Skip to main content

Posts

இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள்

அழகியசிங்கர் இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள். ஒருமுறை நண்பர்களுடன் அவரைச் சந்தித்தப் போது, அவர் பேசியது ஞாபசகத்திற்கு வருகிறது. அன்று தனக்குப் பிற்நத நாள் என்று கூறினார். கூடியிருந்த நாங்கள் அவரை வாழ்த்னோம். அப்போது அவர் சொன்னார். இன்று வரை உயிரோடு இருக்கிறேன் என்று குடும்பத்தாரிடம் சொன்னேன். அவர்கள் கண்கலங்கினார்கள் என்றார். “ உண்மையில் ஞானக்கூத்தன் வயது இப்போது 82 வயதாகியிருக்கும். எப்போதும் அவருடைய கவிதைகளைப் படிக்கும்போது ஒவ்வொரு முறையும் படிக்கும்போது புது புது அர்த்தங்கள் தொனிக்கும். பெரும்பாலோர் அவர் ஆரம்பக்காலக் கவிதைகளை மட்டும் கூறுவார்கள். புதிதாக அவர் எழுதிய கவிû8தகளைக் கூறவே மாட்டார்கள். வித்தியாசமான நான் பிற்காலத்தில் எழுதிய கவிதை ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். உணவு மேஜை என்ற கவிதையைஇங்குக் குறிப்பிட விரும்புகிறேன். உணவு மேஜை ஓவியத்தில் தெரியும் சுடரைப் பார்த்துத் தியானத்தில் உட்கார்ந்திருந்தார் சு.ரா மௌனி சுசீலா உள்ளே நுழைந்தார் சு.ரா.மனைவியைக் கூப்பிட்டு இருவருக்கும் தோசை வார்க்கச் சொன்னார் திருமதி சு.ரா. வியந்தார் மௌனி ஒருவர்தான் இருந்தார் இவரோ இருவர்க்கும் என்...

அஞ்சலட்டைக் கதை

  அழகியசிங்கர் அப்பாவுக்கு ஒரு கடிதம்.. இன்று அஞ்சலட்டை தினமாம். சில மாதங்களுக்கு முன்னால் என்னிடமுள்ள அஞ்சலட்டைகளை யாருக்கும் அனுப்பாமல் கதைகளை எழுதிக் கொண்டிருப்பேன். கிட்டத்தட்ட 40 கதைகளை எழுதி விட்டேன். புத்தகமாகக் கொண்டு வர உள்ளேன். அந்த அஞ்சலட்டைக் கதைதான் இது. மாதவன் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதினான். இரவு பத்து மணிக்கு மேல். மாயவரத்தில் அவன் தங்கியிருந்த வீட்டிலிருந்து..ஒரு கார்டில்தான். அன்புள்ள அப்பாவிற்கு, நமஸ்காரம். இந்த வாரம் ஊருக்கு வர மாட்டேன். சமீபத்தில் உங்கள் போக்கே எனக்குப் பிடிக்கவில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகளில் நான் பதவி மூப்பு அடைந்து சென்னைக்கு வந்துவிடுவேன். என் மாற்றலுக்காக ஏன் நீங்கள் நம் வீட்டின் எதிரிபிலிருக்கும் அரசியல் பிரமுகரிடம் கெஞ்சுகிறீர்கள். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. உங்களுக்கு இப்படிக் கெஞ்சுவது அவமானமாகத் தோன்றவில்லையா? என்ன பெரிய வேலை? நான் இப்போதே எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன். அதைவிடக் கொடுமை என்னவென்றால் எங்கள் சேர்மனிடம் ஊர் மாற்றும்படி தமிழில் கடிதம் எழுதிப் போட்டிருக்கிறீர்கள். இதெல்லாம் எப்படித் தெ...

