Skip to main content

பூட்டிய வீட்டினுள் அலையும் தனிமை



பூட்டிய வீட்டினுள்
மெல்ல மெல்ல
உருவம் பெற்று அறை அறையாய்
அலைய தொடங்குகிறது
வீட்டின் தனிமை
விட்டெறிந்த காலுறையின்
நெடி சுவாசித்து
கழிவறையின் மூத்திர
நாற்றம் நுகர்ந்து
நாள்முழுதும் வலம் வந்த அது
பின்னிரவில் திரும்பும்
என் கரம்பற்றி
அமர்த்தி சொல்ல ஆரம்பிக்கிறது
மதியம் ஜன்னல்கண்ணாடிக் கொத்தி
அதனுடன் பேசிச் சென்ற
சிட்டுக்குருவி ஒன்றின் கதையை!

Comments

அருமையான கவிதை. வாழ்த்துகள் ப்ரியன்
Anandaraj said…
நல்ல கவிதை அன்பரே.