அழகியசிங்கர்  
பூக்குட்டி 
யாழி 
அவனது கையசைவில் ஒலித்த  மணி
எழுப்பி விடுகிறது பூக்குட்டியை
கோர்த்து மாலையைப்போல்”
குச்சியில் தொங்கும் பஞ்சு மிட்டாயை
விழிவிரித்து இதழ்பிரித்து
பெரும்புன்னகையுடன் ஏந்திக்கொள்கிறாள்
புசுபுசுவென இருக்கும் பிங்க்பொதியை
விரலால் தொடுகிறாள்
ஆஆ வென வாய்திறந்து
நாக்கு ரோஸ்கலராயிடுசிசே சொல்ஙூக் குதிக்கிறாள்
அந்த பிங்க் நிறச்சாலையில்
பயணிக்கத் தொடங்கிவிட்டேன் நான்
	நன்றி : கேவல் நதி - யாழி - உயரிமை பதிப்பகம் - பக்: 64 - விலை : 60. 

Comments