Skip to main content

Posts

Showing posts with the label எதையாவது சொல்லட்டுமா

எதையாவது சொல்லட்டுமா........37

உங்களுக்கு எதாவது சந்தேகம் வந்துள்ளதா கடவுளைப் பற்றி. பலர் கோயிலுக்குப் போவார்கள். சாமியைக் கும்பிடுவார்கள். அவ்வளவுதான். சாமியைப் பெரிய சக்தியாக நினைத்து கோயில் கோயிலாகச் செல்பவர்களும் உண்டு. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராய்ச்சியெல்லாம் இப்போதெல்லாம் யாரும் பண்ணுவது இல்லை. ஏனென்றால் அது தேவையில்லாத ஒன்று. அன்று சனிக்கிழமை. சீர்காழியிலிருந்து மயிலாடுதுறைக்கு நான் டூ வீலரில் வந்து கொண்டிருந்தேன். என் பின்னால் கிளை மேலாளரும் வந்து கொண்டிருந்தார். அவருக்குக் கோயில் போவது, கடவுளை எதற்காவது வேண்டிக்கொள்வது என்பதெல்லாம் சுத்தமாகப் பிடிக்காது. நம்பவும் நம்ப மாட்டார். ஆனால் இது ஒரு பிரச்சினையே இல்லை. ஆனால் அவர் ஒரு கேள்வி கேட்கிறார். 'இப்போதெல்லாம் கடவுள் நம்பிக்கை மக்களிடம் அதிகமாகிவிட்டது போலிருக்கிறதே' என்று. எனக்கு இதைப் பற்றியெல்லாம் அதிகமாக யோசித்து விட்டுவிட்டேன். இப்போதெல்லாம் அதிகமாக யோசிப்பது இல்லை. ஆனாலும் அவர் கேட்டார் என்பதற்கு பதில் சொல்லத் தோன்றியது. 'ஆமாம். கடவுள் நம்பிக்கை அதிகமாகி விட்டது,' என்றேன். பின் காரணமும் சொன்னேன். 'பல மக்கள...

எதையாவது சொல்லட்டுமா........36

மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி பஸ்ஸில் செல்லும்போதெல்லாம் என் கண்ணில் அடிக்கடி தட்டுப்படுவது திருக்குறள். பெரும்பாலான குறலுடன் நான் ஒத்துப் போயிருக்கிறேன். சில குறள்களை நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனாலும் போதனை செய்வது எனக்குப்பிடிக்காத ஒன்று. உலகத்தில் ஒவ்வொருவரும் இன்னொருவருக்குப் போதனை செய்வதைத்தான் விரும்புவார்கள். பதவி மமதைப் பிடித்தவர்களுக்குத் தன்னடக்கம் என்பது தெரியாது. அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரி சுற்றித் திரிவார்கள். ரோடில் நடந்துசென்றால் எல்லோரும் ஒன்றுதான். நான் சமீபத்தில் படித்த ஒரு குறள். தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. எனக்கு என்னமோ இந்தக் குறளைப் படிக்கும்போது வள்ளூவர் தெரியாமல் எதையோ சொல்கிறார் என்றே எனக்குத் தோன்றியது. வள்ளுவரை இழிவுப் படுத்துவதாக யாரும் நினைக்கக் கூடாது. எனக்கு அந்தத் தகுதியும் கிடையாது. ஆனால் இந்தக் குறளைப் படித்ததிலிருந்து எனக்கு என்னமோ உறுத்திக்கொண்டே இருக்கிறது. முதலில் இந்த உலகத்தில் தோன்றுவது என்பதே நம் கையில் இல்லை. ஒரு அணும் பெண்ணும் உள்ள இச்சையில் ஒவ்வொருவரும் பூமியில் அவதரிக்கிறோம். அ...

எதையாவது சொல்லட்டுமா 35

சிறிது நேரத்திற்குமுன் லட்சுமிபதி போன் செய்தார். 31.1.2011லிருந்து இந்த ஆண்டு முடியும்வரை க.நா.சு நூற்றாண்டு. நாம் அவர் நினைவாக எதாவது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். நான் சீகாழியில் இருப்பது ஒரு குறையாகப் பட்டாலும், க.நா.சு விஷயமாக எதாவது செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை கூட்டம் போடலாம் என்று அவரிடம் குறிப்பிட்டேன். பின் அவருடைய புத்தகங்கள் எதாவது கொண்டு வரலாம். அதற்கு இப்போது எந்தத் தடையும் கிடையாது. நான் ஏற்கனவே மையம் வெளியீடாக வந்திருந்த க.நா.சு கவிதைகள் சிலவற்றை திரும்பவும் அச்சடிக்க வைத்திருக்கிறேன். உண்மையில் புத்தகக் காட்சியின்போது அதை இலவசமாக அளிக்க தயாரித்துக் கொண்டிருந்தேன். கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது. க.நா.சுவை அவருடைய கடைசிக் கால கட்டத்தில்தான் சந்தித்தேன். புத்தகம் படிப்பது எழுதுவது இதைத் தவிர வேறு எதையாவது சிந்தித்திருப்பாரா என்பது தெரியவில்லை. ஒருமுறை நான், நகுலன், வைத்தியநாதன், ராஜகோபாலன், ஞானக்கூத்தன், ஸ்ரீனிவாஸன் என்று அத்தனைப் பேர்களும் க.நா.சுவை அவருடைய மைலாப்பூர் வீட்டில் சந்தித்தோம். சிறிது நேரம் பேசிவிட்டு எல்லோரும் மைலாப்...

எதையாவது சொல்லட்டுமா......../ 33

இந்த முறை நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி அவருடைய சிறுகதைத் தொகுப்பிற்காகக் கிடைத்துள்ளது. தரமான படைப்பாளியான நாஞ்சில் நாடனை அடையாளம் காண சாகித்ய அகாடமிக்கு இவ்வளவு காலம் பிடித்துள்ளது. எனக்கு நாஞ்சில் நாடனை ஒரு படைப்பாளி என்கிற மாதிரியும், நண்பர் என்கிற முறையிலும் தெரியும். அவருடைய நண்பரான வைத்தியநாதனை (கவிஞர் நாஞ்சில் நாடன் சென்னை வரும்போதெல்லாம் சந்திக்காமல் இருக்க மாட்டார். எனக்கும் நாஞ்சில்நாடன் சென்னையில் இருக்கிறார் என்ற தகவல் வைத்தியநாதன் மூலம் தெரியவரும். அதேபோல் நான் கோயம்பத்தூர் செல்லும்போதெல்லாம் நாஞ்சில்நாடனை சந்திக்காமல் இருக்க மாட்டேன். 70-களில் நாஞ்சில்நாடன் எழுத ஆரம்பித்துவிட்டார். பெரும்பாலும் அவருடைய கதைகள் யதார்த்த உலகைச் சார்ந்தவை. இன்றைய உலகத்தை எதிர்கொள்ளும்போது நாஞ்சில்நாடனால் 'தலைகீழ் விகிதங்கள்' போன்ற நாவலை எழுத முடியுமா என்பதைச் சொல்ல முடியாது. நான் கடைசியாக படித்த அவருடைய நாவல் சதுரங்கக் குதிரை. அந்த நாவலைப் படித்தபோது சினிமாவை மனதில் வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறாரோ என்றெல்லாம் எனக்குத் தோன்றும். நாஞ்சில்நாடன் நாவல் மட்டுமல்ல சிறுகதைகளும் எ...