Skip to main content

துளி : 22 - புத்தகக் காட்சி எண் 403


அழகியசிங்கர்





42வது சென்னைப் புத்தகக் காட்சியில் என் கடை எண் 403.  எப்போதும் எனக்கு முதல் வரிசையில்தான் கடை கிடைக்கும்.  அல்லது கடைசி வரிசையில் கிடைக்கும்.  இந்த முறை நடுவில் கிடைத்துள்ளது.  
கடை எண்ணைக் கூட்டினால் 7 வருகிறது.  7ஆம் எண் ஒரு நல்ல எண்.  புத்தகங்கள் நன்றாக விற்குமென்று நம்புகிறேன். விருட்சம் வெளியீடாகக் கிட்டத்தட்ட 10 புத்தகங்கள் கொண்டு வருகிறேன்.  நான் எழுதிய புத்தகங்கள் 4ம் தொகுத்தப் புத்தகம் ஒன்றும் கொண்டு வருகிறேன்.  
என் புத்தகங்கள் விற்பது ஒருபுறம் இருந்தாலும் மற்றப் பதிப்பாளர்கள் கொண்டு வரும் புத்தகங்களை வாங்குவதிலும் ஆர்வமாக இருப்பவன்.  
புத்தகக் கண்காட்சி ஒட்டி புகைப்படங்கள் எடுப்பது, கூட்டங்கள் நடத்துவது என் பொழுது போக்கு.  எல்லோரும் என் கடைக்கு வரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments