நீங்களும் படிக்கலாம்....23 அழகியசிங்கர் கோட்பாடு ரீதியாக ஒரு புத்தகத்தை அணுகுவது எப்படி? எம் டி முத்துக்குமாரசாமி எழுதியுள்ள 'நிலவொளி எனும் இரசசிய துணை என்ற கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும்' என்ற புத்தகத்தைப் படித்தேன். முன்னுரையில் 'இலக்கியம் பெரும்பாலும் பிரக்ஞையின் கரை உடையும் தருணங்களையே வாசக அனுபவமாக்குகிறது என இலக்கியப் பிரதி பற்றி எனக்கொரு கருத்து உண்டு' என்று குறிப்பிடுகிறார் எம் டி எம். இதை கடந்த முப்பது வருட இலக்கியக் கோட்பாட்டு வாசிப்புகளிலிருந்து அவர் அணுக்கமாகப் பெற்ற பார்வையாகும் என்கிறார். இதைச் சாதாரண வாசகனே அவன் படிப்பனுவத்திலிருந்து உணர முடியாதா? இத் தொகுப்பில் உள்ள கட்டுரை ஒன்றில் சுப்பிரமணிய பாரதியார் மகா கவியே என்பதை நிரூபிக்கிறார் எம் டி எம். இக் கருத்தை ஜெயமோகனுக்கு பதிலாக தெரிவிக்கிறார். அப்படி சொல்லும்போது பாரதியார் கவிதைகளில் பிரஞ்ஞையின் கரை உடையும் தருணங்கள் வாசக அனுபவமாக எளிதில் வசப்படுகின்றன என்கிறார். பாரதியார் குறித்து அவர் கூறும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்....