30.12.2020 துளி : 167 அழகியசிங்கர் இன்று ரமண மகரிஷி அவதரித்த தினம். கடந்த சில நாட்களாகச் 'சரிதமும் உபதேசமும்' என்ற புத்தகத்தின் 3வது பாகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். கோயிலுக்குப் போய் கடவுளைக் கும்பிடுவதை விட ஆன்மிகமாகச் செல்வதை நான் விரும்புவேன். அதனால் ரமணர், (அரவிந்தர் எனக்குப் புரியாது) ஆனால் அன்னையைப் புரியும்) ஜே கிருஷ்ணமூர்த்தி, யூ ஜி கிருஷ்ணமூர்த்தி, சீருடி சாய்பாபா, நிசகர்தத்தா மஹாராஜ் , ஓஷோ என்றெல்லாம் ஆன்மிகவாதிகளை நம்புவேன். அவர்கள் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது, அவர்கள் சொன்ன தத்துவங்களைக் கேட்பது என் வழக்கம். அவர்களைப் படிப்பதால் அரிய ஆன்மிகத் தகவல்கள் கிடைக்குமா என்று பார்ப்பேன். அதனால்தான் ஒரு கதைப் புத்தகத்தைப் படிப்பதை விட இதைப் படிப்பதில் விருப்பப்படுவேன். என்னிடம் ஏராளமான ஆன்மிகப் புத்தகங்கள். மனம் சோர்வாக இருக்கும்போது இந்தப் புத்தகங்களைப் படிக்கும்போது உற்சாகமாகிவிடுவேன். அவர்களைப் பற்றி எழுதப்படுகிற தகவல்களை நான் நம்புகிறேனோ இல்லையோ, நிறையச் சுவாரசியமாக இருக்கும் படிப்பதற்கு. ஸ்ரீ ரமணரின் சரிதம் படித்தால்,