69வது விருட்சம் நேசிப்புக் கூட்டம்

  01.10.2021 அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 69வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (02.10.2021) நாளை சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற உள்ளது. எல்லோரையும் கவிதை வாசிக்க அழைக்கிறேன். 1. உங்களுடைய கவிதைகளை வாசிக்கலாம் 2. மற்றவர்களுடைய கவிதைகளை வாசிக்கலாம் 3. மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்கலாம். சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 69வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: Oct 2, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/86945949909... Meeting ID: 869 4594 9909 Passcode: 845989

ரஸவாதி கதைகள் விமர்சனக் கூட்டம்

அழகியசிங்கர் சூம்  மூலமாக விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்த  ரஸவாதி  கதைகள் கூட்டம். 8  ரஸவாதி  கதைகளை எடுத்து அக் கதைகளின் நயத்தை எட்டு எழுத்தாள அன்பர்கள் சிறப்பாக உரையாற்றினார்கள். அதனுடைய காணொளியை இங்கு அளிக்கிறேன். கண்டு களியுங்கள்.

விருட்சம் - குவிகம் நடத்தும் ஆறாவது கூட்டம்

அழகியசிங்கர் சி சு செல்லப்பாவின் பிறந்த தினத்தை ஞாபகப் படுத்துகிறோம். தலைமை உரை : முத்த எழுத்தாளர் நரசய்யா உரை நிகழ்த்துபவர்கள் : 1. தமிழ் அறிஞர் கால சுப்பிரமணியன் 2. தமிழ் ஆய்வாளர் கடற்கரை மத்தவிலாச அங்கதம் 3. முனைவர் தி. செந்தமிழ்ச்செல்வி 4. முனைவர் பட்ட ஆய்வாளர் த.முத்துலட்சுமி 5. எழுத்தாளர் அழகியசிங்கள் 6. திரு செல்லப்பா மணி நன்றி உரை : தமிழ் நேசர் சிட்டி வேணுகோபாலன் Topic: சி சு செல்லப்பாவின் பிறந்த தினத்தை ஞாபகப் படுத்துகிறோம். Time: Sep 30, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/82224342142?pwd=Y2E0S01uUGVDNHJTOEFVRWE2RzlSZz09 Meeting ID: 822 2434 2142 Passcode: 783186

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 20

  அழகியசிங்கர்   சூம்  மூலமாக விருட்சம் நடத்தும் 20வது  கதை வாசிப்புக்  கூட்டம்  25.09.2021 சிறப்பாக நடந்து முடிந்தது.   வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1.  கிருஷாங்கினி  2.  ஹெச் .என்.ஹரிஹரன்  வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளை சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடி உள்ளார்கள்.  அதன் காணொளியை ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இன்றும் நாளையும் இரண்டு கூட்டங்கள்...

  25.09.2021 இன்றும் நாளையும் இரண்டு கூட்டங்கள்... அழகியசிங்கர் 1) கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 20 சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 20வது கதை வாசிப்புக் கூட்டம். இன்று (25.09.2021) மாலை 6.30 மணிக்கு. வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. கிருஷாங்கினி 2. ஹெச்.என்.ஹரிஹரன் வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகள்û சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடுகிறார்கள். Topic: விருட்சம் நடத்தும் 20வது கதை வாசிப்புக் கூட்டம் Time: Sep 25, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/89862838751... Meeting ID: 898 6283 8751 Passcode: 386195 2) ரஸவாதி கதைகள் - விமர்சனக் கூட்டம் சூம் மூலமாக விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்த ரஸவாதி கதைகள் கூட்டம். 8 ரஸவாதி கதைகளை எடுத்து அக் கதைகளின் நயத்தை எட்டு எழுத்தாள அன்பர்கள் உரையாற்றுகிறார்கள். நாளை (ஞாயிற்றுக் கிழமை - 26.09.2021) காலை 11 மணிக்கு நடக்க உள்ளது. எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். Topic: ரசவாதியின் சிறுகதைகள் Time: Sep 26, 2021 11:00 AM India Join Zoom Meeting https://us02web...