சா கந்தசாமி யைத் தொடர்ந்து யவனிகா ஸ்ரீராம் . எதைப் பேசினாலும் கருத்து முரண்பாடு இக் கூட்டங்களில் முக்கியமான அம்சம் . அப்படி இருந்தால்தான் கூட்டம் சிறக்கும் . பேசுபவரின் கருத்தையை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது இல்லை . பேசுபவர் புதிய எல்லையில் கேட்பவரைக் கொண்டு செல்கிறார் . அதை வைத்துக்கொண்டு மற்றவர்கள் சிந்திக்கிறார்கள் . யவனிகா ஸ்ரீராமை தற்போதைய கவிதைகளைப் பற்றி பேசும்படி கேட்டுக்கொண்டேன் . அவர் இன்றைய நிலையில் கவிதைகள் எப்படியெல்லாம் வெளி வருகின்றன என்று பேச ஆரம்பித்தார் . இன்றைய கவிதையில் குடும்பம் இல்லை என்றார் . யாரும் குடும்பத்தைப் பற்றி கவிதைகள் எழுதுவதில்லை என்றார் . குடும்பத்தோடுதான் எல்லோரும் இருக்கிறோம் . ஆனால் யாரும் குடும்பத்தை கவிதையில் கொண்டு வரவில்லை என்றார் . என்னால் இக் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை . என்னைப் போன்ற பலரின் கவிதைகளில் குடும்பம்தான் கருப்பொருளாக உள்ளது . என் ஆரம்ப கவிதையில் அம்மா இல்லாத குடும்பத்தைப் பற்றி எழுதியிருப்பேன் . வயது முற்றிய பாட்டியை முற்றத்தில...