Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 153

 மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2

- 153


அழகியசிங்கர்


வீட்டுக்குள் வீடுகள்

ஆர்.புருஷோத்தமன்


மூலை முடுக்குகளெங்கும்
நூலாம்படை அமைத்து
மௌனமாய் அமர்ந்திருந்தன
சிலந்திகள்
வாசல் சரிவின்
ஓடுகளின் பொந்துகளில்
கிரீச்சிட்டு நுழைந்தன சிட்டுக்குருவிகள்
உள்மண்ணை வெளித்தள்ளி
அங்குமிங்குமாய் எறும்புகள் சில
இன்று புதிதாய்
இருக்கும் இடத்திற்குச் “
சொந்தக்காரன் யாரென்று
குழம்பியிருந்த போது
வீட்டுக்கு வரியென்றும்
விளக்குகள் கட்டணமென்றும்
ஒலிபெருக்கியில் சொல்லியபோதுதான்
அறிந்து கொண்டேன்
இருக்கும் வீடு எனதென்று


நன்றி : மரங்களுக்காகவும் சில வீடுகள் - ஆர். புருஷோத்தமன் - விடியல் வெளியீடு, 6 கைலாசபுரம், முதல் தெரு, மேற்குத் தாம்பரம், சென்னை 600 045 - பக்: 80 - விலை: ரூ.25 - பதிப்பாண்டு: 2002

May be an image of 1 person
Like
Comment
Share
Comments

Comments