் 1907-ல் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. முதற் பதிப்பு.மூர்மார்கெட் நாயக்கர் கடையில் பல்வேறு அரிய மேனாட்டு பத்திரிகைகளைத் தேடி வாங்கிய அனுபவத்தில் இங்கிலாந்தில் தயாராகி வெளிவந்த மாதப் பத்திரிகை ARGOSY முக்கியமானது. நாற்பதாண்டுகளுக்கு முன்பே நின்றுபோன இதழ். ஆர்கோஸி என்பதால், ஏராளமான அற்புத விஷயங்களை ஏந்தி வரும் கப்பல் என்று - கிட்டத்தட்ட பொருளாகிறது. ஆர்கோஸி பத்திரிகையின் விசேஷமென்ன? இது முழுக்கவும் சிறு கதைக்கான பத்திரிகை. சிறுகதைகளுக்கெனவே பிரத்தியேகமாய் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகை. ஒவ்வொரு மாதமும் ஆர்கோஸி முப்பது வரை சிறுகதைகளைக் கொண்டு வரும். இதில் சாமர்செட் மாம், ஆல்பெர்டோ மொரேவியா, வில்லியம் சரோயன், ஃப்ராங்க் ஆகுனர், மால்காம் வுட், கிரஹம் கிரீன் ஆகியவர்கள் சிறுகதைகள் எழுதியவர்கள். ஆர்.கே நாராயணனின் சிறுகதையொன்றையும் ஆர்கோஸியில் பார்த்த நினைவு.மூர்மார்க்கெட் முதலியார் கடையில் நான் மெளனமாக நின்றபடி கண்களால் ஆராய்வேன். ஒரு நாள்...

.''ஒரு நாள் போக வந்து வந்து நிற்கிறியே, என்னமோ பெரிசா வாங்கறாப்பல...ஓர்ரூபாய்க்கு யாவாரம் பண்ணியிருப்பியா எங்கடையில?......'' என்றார் முதலியார்.

''என்ன இருக்குனு பார்க்கிறேன்.''''இது தேவைப்படுமா?'' என்று கூறிக்கொண்டே ஒரு புத்தகக் கட்டை எடுத்து வெளியில் போட்டார்.

''பிரத்தியேகமான ஆனந்தரங்கம் பிள்ளையவர்களின் சொஸ்த லிகித தினப்படி சேதி குறிப்பு - 1948. முதல் புத்தகம். இரண்டாம் புத்தகம் 1949. இப்படியாக பன்னிரெண்டு புத்தகங்கள். ஒவ்வொரு புத்தகமும் சுமார் ஆறுமாத காலத்திய தினப்படி சேதிக் குறிப்புகளைக் கொண்டது. 1746-ம் ஆண்டு ஏப்ரல் முதல், 1746 நவம்பர் ஆரம்பம் வரையிலான டைரி குறிப்புகள் எழுதப்பட்ட நூலின் உள்ஞானு தியாகு என்ற பெயலில் ஒருவர் எழுதியிருக்கிறார். முகவிலை மூன்று ரூபாய். பேரம் பேசியதில் முதலியார் ஒவ்வொரு புத்தகத்தையும் எழுபதைந்து பைசாவுக்குக் கொடுத்தார். அன்றைய கணக்கில் அது அதிகப்பட்ட விலையாகவே பட்டது எனக்கு.

(இன்னும் வரும்)

15.6.10

கழைக்கூத்தாடிச் சிறுவன்

எதற்காகவென்று
தெரியவில்லை
கண்ணீர் வந்தது
சாலையோரத்தில்
தன்னையே சாட்டையால்
அடித்தடித்து
வருவோர் போவோரிடம்
காசு வாங்கிக்கொண்டிருந்தான்
கழைக்கூத்தாடிச் சிறுவன்
தினப்படி நடப்பது தான் இது
இன்று என் செங்குருதி
அவன் உடலிலிருந்து
வழிந்தது.

13.6.10

பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்......26.
பூனைக் கவிதைகள்


செல்வராஜ் ஜெகதீசன்

01

கடைசியாய்

காரொன்றில்

அடிபட்டு இறக்குமுன்

அந்தக் கறுப்புப் பூனை

முழித்தது யார்

முகத்திலோ?

o

02

திருடனொருவனை

காட்டிக்கொடுத்த

அடுத்த வீட்டுத்

திருட்டுப் பூனைக்கு

அதற்குப் பிறகும்

அதே பெயர்தான்.

