Skip to main content

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு) - 6



    வட்டம் 1

    வாழ மனமில்லை
    சாக இடமில்லை

    வானில் மேகமில்லை
    ஆனால்
    வெயிலும் மடிக்கவில்லை

    கந்தைக் குடைத்துணி
    யெனக்
    கிடக்கும்
    தன்னினமொன்றைச்
    சுற்றிச்சுற்றி வருமிக்
    கறுப்பின்ஓலம்போல்

    செத்துக் கிடக்கும்
    சுசீலாவை
    வட்டமிட்டு
    வட்டமிட்டு
    வட்டமிட்டு.......

                        நகுலன்

Comments