Skip to main content

அழகியசிங்கர் கதைகள்

அழகியசிங்கர்



விருட்சம் வெளியீடாக 'அழகியசிங்கர் கதைகள்' என்ற பெயரில் என் முழுத் தொகுப்பைக் கொண்டு வர உள்ளேன்.  வருகிற 12ஆம் தேதி புத்தகம் தயாராகிவிடும்.  650 பக்கங்களுக்குக் குறையாதப் புத்தகமாக வருகிறது.  64 சிறுகதைகள், 7 குறுநாவல்கள், 1 நாடகம், ஐந்தாறு சின்னஞ்சிறு கதைகள்.   நான் முதன்முதலாக எழுதிய கதையிலிருந்து இப்போது எழுதி இருக்கும் கதை வரை கொண்டு வந்திருக்கிறேன்.  எப்படி கதை எழுத வந்தேன், எப்படி கதையை எழுதுகிறேன் என்று ஒரு கட்டுரை தயார் பண்ணி எழுதி முடித்திருக்கிறேன்.  இதுவரை விருட்சம் வெளியீடாக கெட்டி  அட்டைப்போட்ட புத்தகமாக எதையும் நான் கொண்டு வந்ததில்லை.  மேலும் இவ்வளவு பக்கங்களுக்கு எந்தப் புத்தகமும் கொண்டு வந்ததில்லை.  என்னுடைய முழு கதைத் தொகுதியை இவ்வாறு கொண்டு வருகிறேன்.   இன்னும் சில தினங்களில் புத்தகமும் தயாராகிவிடும். இது சம்பந்தமாக எளிமையான கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளேன்.  

       6 குறுநாவல்கள் கணையாழியில் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.  'அங்கிள்' என்ற என் சிறுகதைக்கு கதா விருது கிடைத்திருக்கிறது.  

650 பக்கங்களுக்கு மேல் உள்ள  இப் புத்தகத்தின் விலை ரூ.600.  ஆனால் 12ஆம் தேதிக்குள் வாங்குபவர்களுக்கு ரூ.300 க்குத் தர உத்தேசித்துள்ளேன்.  தபால் செலவு அதிகமாகும் என்பதால், சென்னையில் உள்ளவர்கள் புத்தகக் காட்சியின்போது விருட்சம் ஸ்டாலில் வந்து வாங்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கீழ்க்கண்ட கணக்கில் பணத்தைச் செலுத்தி எனக்குத் தகவல் அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  முன்பே என் அறிவிப்பைப் பார்த்து பணம் செலுத்தியவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Name of the Account : NAVINA VIRUTCHAM, 
BANK :   INDIAN BANK, ASHOKNAGAR BRANCH.
ACCOUNT NUMBER  No. 462584636      
`IFSC CODE : IDIB 000A031     
Telephone Nos. 9444113205 and 9176613205

Comments