Skip to main content

மொழி

மொழிதன் இருப்பைக்

கலைத்துக் கொள்வதொரு

மனப் பிறழ்வில்-ஒரு துயரம்

ஒரு மகிழ்வு-ஒரு தாங்கவொணா

கணம்

கனம் கொண்ட

மொழியின் இருப்பு

விஸ்வரூபம் பெறுகிறது கானின்

வான் மறைத்த கிளைகளோடும்

பருத்த தண்டுகளோடும்

அது தாவரச் செறிவின்

பசிய ஒளிர்வில்

மூடுண்டு விரிகிறது.

சிள்வண்டு சிறகசைப்பும்

நிசப்தம் கொத்தும்

பறவை சப்தங்களும்

மன வெளியை

நிறைத்துப் பரவ

அடர்ந்திருக்கும் சருகுகளில்

புதைந்து நடக்க

மோகம் கொள்கின்றன

கால்கள்...

பின்னும்

மொழியொரு தீராக் கானகம்!

Comments

//நிசப்தம் கொத்தும்
பறவை சப்தங்களும்//
மனதை கொள்ளை கொள்கிறது.