காலையில் அப்பா என்னைப் பார்த்துச் சொன்னார். ஒரே மயக்கமாக இருக்கிறதுடா? நான் கேட்டேன். ''எப்போது?'' ''எப்போதும்தான்.'' ''டாக்டர்கிட்டே போகலையா?'' ''போனேன். அவன் சொல்லிட்டான். இனிமேல் மருந்தெல்லாம் வேண்டாமாம்.'' அப்பாவிற்கு 90 வயது. நினைச்சே பார்க்க முடியாத வயது. எனக்கு 59. பயங்கர தடுமாற்றம். சென்னைக்கு வந்தபிறகு சென்னையே புரியவில்லை. மாம்பலத்திலிருந்துத திருவல்லிக்கேணிவரை டூவீலரில்தான் போக முடிகிறது. வரும்போது, பயங்கர கூட்டம். வண்டியில் பறக்க முடியாது. நடந்துதான் போகமுடியும். நான் வந்தவுடன், தினமும் எனக்குப் பிடித்த நடேசன் பூங்காவில் நடக்க ஆரம்பித்தேன். வேகம். சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டும் என்று. காலையில் 7.45க்கு ஒரு லைட்டா டிபன் சாப்பிட்டு மதியம் சாப்பாடு எடுத்துக்கொண்டு போவேன். மதியம் 2 மணிக்குத்தான் சாப்பிடுவேன். அதற்கு முன் குறைந்தது 3 காப்பிகளை விழுங்குவேன். மாலை வீடு திரும்பும்போது ஒரு மாதிரியாகிவிடும். பேசாமல் சீர்காழிக்கே போய்விடலாமா என்று தோன்றும். அதேபோல் நான் அடிக்கடி சந்தித்த