Skip to main content

Posts

a story by KRISHNA

மக்கானாபேட்டை வருமான வரி அலுவலக பின்புறத்தில் ஒரு குறுக்குச் சந்து உள்ளது. அது, இரண்டு அடுக்கு மாடி ஒன்றில் சென்று முடியும். அதன் ஒரு பகுதி மேன்ஷனாக இயங்கி வந்த காலத்தில் வினயும், மீரானும் எனக்கு அறிமுகமானார்கள். வினய், அமெரிக்காவை மையமாக வைத்து இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவன். மீரானுக்கு, வங்கியில் லோன் வாங்கித் தரும் பணி. பழகியிருந்த குறைவான நாட்களிலேயே இயல்பில் வினயுன், மீரானும் இரண்டு எதிர் நிலை மனிதர்கள் என்பதை தெரிந்துகொண்டேன். ஆனா, நான் அதில் நடுவன். மீரான் எங்களிருவரை விட வயதில் ஒன்றரை மடங்கு மூத்தவந்தான் என்றாலும், "அண்ணன்-னு எல்லாம் சொல்லாதே, பேர் சொல்லியே கூப்பிடு." என்பான். ஆந்திராவிலிருந்து வந்திருந்த வினய், ஊரில் இருக்கும் தனது பெற்றோரிடத்தில் பேசாத நாட்களை எண்ணித்தான் சொல்ல வேண்டியிருக்கும். தினமும் ஒரு ஐந்து நிமிடமாவது பேசினாலொழிய தூங்கமாட்டான். எனக்கும் பெற்றோரிடம் பேசுகின்ற வழக்கம் இருந்தாலும் வாரம் ஒரு முறையோ இரண்டு வாரத்தில் ஒரு தடவையோ மட்டுமே பேசுபவன். அதுவும் சிரத்தையில்லாமல் (எப்போது நீ சிவப்பு பொத்தானை அழுத்துவாய்) ஓரிரு நிமிடங்கள் ப...
37வது சென்னை புத்தகக் காட்சியில் விருட்சம் பங்கேற்கிறது.  ஸ்டால் எண் 741ல் பங்கேற்க உங்களை அன்புடன்அழைக்கிறேன். 2012ல் நான்கு புத்தகங்களும் 2013ல் 6புத்தகங்களையும் கொண்டு வந்துள்ளேன்.  புத்தகங்கள் பற்றிய விபரம் இதோ: ரோஜா நிறச்சட்டை - சிறுகதைகள் - அழகியசிங்கர் - விலை ரூ.100 - பல ஆண்டுகளாக கதை எழுதி வருபவர்.  கதை எழுதும்போது  எப்போதும் உற்சாகமாகவே இருந்திருக்கிறார். அனுபவத்தை ஒரு கேடயமாக வைத்து கதைகள் எழுதினாலும்,  அனுபவம் வேறு, கதைகள் வேறு.   கிட்டத்தட்ட 60 கதைகள் எழுதியிருக்கிறார். வினோதமான பறவை - கவிதைகள் - அழகியசிங்கர் - விலை ரூ.60 - üஅழகியசிங்கர் கவிதைகள்ý என்ற தொகுதிக்குப் பிறகு வெளிவரும் தொகுப்பு இது.  எழுதிய கவிதைகள் பல எந்தத் தேதியில் எந்த வருடத்தில் என்ற குறிப்பை வைத்துக்கொள்ளாமல் எழுதப்பட்டவை. ஓசிப்மெண்டல்ஷ்டாம் கவிதைகள் - மொழிபெயர்ப்பு பிரம்மராஜன் - விலை ரூ,20 - இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த ரஷ்யக் கவிஞரான ஓசிப்மெண்டல்ஷ்டாம் பற்றிய முதல் அறிமுக நூல் இது. மெண்டல்ஷ்டாமின் 22 கவிதைகளும் அக்மேயிச இயக்கம் பற்றிய நூல், ழ கவிதைகள் - கவ...

எதையாவது சொல்லட்டுமா....92

அழகியசிங்கர்     2004ஆம் ஆண்டு என் பெண்ணிற்கு திருமணம் செய்தபோது ஆறு லட்சத்தில் கல்யாணச் செலவு முடிந்துவிட்டது.  பெரிய கடன் எதிலும் மாட்டிக்கொள்ளவில்லை.  அதே திருமணத்தை அதே மாதிரி இப்போது நடத்தினால் முப்பது லட்சம் ஓடிவிடும்.  பெரிய கடனாளியாக மாறி இருப்பேன்.  இன்றைய கல்யாணத்தில் சத்திரம் பல மாதங்களுக்கு முன்பே முன் பதிவு செய்ய வேண்டி உள்ளது.  ஒரு கல்யாணம் நடத்த பல மாதங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.  மணப்பெண்ணும் பையனும் வெளிநாட்டில் இருந்தால் ஆண்டுக் கணக்கில் காத்துக்கொண்டிருக்க வேண்டும்.      எனக்குத் தெரிந்து கல்யாணத்தை சிக்கனமாக நடத்த வேண்டுமென்று தீர்மானித்து நடத்திய சிலரைத் தெரியும்.  என் அலுவலக நண்பர் ஒருவர், ஒரு பெண்ணுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.    நான் அவரையும் அந்தப் பெண்ணையும் பார்த்தேன்.  üüஎன்ன பார்க்கிறீங்க? இவள் என் மனைவி,ýý என்றார்.             "எப்போது திருமணம் செய்து கொண்டீர்கள்?"என்று கேட்டேன்.    ...

பொன்னாடை

    பா சிவபாதசுந்தரம்     ஒரு நண்பரிடமிருந்து சில வாரங்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.எங்கள் கல்லூரியில் ஒரு கருத்தரங்கு நடத்துகிறோம், நீங்கள் வந்து சிறப்புரையாற்ற முடியுமா? கேட்டவர் டாக்டர் பி.குமார். என்றைக்கு? அடுத்த ஞாயிற்றுக்கிழமை. சாதாரணமா நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிவேலைகள் ஏதும் வைத்துக் கொள்வதில்லை. ஞாயிற்றுக்கிழமை என் குடும்ப தினம். வாரத்துல அந்த ஒரு நாள் தான் முழுவதுமாக என் மனைவி, மக்களோட இருக்கும் நாள். இருந்தாலும் நான் படித்த கல்லூரிக்கு கூப்பிடுகிறார் என்பதால் மறுக்க முடியவில்லை. சரி வர்றேன். என்ன தலைப்புல பேசணும்? உங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒன்றில் பேசலாம், என்றார் நண்பர். அந்த சுதந்திரமும் பிடித்திருந்தது. அடுத்து ஒரு இரண்டு நாட்கள் கழித்து ஒரு தொலைபேசி அழைப்பு, புகைப்படமும் என்னை பற்றிய குறிப்பும் அனுப்ப சொல்லி. சனிக்கிழமை மாலை மீண்டும் ஒரு அழைப்பு, வண்டி அனுப்பவா? என்று. வேண்டாம். நானே என் காரில் வந்து விடுகிறேன் என்றேன். ஞாயிறு காலை. வழக்கம்போல் என் மனைவியுடன் கருத்தரங்கிற்கு ஆஜர். மிக சொற்பமான கூட்டம், கல்யாணம் முடிந்து மற...

இடையனின் கால்நடை

எம் . ரிஷான் ஷெரீப் காலை வெயில் அலைமோதும் பனியில் குளித்த விருட்சங்களைச் சுற்றிய பசும்புல்வெளியில் மேய விட்டிருந்தாய் உன் கால்நடையை ஒழுகி அசைபோடச் செய்தபடியிருக்கும் தனித்திருந்த கொட்டகையின் கூரைகள் பகல் பொழுதின் மேய்ச்சல் நினைவுகளை வைகறைவரை இரவிடம் கிசுகிசுக்கும் வேட்டை விலங்குகளின் பார்வைக்குத் தப்பிய கால்நடையின் சதைப் பூரிப்பில் மின்னும் அதன் சருமம் உன் ப்ரியத்தில் உறைந்திருந்த அது எங்கும் தப்பிப் போய்விடாது எனினும் வேலியை இறுக்கிக் கட்டினாய் நீ அதனையும் அறியாது அசைபோட்டபடியிருந்தது அது மேய்ச்சலுக்கு இட்டுச் செல்ல முடியாத அடைமழை நாட்களில் எங்கெங்கோ அலைந்து தீனிச் செடி குலைகளை எடுத்து வருவாய் உன் தலை தடவலில் உயிர்த்திருக்கும் அதனுலகம் தீனிக்கென நீ வைத்திடும் எல்லாவற்றையும் அன்பென எண்ணிச் சுவைக்கும் அதட்டலுக்குப் பயந்து அடிபணியும் - பிறகும் அகலாதிருக்க இவ் வாழ்வும் உன் பரிவும் நிலைத்திடக் கனவு காணும் தசை , தோல் , எலும்பென கூறிட்டுப் பணம்பார்க்க அதன் எடை கூடும் காலமெண்ணிக் காத்திருக்கும் உன் கத்தியைக் கூர் தீட்டும் நாளில் ...