O

03

இருந்தும்

கடந்தும்

போயின

எத்தனையோ.

இன்னும் பல

எங்கோ

எப்படியோ

இருந்து

கடக்க.

O

8.6.10

ஆறு கவிதைகள்1.

வானத்தில்

நீண்ட

தொலை தூரத்தில்

எல்லாம்

கணக்கில்லாமல்

பறக்கும் புள்ளினங்கள்


2.

விதிர்விதிர்த்துப் போனேன்

எங்கும்

ஓய்ச்சலில்லாமல்

சத்தம் போட்டபடி

பறக்கும்

வாகனங்கள்


3.

அந்தக் கோயிலில்

வீற்றிருக்கும்

வியாக்கிழமை

ஓடணிந்து அமர்ந்திருக்கும்

பிச்சைக்காரர்கள்

காவித்துணியில் ஜொலிக்கிறார்கள்

சிவனடியார்களாய்


4.

பெட்டிபோல்

வீட்டில் குடியிருக்கிறேன்

பெட்டியிலிருந்து

வெளியில் வந்து

பெட்டிக்குள் நுழைந்து

விடுகிறேன்.


5.

அந்தப் பெண்ணின்

மார்பகங்கள்

படபடத்துக் கொண்டிருந்தன

தடவிக்கொடுக்க

கையை நீட்டினேன்

கை நீண்டுகொண்டே

போயிற்று...


6.

வெகுநேரம்

வெகுநேரம்

கண்ணை மூடிக்கொண்டிருக்கிறேன்

கண்ணைத் திறந்தும் பார்த்தேன்

உலகம் ஒன்றும் மாறவில்லை

6.6.10

3 கவிதைகள்
வேதாளம்

நள்ளிரவில்

நடைபாதையில்

வேதாளம் நடமாட

அதைக்

கண்டு பயந்து

மேனி காய்ச்சலில்

படுத்து கிடக்க

கனவினில் ஓர் காட்சி

நள்ளிரவில்

நடைபாதையில்

தனியாய் செல்வதைப் போல

வேதாளம் மட்டும் அங்கில்லை

வேறு ஒருவரின்

கனவுகளுக்குள் சென்று

விட்டது போலும்.

யாருக்காக

பொழுது

யாருக்காக விடிகிறது

சேவல்

யாருக்காக கூவுகிறது

மழை

யாருக்காக பெய்கிறது

தென்றல்

யாருக்காக வீசுகிறது

நாமனைவரும்

யாருக்காக வாழ்கிறோம்

சூட்சுமம் புரிபடவில்லை

புரிந்துவிட்டால்

புரிந்தவர்கள் எவரும்

இப்பூமியில்

இருப்பதில்லை


எது ஊனம்

யாருக்கு பின்னம்

இல்லை

உடலிலோ, மனசிலோ

ஏசு சாமி சொன்னது

போல

உடலிலோ, மனதிலோ

பின்னமில்லாதவர்கள்

கேலி செய்யுங்கள்

அங்கஹீனமானவர்களை

படைப்புகளில் எது உயர்ந்தது

எது தாழ்ந்தது

எல்லாம் ஒரு பிடி சாம்பல் தானே

இறுதியில் தலையில் கம்பால்

அடிக்கும் வெட்டியானிடம்

சொல்லுங்கள்

நான் உயர்ந்தவனென்று

இன்னும் இரண்டு அடிகள்

கூடத் தருவான்

வாங்கிப் போங்கள்5.6.10

கிழிசல் சேலை

கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செயயாதவர்களுக்கான பெட்டியில் பயணம் செய்வது தாயம்மா பாட்டிக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. நாகர்கோவிலில் ரயில் ஏறிய போது அந்த பெட்டியில் எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் அவ்வளவாக இல்லை. இருக்கையில் காலை வசதியாக நீட்டி வைக்க முடிந்தது. ரயில் ஆரல்வாய்மொழி, நாங்குநேரி, வள்ளியூர், என சினன ரயில் நிலையங்களைக் கடந்த போதுகூட பயணிகள் கூட்டம் எல்லா இருக்கைகளையும் நிரபபி விடடது. இருக்க ஓரததில் சிறிது இடம் கேடடவர்கள், சிறிது நேரததில் இடம் தந்தவர்களை இறுக்கி இருக்கையில் சவுகரியமாக உட்கார எததனித்தார்கள். தாயமமா பாடடி தன்னைவிட வயதான ஒருவருக்கும் , ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குமாக இடம் கொடுத்து கடைசியில் தரையிலேயே உட்கார்ந்தாள். தனக்கு துணையாக வந்த அந்த கோட்டாறுக் கடைக்காரப் பையன் பககவாட்டில் உயரததில் சாமான்கள் வைப்பதற்கான அநத குறுகிய இடத்தில் படுத்துக் கொண்டான். அதைப் பார்த்து தாயம்மா பாட்டிக்கு பயம் கொடுதது விடடது.

