முத்தச் செய்திகள்
வே மாலி
கென்னடி விமான நிலையம்
இன்னுமோர் சிறப்பு பெற்றது;
மூன்றழ கியபெண் களுக்கு
நன்றிசொல் லவேண்டும், மாலி
பெற்றோர் வரும்வரைக் காத்து
நிற்கும் பொழுதை இலவசத்
தோற்றம் தருவதில் போக்கச்
சற்றும் சகியா அழகியர்
வெற்றிகொ டுக்கும்
அற்புத மான
விற்பனைத் திட்டம்
கற்பனை செய்தார்.
தங்கள் விளம்பர மாக
இங்கே முத்தம் கிடைக்கும்
ஒன்றின் விலை ஒரு டாலர்
என்னும் செய்திப் பலகை
காட்டி யவுடன், டாலரை
நீட்டி யபடி, நாக்கைத்
தீட்டி யபடி, ஆண்கள்
கூட்டம் வளைத்துக் கொண்டது.
ஐந்து மணித்து ளிகளில்
நான்கு டாலர் திரட்டி
நின்ற நேரம்; விரைந்து
வந்த அதிகா ரிகள்தலை
யிட்டுத் தடைவி தித்து
விட்டுத் திரும்பிச் சென்றார்
என்கி றதொரு செய்தி
என்றான் பெரிய சாமி.
மற்றொ ருத்தச் செய்தி
தர்ம நிதிகு விப்ப
தற்கா கஒரு மெத்த
உற்சா கமான போட்டி.
நின்ற நிலையில்
ஒன்றி யஇதழ்
ஒன்றி யபடி
என்ப துவிதி.
பத்தொன் பதாண்களும் பெண்களும்
முத்தத் தொடங்கினர். யாவரும்
முத்தத் தொடங்கிய கொஞ்ச நே
ரத்தில் சலித்தனர். ஆனால்
ஜென்னியும் டேவிடும் தொண்ணூற்
றைந்தும ணித்துளி நாற்பத்
தைந்துவி நாடிகள் முத்தி
வென்றனர், எப்படி என்றேன்.
உல்விச் போட்டி தானே?
நல்ல போட்டி, புதிய
கல்விச் சூழலுக் கேற்ற
நல்ல போட்டி என்றான்
நல்ல வேளை, இந்த மாதிரி
வல்லு நர்கள் அந்த நேரம்
ஒன்று சேரவில்லை கைக்கு
நான்கு டாலர் வந்த தென்றேன்.
நல்ல வேளை இதைவிட
நல்ல போட்டி இருக்கிற
தல்ல வா, அதை வைக்கா
மல்விட் டார்களே என்றான்.
* பார்க்க : தினமணி
20.02.70 : முத்த வியாபாரம் (நியூயார்க்)
04.03.70 : முத்தப் போட்டி (லண்டனில் உள்ள பாலிடெக்னிக்
எ ஏ ஐ ஒ
ஓ ஒள
ஃ
ள ஃ
Comments