தினமணி கதிரில் என் கதையைப் படிக்கவும்
அழகியசிங்கர்
 இன்று தினமணி கதிரில் என் கதை 'ஆண்களைப் பார்த்தாள் நம்ப மாட்டாள்,' என்ற கதை பிரசுரமாகி உள்ளது.  தினமணி-எழுத்தாளர் சிவசங்கரி  சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசுப் பெற்ற கதை.  இது ஒரு வித்தியாசமான கதை.  இதைப் படித்து உங்கள் கருத்துக்களை கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்.  கருத்தைப் பகிர்ந்தால் எனக்கு ஒரு துளி சந்தோஷம் கிடைக்கும்.
 ஒரு விதத்தில் இந்த தினமணி கதிரை நான் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்.  ஏன்னென்றால் அட்டையில் பாலகுமாரன் படத்துடன் இதழ் வந்துள்ளது.
 முன்பு ஒரு முறை தினமணி கதிரில் என் கதை வந்திருந்தது.  அந்தத் தினமணி கதிரில் அட்டையில் எம்.ஜி.ஆர் படம்.  அது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு.

Comments