'எப்பா விழுந்திராதப்பா|கீழே இறங்கு|' என உட்காரச் சொன்னாள். அவன் படுத்திருக்கும் இடததில் அவன் உடம்பின் கால் பகுதி வெளியே துருத்திக் கொண்டிருந்தது. சிறிது கவனமின்றி கண் அயர்ந்தால் கூட கீழே விழ வேண்டியதுதான். கீழே விழுநதால் தலையில் அடி விழுந்து உயரே போய் விடும் ஆபத்து. இபபடி கவலையில் பாட்டி அவனை உரககக் கூப்பிட்டு அச்சுறுத்தினாள். சுற்றி இருககும் சிலருககு அது பொழுது போக்கு களமானது. எல்லோரும் பாட்டியை கிண்டல் செய்தார்கள். உட்கார்ந்தால் தலை தட்டுகிற அந்த குறைந்த உயரத்தில் அவனைப் போல் பலரும் படுத்திருந்தார்கள். அதிலும் அதிசயமாய் ஒருவர் தனது பருத்த தொப்பை ரயிலின் கூரையைத் தட்ட ரயிலுக்கு இணையாய் குறட்டை ஒலியால் கூவிக் கொண்டிருந்தார். அவர் தன் மேல் விழுந்து விடுவாரோ என அஞ்சி கீழே உட்கார்ந்திருந்த ஒருவர் இடம் மாறி சென்று விட்டார். இந்த அதிசயங்களோடு பயணிகளின் அவஸ்தைகளையெல்லாம் சகித்துக் கொண்டு ரயில் உற்சாகமாய் ஓடிக் கொண்டிருந்தது.

ரயிலை விட விரைவாய் பாட்டியின் மன ஓட்டம் இருந்தது. இது கூட அவளுக்கு எதிர்பாராமல் எதிர் கொள்ளும் பயணமாக இருந்தது. செனனையிலுள்ள தனது இளைய மகள் வழி பேத்திக்கு சென்ற வாரம்தான் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டாரும் சென்னையைச் சேர்ந்தவர்கள்தான். உறவினர்கள் அதிகம் பேர் சொந்த ஊரில் இருந்ததால் அவர்களின் வசதிக்காக திருமணத்தை நாகர்கோவிலிலேயே நடத்தினார்கள். திருமணமென்ற சடங்கின் மூலம் தொலைவிலுள்ள தனது பிள்ளைகளையும் உறவினர்களையும் ஒன்றாகப் பார்க்க இயல்வதில் தாயம்மாவிற்கு மிகவும் சந்தோஷமாகவே இருந்தது. தான் தற்போது வசிக்கும் ஊர், அதன் மக்கள், அங்குள்ள சடங்குகள், பிளளைகள், அதன் பள்ளிகள், அவர்களின் அனுபவங்கள் என எல்லாவற்றையும் சொநத ஊரில் கூடிப் பகிர்ந்து கொண்டார்கள். இத்தோடு ஒரு சிலரின் பேச்சிலும் சிரிப்பிலும் அவர்கள் பலரிடம் கொண்ட வன்மப் பகையின் சாயல்கள் கொடிய மிருகமாய் பதுங்கி இருந்தன. தாயம்மா பாட்டிக்கு ஆச்சரியமாக இருந்தது. உலகம் எவ்வளவு வேகமாய் போய் கொண்டிருக்கிறது. தனது மூத்த மகள் ரமணியையும் இளைய மகள் சுனிதாவையும் இப்போதுதான் பள்ளிக்கு கொண்டு விட்டது போல் இருக்கிறது. அதற்குள் அவர்கள் பெரியவர்களாகி, திருமணமாகி, குழந்தைகளும் பெற்று, அவர்களை நல்ல முறையில் படிக்க வைத்து, பெரியவர்களும் ஆக்கி, அவர்களுக்கும திருமணம் நடந்தாகி விட்டது. பேத்தியின் திருமணம் முடிந்து சென்னையில் நடைபெறும் விருந்து வைபவத்திற்காக, இளைய மகளின் நிர்ப்பந்தத்தில் பாட்டி சென்னைக்கு பயணமாகிக் கொண்டிருக்கிறாள்.

தாயம்மா பாட்டிக்கும் சேர்த்துத் தான் மொத்தம் இருபது டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வைத்திருந்தார்கள். இருந்தும் அந்த குடும்பத்தின் மூத்த குடிமகளான அவளுக்கு மட்டும் பதிவு செய்யப் படாத பெட்டியில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை. அதுதான் அவளை இந்த நரக வேதனைக்குள்ளாக்கியது.

தான் தனது அம்மா அப்பாவை நேசித்த அளவிற்கு தனது பிள்ளைகள் தன்னை நேசிக்காதது தாயம்மா பாட்டிக்கு வருத்தத்துடன் ஆச்சரியமாகவும் இருந்தது. அதற்கான காரணங்களையும் அலசி ஆராய்ந்தாள்... எதுவும் பிடிபடவில்லை. ஆனாலும் அவள் தன் பிள்ளைகளைப் பற்றி மோசமாக யாரிடமும் எதுவும் சொன்னது கிடையாது.

பிள்ளைகள் சிறிதாக இருந்த போது இருவரில் இளைய மகள் சுனிதாவைப் பற்றித்தான் மிகவும் கவலைப் படுவாள். பொறுமையானவள். பிழைக்கத் தெரியாதவள், சூது வாது தெரியாது... எதைச் சொன்னாலும் நம்பி விடுவாள். இன்னொரு வீட்டில் மணமாகி செல்லப் போகிற இவள் எப்படி குடும்பம் நடத்தி, குழந்தை பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கப் போகிறாள் என்று கவலைப் பட்டு புத்திமதி சொல்வாள். அன்று பல இரவுகள் உறங்காமல் தான் கவலைப் பட்ட அந்த மகளா இன்று இவ்வளவு பெரிய சாமரத்தியசாலி. மிகுந்த ஆச்சரியமாக இருந்த்து அவளுக்கு.

தாயம்மா பாட்டிக்கு எண்பது வயதாகி விட்டது. சில மாதங்களாக முதுமை காரணமாக உடல்நலமின்றி மிகவும் பலவீனமாகவே இருந்தாள். திருமணம் நாகர்கோவிலிலேயே நடந்ததால் மிகவும் சந்தோஷப்பட்டாள். தனது உடல் நலனைக் காரணம் காட்டி சென்னைக்கு விருந்துக்கு வர மறுத்தாள். இளைய மகளோ ' அம்மா நீங்க நிச்சயம் வரணும் . மாப்பிள்ளை வீட்டுக் காரங்க உங்களை கண்டிப்பா சென்னை விருந்துக்கு கூட்டிட்டு வரச் சொல்லி இருக்காங்க. அதனாலே நீங்க நிச்சயம் வந்தே ஆகணும். நீங்க வரல்லைண்ணா அவங்க தப்பாதான் எண்ணுவாங்க. இன்னும் உன் இளைய பேத்திக்கு இஞ்சினியரிங் அட்மிஷன் வேற இருக்கு. அதுக்கு கருமுத்து செட்டியார்ட்டே நீ வந்து நேரிலே சொன்னாதான் காரியம் நடக்கும். ஒரு வாரம் எங்கக் கூட இருந்திட்டு திருப்பி வந்திடலாம் 'என்று சொன்னாள்.

இளைய மகள் சுனிதா எந்த அளவிற்கு மாறி விட்டாள். திருமணமெல்லாம் முடிந்து சாமான்களையெல்லாம் பத்திரமாக பெட்டிகளாகக் கட்டிக் குவித்த போதே தனது மகளின் சாமர்த்தியத்தை எண்ணி ஆச்சரியப்பட்டாள். அவளுடைய நகைகளையும் துணிகளையும் மருமகன் பெரிய பைக்குள் அடைத்தபோது அவள் கூறிய வார்த்தைகள் இன்னமும் பாட்டியின் காதுகளில் அலைகளாய் அடித்துக் கொண்டிருக்கின்றன.

