அழகியசிங்கர் அதிகமாகக் கவிதைகளைப் பற்றிச் சிந்திப்பவர் ஞானக்கூத்தன். கிட்டத்தட்ட 700 கவிதைகள் வரை அவர் வாழ்நாள் முழுவதும் எழுதியிருக்கிறார். இதைத் தவிரக் கவிதையைப் பற்றி தன் கருத்துக்களையும் பதிவு செய்திருக்கிறார். பலருடைய கவிதைகளைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறார். கவனம் என்ற சிற்றேட்டுக்கு ஆசிரியராக இருந்து 7 இதழ்கள் கொண்டு வந்துள்ளார். இந்தச் சிற்றேடு மார்ச்சு 1981ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆனால் யாருக்காவது அவர் கதை எழுதியிருப்பது தெரியுமா? கண்ணீர்ப்புகை என்பதுதான் அவர் சிறுகதை. ரங்கமணி என்ற பெயரில் கவனம் இரண்டாவது இதழில் எழுதி உள்ளார். அந்தக் கத 1981ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த ஒரு சிறுகதையைத் தவிர அவர் வேற எதுவும் எழுதவில்லை. ஒரு இலக்கியத் தரமான கதை என்றால் அந்தக் கதையைத்தான் சொல்ல வேண்டும். ஒரு முறைக்கு இருமுறை படித்தால்தான் கதையைப் புரிந்து கொள்ள முடியும். அந்தக் கதையைப் பார்ப்போம். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு இடத்திற்குப் போகத் தயாராக இருக்கிறார்கள்....