21.1.10

மகத்தான..சின்ன மகள்
மேடையில் பாடுகிறாள்
அழகாகப் பாடும் வரிகளில்
அம்மா இலயிப்பதில்லை
ஸ்வரம் பிறழும் போதெல்லாம்
தவறாமல் நெளிகிறாள்
பாடிய மற்ற குழந்தைகள்
அவள் நினைவிலேயே இல்லை
முடிவை அறிவிக்கும் முன்
பயந்திருக்கிறாள்
அறிவித்த பின்பு
அழத் துவங்குகிறாள்
ஆனந்தமோ அயர்ச்சியோ
அல்லது அழுபவள் மட்டும்
அறிந்த வேறெதுவோ
அம்மாவின் கைப்பிடித்து
உள்ளே நுழைந்த குழந்தை
அம்மாவைக் கைத்தாங்கி
அழைத்துச் செல்கையில்
வடகிழக்கில் பயணிக்கும்
பச்சை அம்பை
சில விரல்கள் வருடுகின்றன
4 comments:

மண்குதிரை said...

நல்லா இருக்கு தலைவரே

" உழவன் " " Uzhavan " said...

//வடகிழக்கில் பயணிக்கும்
பச்சை அம்பை//
 
புரிந்து கொள்ள இயலவில்லை

அனுஜன்யா said...

மண்குதிரை மற்றும் உழவன் - நன்றி.

@ உழவன் - சூப்பர் சிங்கர் (மகத்தான ..பாடகர்?) போன்ற நிகழ்சிகளில் அரங்கேறும் மகத்தான உணர்ச்சி குவியலில் உண்மையில் பயனடைவது அதிக இலாபம் ஈட்டும் (பச்சை அம்பு அதைக் குறிக்கிறது - ஒரு Graph வடிவத்தில்) சேனல் முதலாளிகள்தான்.

அனுஜன்யா

" உழவன் " " Uzhavan " said...

ஓ.. விளக்கத்திற்கு மிக்க நன்றி
இந்த ஜனவரி மாதத்தில் வலையில் வெளியான படைப்புகளடங்கிய நவீனவிருட்சம் இதழ் எப்போது வரும்?