Skip to main content

தூக்கம்





இரவு நேரங்களில்
தூக்கம் வருவதில்லை
எழுந்து உட்கார்ந்து விடுவேன்

பின்
திரும்பவும் படுத்துக்கொண்டுவிடுவேன்
லைட் எதுவும் போடுவதில்லை
மின்விசிறி மாத்திரம்
சுற்றிக்கொண்டிருக்கும்

சன்னமாய் விளக்கு வெளிச்சம்
ஹாலை நிரப்பிக்கொண்டிருக்கும்
எதையும் யோசனை செய்யாமல்
யோசனையைத் துரத்திக்கொண்டிருப்பேன்

பின்
தூங்கு என்று கண்ணை மூடிக்கொள்வேன்
தூக்கம் வருவதில்லை
கனவை வாவென்று கூப்பிட்டாலும்
கனவும் வருவதில்லை

உடம்பு எப்படி விரும்புகிறதோ
அப்படி இருந்துவிடலாமென்று
யோசிக்கும்போது
தூக்கம் மெல்ல கண்ணைச் சுழற்றும்.


 

Comments

ஒத்துழையாமையே தூக்கத்திற்கு எப்போதும் ஒத்துவரும் போல் இருக்கிறது.
தூக்கமும் கண்களைத் தழுவிய பகிர்வு..
Anonymous said…
சுகமான உணர்வு. இதே பொன்றதொரு theme - இல் ஒலிக்கும் இந்த கவிதையை படித்துப்பாருங்கள். http://wp.me/pP1C7-6R