‘என்னங்க பையிலே துணியை இப்படி யாராவது அடுக்குவாங்களா? கிழிசல் சேலையை பத்திரமா உள்ளே வச்சிகிட்டு நகையை மேலே வச்சிருக்கீங்க| இபபடி வச்சா ஊரு போனா கிழிசல் சேலைதான் கிடைக்கும். முதல்லே நகையை பத்திரமா அடியிலே வச்சுகிட்டு எல்லா துணியையும் வச்ச பின்னாடி அம்மாவுக்க அந்த கிழிசல் சேலையை கடைசியிலே வைங்க .அது தொலைஞ்சு போனாலும் பரவாயில்ல' என்றாள்.

அப்போது தனது மகளுக்கு இவ்வளவு புத்தி வநது விடடதே என சந்தோஷப் பட்டாள். ஆனால் இன்று அந்த வார்த்தைகள் கத்தியாய் அவள் நெஞ்சைக் குத்திக் கிழிப்பது போல் இருக்கிறது. தானும் ஒரு கிழிந்த சேலையாய் அவளுக்கு பட்டது. கல்யாண நிகழ்வுகள் மிகவும் சிறப்பாகவும் சந்தோஷமாகவும்தான் நடந்தன. சுனிதாவைவிட அவளது சம்பந்தக்காரர்கள் தாயம்மாவை மிகவும் கவனித்து மரியாதை செலுத்தினார்கள். நிச்சயமாக சென்னை விருந்திற்கு வரவேண்டுமென விரும்பி வற்புறுத்தினார்கள். இறுதியில அவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி தாயமமாவும் ரயிலுக்கு முன்பதிவு செய்ய சம்மதம் தெரிவித்தாள். சம்பந்தக்காரர்கள் கல்யாணம் முடிந்த மறுநாளே சென்னை திரும்பி விட்டனர். பெண்வீட்டாரோ திருப்பி கொடுக்க வேண்டிய கல்யாண சாமான்கள் பாத்திரங்களையெல்லாம் சரி செய்து விட்டு மூன்றாவது நாள் திரும்பினர்.

துணிமணிகள், கல்யாண அவசியத்திற்காக சென்னையிலிருந்து கொண்டு வந்த பொருட்களென எல்லாவற்றையும் கட்டிப் பெட்டிகளாக்கிய போது ரயில் புறப்படுவதற்கு இன்னமும் ஒரு மணி நேரமே இருந்தது. பக்கத்திலிருந்த ஒரு பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைத்துவிட்டு அவசர அவசரமாக காரைப் பிடித்து ரயில் நிலையம் வந்த போது அரை மணி நேரம் ஆகி இருந்தது. பிளாட் ஃபார்மில் எல்லாப் பொருட்களையும் வைத்துவிட்டு அங்கிருந்த இருக்கையில் ரயிலின் வருகைக்காக காத்திருந்தார்கள். கன்னியாகுமரியிலிருந்து ரயில் சிறிது கால தாமதமாகவே வந்தது. இவர்கள் ஏற வேண்டிய எஸ்.8 பெட்டியும் அவர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளியே இருந்தது. ரயில் புறப்படுவதற்கு பதினைந்து நிமிடங்களே இருந்தன. தாயம்மா பாட்டியைப் பொருட்களுக்கு காவலாய் இருக்கச் சொல்லிவிட்டு மற்றவர்கள் ஒவ்வொரு பொருளாக பெட்டிக்கு கொண்டு போனார்கள். அவர்கள் எல்லாப் பொருட்களையும் பெட்டியில் சேர்க்கவும் ரயிலும் புறப்பட்டு விட ஒரு துணிப்பையுடன் தாயம்மா பாட்டி மட்டும் ரயில் நிலையத்தில் மாட்டிக் கொண்டாள். தாயம்மா பாட்டிக்கு எனன செய்வதென்றேத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் அவளிடம் மூத்த மகள் வாங்கி கொடுத்த அந்த பழைய செல்ஃபோன் அலறியது. பாட்டி பதட்டத்துடன் செல்ஃபோனை எடுக்கவும் இணைப்பு தடை பட்டது. வீட்டிற்கே திரும்பி விடலாம் என்றால் வீட்டுச் சாவி கூட ரயிலிலுள்ள பையில்தான் இருக்கிறது. அடுத்து வந்த அழைப்புகளிலும் ரயில் நிலையத்திற்கே உரிய ஒலிப் பின்னணியில் எதிர் முனை பேச்சினை அவளால் உள் வாங்க இயலாமல் பக்கத்திலிருந்த ஒரு இளைஞனின் உதவியுடன் ரயிலிலிருந்து அழைத்த மகளுடன் பேசினாள். ஒரு பயனுமில்லாத அசிரத்தையான வருத்தத்தை மகள் தெரிவித்தாள்.

'அம்மா பத்திரமா அதே இருக்கையில் இரு| கோட்டாற்றிலே நம்ம கடைக்கார பையனுக்கு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கிறேன். அவன் ஒரு மணி நேரத்திலே வந்திடுவான். அம்மா அடுத்த டிரெயின்லே அவன் கூட வந்திடு' என்றாள்.

அரை மணி நேரத்தில் அந்த கடைக்காரப் பையனும் வந்து டிக்கெட் எடுத்து பாட்டியை பத்திரமாக இருக்கையிலும இருத்தினான். அவனின் பாசம் பாட்டிக்கு சிறிது ஆறுதலைத் தந்தது. அவன் முடிந்த அளவு பாட்டியை சவுகரியமாக உட்கார வைத்தாலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கே உரிய அசவுகரியங்களை அவள் அனுபவிக்க வேண்டி இருந்தது. அதிலும் கோடை விடுமுறைக் கூட்டம் வேறு. இந்த கூட்டத்தில் யாரும் யாரையும் மிதிக்கலாம். இந்த அசவுகரியத்தில் சமத்துவமும் சகிப்புத் தன்மையும் தானாகவேப் பிறக்கிறது. எந்த வசதியுமற்ற இந்தச் சூழலில் சிலர் குறட்டை விட்டு தூங்குவதைக் காணும்போது ஆச்சரியமாக இருக்கும். வீட்டில் இவர்கள் இவ்வளவு சுகமாகத் தூங்குவார்களா என நினைக்கத் தோன்றும். நாள் முழுக்க உழைத்த அவர்களின் உழைப்பின் களைப்போ என அனுதாபம் ஒருபுறம். மற்றவர்களின் இடங்களை ஆககிரமித்து நீட்டி நிமிர்த்தி படுத்திருக்கும் அவர்களது சுய நலத்தை எண்ணி கோபிக்கும் ஒரு மனம்.

தனது எண்பது வயது வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை கண்ட அவள் ரயிலில் இன்னும் புதிய மனிதர்களை சந்தித்தாள். எல்லாவற்றையும் விட தான் பெற்று வளர்த்த மகளே மிகவும் புதிதாகத் தெரிந்தாள்.

தாயம்மா பாட்டியின் அருகில் அழுக்குத் துணிகளும் பொருட்களும் நிறைந்த பையும் குழந்தைகளுமாக ஒரு தம்பதி உட்கார்ந்திருந்தது. கைக் குழந்தை அழுது கொண்டிருக்க இன்னொரு பையன் அவனது அப்பாவின் தலை முடியை பிடித்து இழுத்து விளையாடிக் கொண்டிருந்தான். அம்மாவோ தலை வலியில் புழுவாய் துடித்துக் கொண்டிருக்க அப்பாவோ செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தார். தாயம்மா தலைவலிக்காக பையில் வைத்திருந்த ஹோமியோபதி மருந்தினை எடுத்து அநத பெண்ணிடம் கொடுத்து உதவினாள். சிறிது நேரத்திலேயே அவள் தலைவலியிலிருந்து விடுபட்டு நன்றி சொனனாள். தனது அவஸ்தை மிகுந்த இந்த பயணத்திலும் பாட்டிக்கு ஒரு திருப்தி. இந்தப் பெட்டியில் பயணம் செய்ததால் தானே இந்தப் பெண்ணிற்கு உதவ முடிந்தது என்று.

மணி அதிகாலை மூன்றாகி இருக்கும். பாட்டி உறக்கம் வந்தும் உறங்க முடியாமல் அரைத் தூக்கத்தில் இருந்தாள். அப்பொழுது ஒரு கனவு. ஒரு பெரிய பைக்குள் கீழே பாட்டியின் பிள்ளைகள் படுத்துக் கிடக்க அதன் மேல் பட்டுச் சேலைகள் போர்த்தி இருக்க பாட்டி பையின் மேல் பகுதியில் கிழிசல் சேலையுடன் படுத்து கிடந்தாள். கனவு மயக்கத்தில் களைத்த பாட்டி நிலையத்தில் நின்ற ரயிலின் ஹாரன் ஒலியில் திடுக்கிட்டு விழித்தாள். பக்கத்தில் இருந்த அந்த ஏழைப் பெண் பாட்டியின் காலைத் தொட்டு நன்றி கூறி விட்டு குடும்பத்துடன் ரயிலை விட்டு இறங்கினாள். அதற்குள் ரயில் புறப்படுவதற்கான ஹாரன் ஒலித்துவிட அநத பெண் கணவனிடம்

