Skip to main content

d/b

காற்றில்

தத்தி பறக்கும்

வெள்ளை காகிதம்

சேர்வது எவ்விடம்...

வானில் இருந்து

யார் வரையும்

கோடுகள்

இம்மழை...

கோலிப் பளிங்கின்

கண்ணாடி உலகுள்

வடிவங்கள்

எப்படி...

d - ஐ b - போலவும்

b - ஐ d - போலவும்

எழுதினால் என்ன..

வேகமாக ஓடாமல்

எதற்காக சாலைகளில்

மெதுவான இந்த நடை...

கடலின் அலைகள்

எதையோ சொல்ல வந்து

ஏதும் சொல்லாததேன்...

வண்ணங்களால்

வசீகரிக்கப்பட்டு

பந்தை சுழற்றும்

சிறுமி

வண்ணங்களை

எண்ண எண்ண வளர்கின்றன நிறங்கள்.

Comments

Popular posts from this blog