அசோகமித்திரனின் கூட்டம் அழகியசிங்கர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மிக மோசமான மாதம். 3ஆம் தேதி, என் திருமண நாள். ஆனால் அதை மகிழ்ச்சியாக நினைத்துக்கொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் முடிந்துவிட்டன திருமணம் ஆகி. ஒவ்வொரு ஆண்டும் என் மாமியார் சுப்புலட்சுமி அவர்கள் வாழ்த்தாமல் இருக்கமாட்டார். இந்த முறை அவர் நினைவு தப்பிப்போய் மருத்துவமனையில் மோசமான நிலையில் கிடந்தார். 5ஆம்தேதி அவர் இறந்து விட்டார். எதிர்பாராதவிதமாய் சோடியம் குறைந்துவிட்டதால், நினைவு தப்பிப் போய்விட்டது. சில தினங்களாக சரியாக நடக்க முடியாமல் கால் நரம்பை எதோ பிடித்து இழுக்க, நாற்காலியைப் பிடித்துக்கொண்டு தள்ளி தள்ளி நகர்ந்தார். ஒவ்வொரு முறை குளிக்கும்போதும், பாத்ரூம் போகும்போதும் தடுமாறினார். ஆனால் கீழே விழாமல் ஜாக்கிரதையாக இருந்தார். தினமும் அவர் உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. ஒருநாள் அவர் சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்தார். ஒருநாள் இரவு நினைவுத் தப்பிப்போய் திவான் படுக்கையிலிருந்து கீழே விழுந்து முகம் நன்றாக வீங்கிவிட்டது. ரத்தம் கொட்டோ கொட்டென்று கொட்டியது. ஆனால் அவர் நினைவுத் தப்பிப் ப