Skip to main content

Posts

77 வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம் - காணொளி

  அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 77வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (12.02.2022) வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கீழ்க்கண்ட தலைப்புகளில் கவிதைகள் 10வரியிஙூருந்து 20 வரி வரை கவிதைகள் வாசித்தார்கள். 1.காற்று 2. மழை 3. மின்னல் 4.பூனை 5. காக்காய் என்ற தûப்புகளில் கவிதை வாசிக்கலாம். இந்தக் காணொளியைக் கண்டு களியுங்கள்.

கவிதையும் ரசனையும் – 26

  கவிதையும் ரசனையும் அழகியசிங்கர்  2022-02-08  -  Leave a Comment ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைதோறும் நான்கு கூட்டங்கள் நடத்துகிறேன். ஒரு கூட்டம் கவிதைக்காக..இன்னொரு கூட்டம் கதைக்காக. இதுவரை 44 கதைஞர்களின் கதைகளைப் பேசி உள்ளோம். இக் கூட்டத்திற்குக் கதைகளைக் கொண்டாடுவோம் என்று பெயர் வைத்துள்ளேன். அதேபோல் கவிதைகள் குறித்து உரையாடல், கவிதைகள் வாசித்தல் என்றும் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறேன். வேறு விதமாகக் கவிதைகளைப் புரிந்து கொண்டவர்களை என் பாணியில் வேறுவிதமான கவிதைகளை வாசிக்கக் கொண்டு வருகிறேன். இதற்கென்று ஒரு வாட்ஸ்ஸப் குழு வைத்திருக்கிறேன். அவர்களிடம் வேறு விதமா கவிதை எழுதுபவர்களைப் புகுத்துகிறேன். எப்போதும் 20 பேர்கள்தான் இதில் கலந்து கொள்கிறார்கள். இந்த முறை கவிதைக் கூட்டத்தில் இரண்டு கவிதைகளை எடுத்துக் கொண்டு அலசுவது என்று தீர்மானித்தோம். ஒன்று ‘வியாதி அறிக்கை’ என்ற பிரமிள் கவிதை. இன்னொன்று தேவதச்சனின் ‘பொற்கணம்’ என்ற கவிதை. ஏற்கனவே இந்தக் கவிதைகளைக் குழுவிற்கு அனுப்பி விட்டேன். முன்னதாகப் படிக்கட்டுமென்றுதான். அன்று கலந்து கொண்டவர்கள் எல்லோரும் முதலில் பிரமிள் கவி...

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 28

அழகியசிங்கர்   சூம்  மூலமாக விருட்சம் நடத்தும் 28வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  சனிக்கிழமை - 05.02.2022 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. எடுத்துக்கொண்டு பேசப்பட்ட  கதைஞர்கள்  1. ஆர்.  வத்ஸலா 2. கார்த்திக் பாலசுப்ரமணியன்     (சமீபத்தில்  யுவ   புரஷ்கார்  விருது பெற்றவர்)   இந்த முறை ஆறு இலக்கிய நண்பர்கள் கதைகளைப் பற்றி உரையாடினார்கள்.   அதன் காணொளியை நீங்கள் காணலாம்.

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 27

  அ ழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 28வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை - 05.02.2022 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. எடுத்துக்கொண்டு பேசப் போகிற கதைஞர்கள் 1. ஆர். வத்ஸலா 2. கார்த்திக் பாலசுப்ரமணியன் (சமீபத்தில் யுவ புரஷ்கார் விருது பெற்றவர்) இந்த முறை ஆறு இலக்கிய நண்பர்கள் கதைகளைப் பற்றி உரையாடுகிறார்கள். நீங்களும் கலந்து கொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். Topic: விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 27 Time: Feb 5, 2022 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/81311791427... Meeting ID: 813 1179 1427 Passcode: 373921 1 Chandramouli Azhagiyasingar

இன்று கநாசுவின் பிறந்தநாள் என்று முகநூலில் பலர் பகிர்ந்திருக்கிறார்கள்.

