Skip to main content

துளி : 17 - தமிழ் வளர்த்த சான்றோர்...



அழகியசிங்கர்





மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்பில் வ வே சுவும் தஞ்சாவூர் கவிராயரும் எழுத்தாளர் படைப்பாளி சுந்தர ராமசாமியைப் பற்றி  உரை நிகழ்த்தினார்கள்.  தி நகரில் கிருஷ்ணகானசபா பின்னால் வீற்றிருக்கும் காமகோடி ஆடிட்டோரியத்தில்  கூட்டம் நடைபெற்றது.
இப்படி ஒவ்வொரு மாதமும் கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்களில் முக்கியப் பங்கு வகுப்பவர் சுப்பு அவர்கள்.  தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை என்ற நாவல் அது வெளி வந்த ஆண்டில் சாகித்திய அக்காதெமி பரிசுபெற எல்லாத் தகுதியும் பெற்றிருந்தும்,  அதற்கு எந்தப் பரிசும் கிடைக்கவில்லை. அப்போது பரிசு கிடைப்பதற்கான பேச்சை அந்த நாவல் உருவாக்கியிருந்தது.  
மௌனி என்ற எழுத்தாளர், சுந்தர ராமசாமியின் இந்தப் படைப்புக்குப் பரிசு கிடைக்கக் கூடாதென்று சாபம் இட்டதாகப் பேச்சாளர்களில் ஒருவர் குறிப்பிட்டார்.
உண்மையில் அதுதான் நடந்தது.  கடைசிவரை  சுந்தர ராமசாமிக்கு எந்தப் பரிசும் கிட்டவில்லை.  
அவர் வாழ்ந்த 8 ஆண்டுகளில் சுந்தர ராமசாமி 40000 கடிதங்களுக்கு மேல் எல்லோருக்கும் கடிதங்கள் எழுதியிருப்பதாகவும் தகவலைப் பகிர்ந்துகொண்டார்கள்.  இக் கடிதங்களும் புத்தகமாக வரவில்லை. 
இதுமாதிரியான கூட்டங்கள் தொடர்ந்து நடப்பதை நான் வரவேற்கிறேன்.   இன்றைய சூழ்நிலையில் தமிழ் எழுத்தாளர்கள் பெயரைக் கூட உச்சரிக்காமல் இருட்டடிப்பு செய்துவிடுவார்களோ என்று தோன்றுகிறது.  இந்த நிலை முழுவதும் மாற வேண்டும்.
ஏனோ எல்லோரும் ரசித்த சுந்தர ராமசாமியின் üகொள்கைý என்ற கவிதையைக் குறிப்பிடவில்லை என்பது தெரியவில்லை. 


மேற்கே
ரொமான்டிசிஸம்
நாச்சுரலிஸம்
ரியலிஸம்
அப்பால் 
இம்பிரஷனிஸம்
என் மனைவிக்குத் 
தக்காளி ரஸம்.

அப்பால் 
ஸிம்பலிஸம்
கூபிஸம்
ஸர்ரியலிஸம்
மீண்டும்
வெறும்
ரியலிஸம்

அப்பால் 
அதற்கும் 
அப்பால்?
சொல்லும்
எட்மண்ட் வில்சன்
நீர் சொல்லும் கனிவாய்.
சொல்லும்
மிஸ்டர் பிரிச்செட்
நீர் சொல்லும்
தயைகூர்ந்து


ஸôத்ரேக்கு
எக்ஸிஸ் -
டென்ஷலிஸம்
காமுவுக்கு
இன்னொன்று
பின்னால்
வேறொன்று.
காமுவின் விதவைக்கு
மற்றொன்று.
பிறிதொன்று 
அவள் அருமைப் 
பாட்டிக்கு.

கரடிக்கு கம்யூனிஸம்
கதர்க் குல்லா சோஷலிஸம்
டாலர் ஹ÷மனிஸம்
பீக்கிங்கு
என்ன?
சொல்லும் 
ஏ.ஐ.ஆரே
சொல்லும் 
மிக விரைவாய்.

நாம எல்லாம்,
டமில் எழுத்தாளர்
நமக்கோ 
பிளேஜியரிஸம்







Comments