நான் இந்த மாதம் வரை 5 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். ஐந்தாவது புத்தகம் அசோகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு. 232 பக்கங்கள் கொண்ட தொகுப்பு இது. கதைகளும் கட்டுரைகளும் கலந்த தொகுப்பு. இத் தொகுப்பைப் படிப்பவருக்கு தெரியும். அசோகமித்திரன் எதை கதையாக எழுதியிருக்கிறார், கட்டுரையாக எழுதியிருக்கிறார் என்று. ஒரு கூட்டத்தில் ஒரு எழுத்தாளர் அசோகமித்திரன் கதை ஒன்றைப் படித்துவிட்டு அது கதை அல்ல கட்டுரை என்று உரத்து சத்தம் போட்டு வாதம் செய்தார். அசோகமித்திரன் என்ன பதில் சொல்கிறார் என்றும் எதிர்பார்த்தார். உங்கள் பார்வையில் அப்படி பட்டால் நான் இனிமேல் ஒன்றும் செய்வதற்கில்லை என்று குறிப்பிட்டார். அசோகமித்தரன் போன்ற படைப்பாளிக்கு எது கதையாக வருகிறது, எது கட்டுரைகயாக வருகிறது என்பது நன்றாகவே தெரியும். நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் கன்னிமேரா லைப்ரரியில் பழைய பத்திரிகைகளின் இதழ்களைப் பார்க்க நேரிட்டது. அப்போது ஒரு பெண் எழுத்தாளரின் கதையைப் படித்தேன். என்னால் படிக்கவே முடியவில்லை. ஆனால் அவர் பின்னால் புகழ்...