  துளி - 239 அழகியசிங்கர் இன்று  கநாசுவின்  பிறந்தநாள் என்று  முகநூலில்  பலர் பகிர்ந்திருக்கிறார்கள்.  க.நா, சுவின்  100வது பிறந்தநாள் போது,  கநாசு  கவிதைகள் என்ற புத்தகம் ஒன்றைத் தயாரித்து எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்தேன். அப்போது நான் சீர்காழி வங்கிக் கிளையில் பணி புரிந்துகொண்டிருந்தேன். நான் கொடுத்த பலருக்கு க.நா.சு யார் என்று தெரியவில்லை.  நான் மயிலாடுதுறையில் தங்கியிருந்தேன்.  தினமும்  பேருந்தில்  அலுவலகம் செல்வேன்.  ஓட்டலில் ,  செய்தித்தாள்  கடைகளில் எல்லா இடங்களிலும் கொடுத்தேன்.  யாரும் இலவசமாகக்கூட அதை வாங்கிக்கொள்ளவில்லை.  இது பெரிய ஏமாற்றமாக  எனக்கிருந்தது . க.நா.சு எவ்வளவு பெரிய எழுத்தாளர் அவரைக் கூட யாருக்கும் தெரியவில்லையே என்று நினைத்துக்கொண்டேன். இன்று க. நா.சு . கவிதை ஒன்றை  பகிர்ந்து  கொள்ள விரும்புகிறேன்.  வேஷம் நான் அறிவாளி என்று வேஷம் போட்ட போது எல்லோரும் என்னை அறிவாளி என்றார்கள் நான், சோம்பேறியாக வேஷம் போட்டபோது எல்லோரும் என்னைச்  சோ...

76வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

  அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 76வது கூட்டம் சற்று வித்தியாசமாக அமைக்க உள்ளோம். இரண்டு கவிஞர்களின் இரண்டு கவிதைகளை எடுத்துக்கொண்டு அந்தக் கவிதைகள் மூலம் என்ன புரிந்துகொண்டோம் என்று உரையாடுகிறோம். எடுத்துக்கொண்டுள்ள கவிஞர்களின் கவிதைகள் 1. பிரமிளின் வியாதி அறிக்கை 2. தேவதச்சனின் பொற்கணம். நிகழ்ச்சி சனிக்கிழமை (நாளை 29.01.2022) 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. கவிதா ரசிகர்கள் கலந்துகொள்ள அழைக்கிறேன். Topic: 76வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம் Time: Jan 29, 2022 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/81283234168?pwd=L29LRnlXbXhJT0E3L0pOZUt5UENmdz09 Meeting ID: 812 8323 4168 Passcode: 740174

கவிதையும் ரசனையும் 25 – கசடதபற இதழ் கவிதைகள்

அழகியசிங்கர் முதல் இதழிலே கவிதைக்கென்று ஒரு முத்திரையைப் பதிவிட்டது கசடதபற.  ஒரு சமூக மாற்றத்தை கசடதபற இதழில் புதுக்கவிதை மூலம் வெளிப்பட்டது.             ஞானக்கூத்தன் ஆரம்பித்து முதல் இதழ் கசடதபற இதழில் 5 அல்லது 6 கவிதைகள் வெளிவந்திருக்கும்.  இதற்குமுன் சி. மணியின் நடை என்ற பத்திரிகை (7 இதழ்கள் வரை வெளிவந்திருக்கின்றன) புதுக்கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றன.             கசடதபறவில் முதல் இதழில் வெளிவந்த பாலகுமாரனின் புதுக் கவிதையைப் பார்ப்போம்.             ‘மனித பாவங்கள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதை.                         இரட்டைத் தடங்களில்             எதிர்ப்பட்ட ரயில்கள்             ஒன்றை ஒன்று கண்டதும்             கண் சிமிட்டிக் கொண்டன             பொறி பறந்தது        ...