Skip to main content

இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள்

அழகியசிங்கர்



இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள். ஒருமுறை நண்பர்களுடன் அவரைச் சந்தித்தப் போது, அவர் பேசியது ஞாபசகத்திற்கு வருகிறது.

அன்று தனக்குப் பிற்நத நாள் என்று கூறினார். கூடியிருந்த நாங்கள் அவரை வாழ்த்னோம்.

அப்போது அவர் சொன்னார். இன்று வரை உயிரோடு இருக்கிறேன் என்று குடும்பத்தாரிடம் சொன்னேன். அவர்கள் கண்கலங்கினார்கள் என்றார்.
“ உண்மையில் ஞானக்கூத்தன் வயது இப்போது 82 வயதாகியிருக்கும்.
எப்போதும் அவருடைய கவிதைகளைப் படிக்கும்போது ஒவ்வொரு முறையும் படிக்கும்போது புது புது அர்த்தங்கள் தொனிக்கும்.

பெரும்பாலோர் அவர் ஆரம்பக்காலக் கவிதைகளை மட்டும் கூறுவார்கள். புதிதாக அவர் எழுதிய கவிû8தகளைக் கூறவே மாட்டார்கள். வித்தியாசமான நான் பிற்காலத்தில் எழுதிய கவிதை ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
உணவு மேஜை என்ற கவிதையைஇங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

உணவு மேஜை

ஓவியத்தில் தெரியும் சுடரைப் பார்த்துத்

தியானத்தில் உட்கார்ந்திருந்தார் சு.ரா
மௌனி சுசீலா உள்ளே நுழைந்தார்
சு.ரா.மனைவியைக் கூப்பிட்டு
இருவருக்கும் தோசை வார்க்கச் சொன்னார்
திருமதி சு.ரா. வியந்தார்
மௌனி ஒருவர்தான் இருந்தார்
இவரோ இருவர்க்கும் என்கிறார்
சு.ரா.வீட்டு சப்போட்டா மரத்தைப்
பார்த்துக் கொண்டே
மௌனி வெளியே போனார்
அவர் போன கையோடு
நகுலன் சுசீலாவோடு உள்ளே நுழைந்தார்
அப்போதும் தியானத்தில் இருந்தார் சு.ரா.
ஆனால் சு.ரா. மனைவியைக் கூப்பிட்டார்
இருவர்க்கும் தோசை வார்க்கச் சொன்னார்
திருமதி சு.ரா. இப்போதும் வியந்தார்
நகுலன் ஒருவர்தான் இருந்தார்
இவரோ இருவர்க்கும் என்கிறார்
தன் வீட்டில் மரத்தில் போல
சு.ரா. வீட்டு சப்போட்டா மரத்தில்
வாழும் பாம்பு இருக்குமோ என்று பார்த்தார்
பின்பு நகுலன் வெளியே போனார்
சு.ரா. எழுந்தார்
உணவு மேஜையைப் பார்த்தார்
அங்கே ஒருவரும் இல்லை

இக் கவிதையில் நடந்த நிகழ்ச்சி போல் ஒரு சம்பவத்தைக் கற்பனை செய்து சொல்கிறார். இதுதான் இக் கவிதையின் சிறப்பு

இதில் உள்ள எந்தக் கதாபாத்திரங்களும் இப்போது இல்லை. இதை எழுதிய ஞானக்கூத்தனும் இல்லை. ஆனால் அவர் எழுதிய கவிதை மட்டும் இருக்கிறது.

இப்போது உள்ள வாசகனுக்கு இது ஒரு கற்பனை சம்பவம் என்று தெரியும். எதிர் காலத்தில் இக் கவிதையை வாசிக்கும் வாசகனுக்கு இது நிஜமான சம்பவம் என்று நம்பக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

Comments