உயிர்ப்பித்தல்..

அமைதிச்சாரல் விளைநிலங்களிலும் வளர்ந்து நிற்கும் கான்கிரீட் காடுகளில் மொட்டைத்த(ரை)லையில் கொஞ்சம் பூச்செடிகளுடன் குறுமரங்களையும் சூடிக்கொண்டிருக்கும் கட்டிடங்களைக் கண்ணுறும்போது மட்டும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது எப்பொழுதோ கிரயம் செய்து கொடுத்துவிட்ட மாந்தோப்பும் மல்லிகைத்தோட்டமும். சிந்திச்சிதறிக்கிடக்கும் சூரியச்சில்லறைகளில் புரண்டெழுந்த அணிற்பிள்ளைகளுடன் பகிர்ந்துண்ட தித்திப்பு இன்னும் ஒட்டிக்கொண்டுதானிருக்கிறது அடிநாக்கில். “செவ்வகப்பெட்டியினுள் அடைபட்டிருப்பது என் தோப்புக்கிளியிலொன்றாக இருக்குமோ” என்றெழும் எண்ணத்தைக் கடந்து செல்ல முயன்று தோற்றுப் போகும் ஒவ்வொரு முறையும். விசும்பியழும் மனதைச் சமாதானப்படுத்த தொட்டி ரோஜாவும், க்ரோட்டன்ஸுமாய் வீராவேசத்துடன் உயிர்த்தெழுகிறான் மனதுள் உறங்கும் விவசாயி.

"மார்க் ஸுக்கர்பெர்க் நகர்"

பா சிவபாதசுந்தரம் பிரகாஷை ஒரு குறும்பட பயிற்சி பட்டறையில்தான் அவன் சந்தித்தான். சிறுசேரியில் உள்ள ஒரு சாஃப்ட் வேர் கம்பெனியில் வேலை பார்ப்பதாக சொல்லியிருந்தான். இப்ப அவனை பார்க்கத்தான் போய்க் கொண்டிருக்கிறான். அம்பத்தூரிலிருந்து நேர் பஸ் கிடையாது. மத்திய கைலாஷ் வந்து வேறு பஸ்ஸுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். ராஜீவ் காந்தி சாலை இன்றைக்கு காலைலதான் பேக் பிரித்து எடுக்கப்பட்டது போல் ஒரு மெருகோடு இருந்தது. பார்க்கிற பக்கமெல்லாம், ஜீன்ஸ், லெக்கின் மற்றும் கவ்வி பிடித்திருக்கும் மேலாடைகளுடன் இளம்பெண்கள். அனேகமாக அனைவரது கழுத்திலும் கலர் கலரான பட்டைகளுடன் அடையாள அட்டை. தாலி மாதிரி. இருபது வருடங்களுக்கு முன் தரமணியில் வேலை செய்கையில் இதே ரோடில் தினமும் பயணித்திருக்கிறான். அப்போதெல்லாம் கசங்கிய காக்கி உடைகளுடன் பாலிடெக்னிக் மாணவர்களும், மற்ற தொழிற்சாலை ஆட்களும், மிக சாதாரண அல்லது பழைய உடைகளுடன் வி.ஹெச்.ஸ் நோயாளிகளும், அவர்களின் பார்வையாளர்கள் மற்றும் உறவினர்களும் நடமாடுவதை பார்த்திருக்கிறான். ஹும், எல்லாம் மாறிப்போச்சு. சாலையின்  அழகை சமதளமாக இடப்பட்ட தார் மட்டுமல்ல, அதி...