Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 125

அழகியசிங்கர்  


 இரு குருவிகள்


குலசேகரன்



வழி தவறிப் புகுந்த
ஒரு குருவி நீண்ட நேரமாக
சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது
நான் மையத்திலிருந்து
பறப்பதைக் காண்கிறேன்
அது இறகுகள் தொய்ந்து
எதிரில் நின்றுள்ள
கண்ணாடியின் மீது அமர்கிறது
அருகிலிருக்கும் உருவத்தை இனம் கண்டு
குனிந்து அலகால் கொத்துகிறது
குருவியின் பிம்பமும் தொடுகிறது
ஒரே புள்ளியில்
இரு அலகுகளும்
தொடர்ந்து சப்தித்துக் கொண்டிருக்கின்றன
உயிரின் சலனங்கள் உண்டாகாத பீதியில்
இடத்தை விட்டெழுந்து
அம்பாக வானில் குருவி மறைகிறது
நான் தேடிப் பார்க்கிறேன்
உள்ளே சிறகுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன


நன்றி : ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி - குலசேகரன் - உயிர்மை பதிப்பகம் 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018 - முதல் பதிப்பு :டிசம்பர் 2008 பக்கம் : 80 - விலை : 50.

Comments