நண்பர்களே,
 விருட்சம் நடத்தும் 36வது கூட்டம் இது.  எழுத்தாளர் சா கந்தசாமி என் நெடுநாளைய நண்பர்.  எந்தப் பந்தாவும் இல்லாத அதே சமயத்தில் திறமையான எழுத்தாளர்.  
 இன்று மாலை ஆறு மணிக்கு சுனில் கிலநானியின்  இந்திய என்கிற கருத்தாக்கம் புத்தகம் பற்றி பேசுகிறார்.  
 இந்தப் புத்தகம் பற்றி சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன்.  üஐடியா ஆப் இந்தியாý என்ற ஆங்கில நூலிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் அக்களூர் இரவி. 336 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.315.  ரூ.260 க்கு இப் புத்தகம் கூட்டம் நடக்கும் இடத்தில் விலைக்குக் கிடைக்கும்.  ஆங்கிலத்தில் இப் புத்தகத்தைப் படித்த முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம், இது மாதிரியான புத்தகங்கள் தமிழில் வருவது நல்லது என்று குறிப்பிட்டிருக்கிறார்.  

Comments