Skip to main content

என்னை ஏமாற்றி விட்டார்கள்


அழகியசிங்கர்









நான் இதுமாதிரி நடக்குமென்று நினைக்கவில்லை. நான் பழைய ஏடிஎம் கார்டுகளை என் கணக்கில் த்திருந்தேன். அவற்றை புது கார்டுகளாக மாற்ற வேண்டுமென்று நினைத்தேன்.

30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என் பழைய ஏடிஎம் கார்டிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை. புதுகார்டை வாங்க வேண்டுமென்று நினைத்தேன்.

சில தினங்களுக்கு முன்னால் ஒரு செய்தி வங்கியிலிருந்து வந்தது. உங்கள் வீடு தேடி ஏடிஎம் கார்டு வருமென்று. நான் அதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். வரவில்லை.

இன்று காலை 9.24 மணிக்கு போன் வந்தது. இந்தியன் வங்கி ஏடிஎம் அலுவலகத்திலிருந்து பேசுகிறேன். உங்கள் பழைய கார்டுகளை மாற்ற வேண்டுமில்லையா என்று. ஆமாம் என்று சொன்னேன். அப்படி பேசியது ஒரு பெண்.

உங்கள் பழைய கார்டு எண்ணை சொல்லுங்கள் என்றாள். நான் அவசரம் அவசரமாக இரண்டு பழைய கார்டு எண்களைச் சொன்னேன். எனக்கு புது ஏடிஎம் கார்டுகள் வாங்க வேண்டுமென்ற அவசரம். ஒரு கார்டு நவீன விருட்சம் கணக்கு. இன்னொரு கார்டு நானும் சகோதரனும் சேர்ந்த வைத்துள்ள கணக்குக் கார்டு.

உங்களுக்கு ஒரு ஓடிபி வரும். அதைச் சொல்லுங்கள் என்றாள்.

நீங்கள் யார் இந்தியன் வங்கிதானே என்றேன்

ஆமாம் என்றாள்.

என் செல் போனில் ஒரு செய்தி வந்தது.
அது இதுமாதிரி எழுதப்பட்டிருந்தது.

Rs. 9999.00 spent on POS/Ecom using IB Debit card on 02/07/2019 09.33 at Pay*WWW OLACABS Com Gurgaon from A/c XXX584636.
என்று.

உடனே போன் பேசியவள் அவசரப்பட்டு ஒடிபி எண்ணைக் கேட்டாள். நானும் என்னை ஏமாற்றுகிறாள் என்று புரியாமல் கூறிவிட்டேன். இது மாதிரி இரண்டு முறை நடந்தது.

அதன் பின் தான் எனக்கு சந்தேகம் வந்தது. என்னை ஏமாற்றுகிறாள் என்று. நான் உடனே மேற்கு மாம்பலம் இந்தியன் வங்கிக்குச் சென்று நான் இதைப் பற்றி வங்கி மேலாளரிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன்.

அதற்குள் என் கணக்கிலிருந்து இரண்டு முறை பணம் டெபிட் ஆகிவிட்டது. நான் தாமதமாக சுதாரித்துக்கொண்டதால் ஐந்து முறை அதுமாதிரி பண்ணியிருந்தது தப்பித்தது.

நான், உங்கள் பெயர் என்ன? என்று கேட்டேன்.,

அருணா என்றாள்

என்னவாக இருக்கிறீர்கள் என்றேன்

ஏடிஎம்மில் என்றாள்.

எந்த இடம் என்றேன்.

தலைமை அலுவலகம் என்றாள்.

நான் ஏமாந்து விட்டேன் என்பதை மேற்கு மாம்பல கிளை அலுவலகத்திற்கு வந்தபிறது தெரிந்து கொண்டேன். நல்ல காலம் என்னுடைய இன்னொரு கணக்கிலிருந்து பணம் எடுக்கவில்லை.

நவீன விருட்சம் எணக்கே குருவி சேர்க்கிற மாதிரி சேர்கிற கணக்கு. நான் போடுகிற புத்தகங்களிலிருந்து வருகிற பணத்தை திரும்பவும் புதிய புத்தகங்கள் போட பயன் படுத்துவேன். அந்தக் கணக்கி7ல் உள்ள பணத்தை எடுத்துக் கொள்வதில்லை. அதில் புத்தகம் பத்திரிகை நடத்தப் பயன்படுத்துவேன். என் முட்டாள்தனம் நான் ஏமாந்து விட்டேன்.

இதை ஏன் இங்கு பதிவு செய்கிறேன் என்றால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக.

யாராவது 6204482165 என்ற தொலைபேசியிலிருந்து போன் செய்தால் எச்சரிக்கையாக இருங்கள்.

நான் இதோ க்ரைம் ப'ôரஞ்சில் புகார் கொடுக்கப் போகிறேன். இந்தப் பணம் எனக்குக் கிடைக்காது என்ற முழுநம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் புகார் கொடுக்க உள்ளேன். பழைய கார்டு புது கார்டு குழப்பம் இருக்கிறது. புது கார்டு வேண்டும் என்கிற அவசரத்தால் நான் எமாந்து போனேன். இத்தனைக்கும் நான் வங்கியில் 33 வருடங்கள் பணிபுரிந்தவன்.

என் வங்கியில் என்னுடன் பணி புரிந்தவர்கள் இதை அறிந்தால் என்னை கிண்டல் செய்வார்கள். அவர்கள் கிண்டலை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.

Comments