' நீங்க முதல்லே குழந்தையை இறக்குங்க. ரயில் புறப்பட்டாச்சு. சீக்கிரம் .... சாமான்ங்க போனாப் பரவாயில்ல கடைசியிலே எடுத்துக்கலாம் சீக்கிரமா குழந்தையை இறக்குங்க ' என்றாள்.முடியுமெனில் சுட்டுத் தள்ளு


மொழிபெயர்ப்புக் குறுங்கதை


தனக்குச் சொந்தமான சூதாட்டவிடுதியொன்றில், பொறுப்பாளராகவிருக்கும் என்ஸோ (ENZO), 25 மில்லியன் டொலர்களைக் கையாடியிருப்பதாக மாஃபியா தலைவரான கோட்ஃபாதருக்கு தகவல் கிடைத்தது.

என்ஸோ காதுகேளாத, சற்று வயதான ஒருவர். அதனால் கோட்ஃபாதர், என்ஸோவுடன் கதைக்கச் செல்வது தனது சட்டத்தரணியுடன்தான். அந்தச் சட்டத்தரணிக்கு சைகை பாஷை தெரியும்.

"என்னிடமிருந்து களவாடிய 25 மில்லியன் டொலர்களும் எங்கே?"

என்று என்ஸோவிடம் விசாரிக்கும்படி கோட்ஃபாதர், தனது சட்டத்தரணியிடம் உத்தரவிட்டார். சட்டத்தரணி, சைகை பாஷையை உபயோகித்து அந்தக் கேள்வியை என்ஸோவிடம் கேட்டார்.

'நீங்கள் என்ன கேட்கிறீர்களென்றே எனக்கு விளங்கவில்லை'

என்ஸோ சைகை பாஷையிலேயே பதில் சொன்னார்.

"நாங்கள் எதைப் பற்றிப் பேசுகிறோமென்றே அவருக்கு விளங்கவில்லையென்று அவர் சொல்கிறார்"

சட்டத்தரணி, கோட்ஃபாதரிடம் கூறினார்.

தனது கைத்துப்பாக்கியை வெளியே எடுத்த கோட்ஃபாதர், கோபத்தோடு அதனை என்ஸோவின் நெற்றியில் வைத்து,

"திரும்பவும் கேள்" என சட்டத்தரணிக்குக் கட்டளையிட்டார்.

'நீ சொல்லவில்லையென்றால் இவர் உன்னைக் கொன்றுவிடுவார்'

சட்டத்தரணி, என்ஸோவிற்கு சைகையில் சொன்னார்.

'சரி. நான் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். பணம் எல்லாவற்றையும் கபில நிற பெட்டியொன்றில் போட்டு, எனது மைத்துனன் புரூனோவின் தோட்டத்தின் கிழக்குப்பக்கமாக உள்ள மதிலிலிருந்து இரண்டு அடிகள் தள்ளி, குழி தோண்டி புதைத்திருக்கிறேன்'

என்ஸோ சைகை மொழியில் சட்டத்தரணியிடம் விவரித்தார்.

"என்ன சொல்கிறான் இவன்?"

கோட்ஃபாதர், சட்டத்தரணியிடம் கேட்டார். அதற்கு சட்டத்தரணி இவ்வாறு கூறினார்.

"இவன் சொல்கிறான். முடியுமென்றால் இவனை சுட்டுத் தள்ளட்டுமாம். அவ்வாறு சுடுமளவுக்கு உங்களுக்கு தைரியமில்லையாம்."


தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

4.6.10

குட்டிக்கதைகள்


ஒரு தேதி


வன் கதவைத் திறந்துகொண்டு படிக்கட்டில் உட்கார வந்ததுமே ஒரு பழுப்பு நிற பூனைக்குட்டி விருட்டென்று பாய்ந்தோடியது. சற்று நேரத்திற்கு முன்தான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. சுற்றிலும் ஈரம் புற்களும் சின்னஞ்சிறு செடிகளும் ஆங்காங்கே மழையில் பளிச்சென்றிருந்தன. சாலையின் இரண்டு புறங்களிளும் எதிரெதிராய் இரண்டு தெரு நாய்கள் ஒன்றையொன்று கடந்தன. மாலை மணி ஐந்திற்கே மணி ஆறுபோல் ஒளி மங்கியிருந்தது. வானத்தின் நீலம் முற்றிலும் மறைந்து கொஞ்சம் கொஞ்சம் இடைவெளி விட்டு மேகங்கள் திரண்டிருந்தன. அந்த இடைவெளியில் வெள்ளை நிற மேகங்கள் முன்முகம் காட்டிக் கொண்டிருந்தன. திடீரென்று பூனைக்குட்டி பக்கத்தில் வந்து அதனுடைய ஓசையை எழுப்பத் துவங்கிற்று. எட்டிப் பார்த்தான். உருண்டைக் கண்கள் இரண்டையும் விழித்தபடி அவனைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தது. அதனுடைய இடத்திற்கு தான் வந்து தொல்லை கொடுத்து விட்டோமோ என்று எண்ணினான். சிறிது நேரத்தில் பூனைக்குட்டி ஓடிப்போய் தூரத்திலிருந்து கத்திக் கொண்டிருந்தது. அவன் உட்கார்ந்த இடத்திற்குப் பின்னால் சிறிய கறுப்பு எறும்புகள் சென்று கொண்டிருந்தன. படிக்கட்டுகளில் இரண்டிரண்டு கோடுகளாய் கோலமாவில் போடப்பட்டிருந்தது. எறும்புகள் அவற்றையெல்லாம் கடந்து சென்று கொண்டிருந்தன.

இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தான் வேறு யாரோவாகச் செயல்பட்டு சிந்தித்துக் கொண்டிருந்தான். தான் நினைத்துக் கொண்டிருப்பதையெல்லாம் பக்கத்தில் இருந்த தென்னை மரம் கேட்டுக் கொண்டிருக்குமோ என்று தோன்றிற்று. அப்பொழுது மின்னல் ஒன்று கிழக்குப்புற வானில் பளிச்சிட்டது. திடீரென்று நான்கு சிறு பறவைகள் இரண்டு காகங்களுடன் அணிவகுத்துச் சென்றன. அவன் குறித்து வைத்திருந்த நாளில் அப்படி ஒன்றும் பெரிதாக நடக்கப் போவதில்லையோ என்று தோன்றிற்று. ஒரு கணம், நடந்தால் என்னவெல்லாம் ஆகும் என்று மனக்கணக்கு போட ஆரம்பித்தான்.

உறக்கத்திலிருந்து அவன் விடுபடுகிறான். நிச்சயம் சில மாறுதல்கள் நிகழக்கூடும். மதிப்புடன் போற்றிப் பாதுகாத்தவை எல்லாம் ஒரு கணத்தில் அர்த்தம் இழந்து புதியதோர் தளத்தில் இயங்கத் தொடங்கும். அவன் அனுபவத்தில் உலகம் புதியதோர் பொருள் கொள்ளும். அவன் நினைவுகள் எல்லாம் கடந்த காலத்தில் மட்டுமே சஞ்சரித்துக் கொண்டிருக்கும். அவற்றின் மாறுபடும் பொருள்கள் மட்டுமே நிகழ் காலத்திலிருந்து எதிர் காலத்திற்கு கடந்து செல்லும்.

மேலும் சில காகங்கள் பல்வேறு திசைகளிலிருந்து கிழக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. இரண்டு பச்சைக் கிளிகள் கூவிக் கொண்டே பறந்தன.

எல்லாமே பார்ப்பதுபோல் மட்டுமே இருக்கிறது. கைகளை நீட்டித் தொட்டுப் பார்த்தான். எல்லாமே செங்கல் கட்டிடங்கள். நிச்சயம் ஏதோ தவறு நேர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. தலை நிமிர்ந்து மேலே பார்த்தான். ஆகாயம் முழுக்க அவன் பெயர். நான் இல்லை அது என்றான். உரக்கக் கூவினான். எந்தப் புறத்திலிருந்தும் எவ்வித எதிரொலியும் கேட்கவில்லை.

அவன் விழித்துப் பார்த்தபோது வேலைக்காரியின் முகம் பூதாகாரமாய் தெரிந்தது. தேதியைப் பார்த்தான். அவன் குறிப்பிட்டு வைத்திருந்த தேதி கடந்து விட்டிருந்தது.
- ஆத்மாநாம்