Skip to main content

லதாமகன் கவிதை

குட்டி மீனைப்போல்
வாய்திறந்து பாடத்தொடங்குகிறாள்
சந்தியாக்குட்டி
ஸ்வரங்கள் தப்பிய
குரலுக்கு ஏற்ப
தன் ஸ்வரங்களை மாற்றிக்கொள்கிறது
இசை
o
டம் டம் சத்தத்தில்
ஆடத் தொடங்கும் கால்கள்
சந்தியாவுடையவை.
ஆடிமுடித்து
அப்பா என ஓடி வந்து
வெட்கத்துடன்
அணைத்துக் கொள்ளும்போதுதான்
முழுமையடைகிறது
எனக்கான நடனம்.
o
நீரை அள்ளி
கடலுக்குள் தெளித்துக் கொண்டிருக்கிறாள்
சந்தியாக்குட்டி
ஸ்பரிசங்களில் தன்
பிறப்பிடம் அறிகிறது
முன்னாள் மழை.
o
பப்லுக்குட்டிக்கு மம்மு என
பொம்மைக்கு
புட்டிப்பால் ஊட்டுகிறாள்
சந்தியாக்குட்டி
அகலச் சிரித்து
உடலெங்கும் பாலாகிறது
பப்லுகுட்டி.
o
எங்கள் எல்லோரையும்போல்
நடித்துக் காட்டுவாள்
சந்தியாக்குட்டி
அவளைப்போல்
வாழ்வதற்கு
இன்னும் யாரும் பிறக்கவில்லை.
oOo

Comments

நல்ல கவிதை.... இந்த பரபரப்பான உலகில் இந்தக் குழந்தையைப் போல் வாழ்க்கை எல்லாக் குழந்தைக்கும் கிடைத்து விடுவதில்லை
குமரி எஸ். நீலகண்டன்
அத்தனையும் அட்டகாசமா இருக்கு.
நன்றி நண்பர்களே!
http://silarojakkal.wordpress.com
ஆதி said…
This comment has been removed by the author.
ஆதி said…
//குட்டி மீனைப்போல்
வாய்திறந்து பாடத்தொடங்குகிறாள்
சந்தியாக்குட்டி
ஸ்வரங்கள் தப்பிய
குரலுக்கு ஏற்ப
தன் ஸ்வரங்களை மாற்றிக்கொள்கிறது
இசை
o
டம் டம் சத்தத்தில்
ஆடத் தொடங்கும் கால்கள்
சந்தியாவுடையவை.
ஆடிமுடித்து
அப்பா என ஓடி வந்து
வெட்கத்துடன்
அணைத்துக் கொள்ளும்போதுதான்
முழுமையடைகிறது
எனக்கான நடனம்.//

மிக ரசித்த வரிகள்..

குழந்தைகளைப்பற்றி கவிதைகளை வாசிக்கையிலெல்லாம் குழந்தையாகிவிடுகிறது மனசு..

அழகிய கவிதைக்கு பாராட்டுக்கள்..