Skip to main content

Posts

Showing posts with the label அசோகமித்திரன்

மருத்துவர்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள்

மருத்துவர்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள் அசோகமித்திரன் ஒரு காலத்தில் வார மாதப் பத்திரிகைகள் மிகவும் குறைவு. வெளிவருவதில் பக்கத்துக்குப் பக்கம் விகடத்துணுக்குகள் இருக்கும். திரும்பத் திரும்ப மருத்துவர்கள் பற்றிய துணுக்குகள். “டாக்டர் உன் நண்பர் என்று சொன்னாயே, பின் ஏன் ஃபீஸ் கொடுத்தாய்? ” “அவர் பிழைக்க வேண்டுமே? ” “அப்படிப் பணம் கொடுத்து வாங்கிய மருந்தை ஏன் குப்பையில் கொட்டினாய்? ” “நான் பிழைக்க வேண்டுமே? ” அந்த நாட்களில் டாக்டர்கள் பத்திரிகைகளைத் தொடாதவர்களாக இருக்க வேண்டும். அல்லது கோபமே வராதவர்களாக இருக்கவேண்டும். எந்தக் கலாச்சாரத்தில் நீண்ட மருத்துவப் பாரம்பரியம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ந்ம்பிக்கை-அவநம்பிக்கை இரண்டும் சேர்ந்தே இருக்கின்றன. பெரும்பாலானோர் கடவுளைப் பிரார்த்திகாதபடி டாக்டரிடம் செல்வதில்லை. கன்னட எழுத்தாளர் சிவராம் கரந்த் பிறப்பால் பிராமணரானாலும் ஒரு நாத்திகவாதி. ஒரு முறை அவருடைய குழந்தைக்குப் பெருவாரி நோய் கண்டு விட்டது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலும் அம்மை, பிளேக் முதலியன கால அட்டவணை அமைத்துக் கொண்டு மாறி மாறி வரும். அம்மைக்...

குருவின் துரோகம்

 எழுத்தாளர்களைப் பாத்திரங்களாக அமைத்துப் புனைகதைகள் எழுதுவதில் எனக்கு அதிகம் நம்பிக்கை இல்லை.  எழுத்தாளர்கள் பெரும்பாலும் மிகச் சிறிய, சாதாரண மனிதர்கள்.  அநேகமாக அவர்கள் எல்லாருக்கும் அவர்களைப் பற்றிப் பிறரிடம் சொல்லும்போதோ எழுதும்போதோ நிஜமல்லாதது மிகவும் இயல்பாக வந்து விடுகிறது.  மனித இயல்பின் தன்மை அது.  நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அன்று மிகவும் செல்வாக்கோடு இருந்த எழுத்தாளர் அவர் பணிபுரிந்த வானொலியில் அவருடைய மேலதிகாரியைக் கரிய பாத்திரமாகக் கதை எழுதியதைப் பெருமையோடு சொல்லிக்கொண்டிருந்தார்.  அது தவறு என்று நான் சொன்னேன்.  அவர் வானொலியில் இருந்தவரை என் மூச்சு கூட அப்பக்கம் வீச முடியவில்லை.  கிட்டத்தட்ட என் அபிப்பிராயம்தான் அழகிரிசாமி வைத்திருந்தார்.  ஆனால் நண்பர் நா பார்த்தசாரதிக்குக் கதாநாயகனை எழுத்தாளனாக அமைப்பதில் மிகுந்த விருப்பம்.  நகுலனின் முதலிரு நாவல்கள் எழுத்தாளர்களைப் பற்றியல்ல.  அதன் பிறகு எழுதியதெல்லாம் அவர் நேரடியாக அறிந்த எழுத்தாளர்களைப் பற்றித்தான்.  சில இடங்கள் வேடிக்கையாக இருக்கும்.  ஆனால் பெரும...

யாவரும் கேளீர்

எழுதுவது, படிப்பது இரண்டும் தனிமையில்தான் சாத்தியமாக இருந்தாலும் இவை ஆழ்ந்த நட்புக்கும் காரணமாக இருந்து விடுகின்றன. புதுமைப்பித்தன்-ரகுநாதன், கு.ப.ரா-பிச்சமூர்த்தி. ராமையா-சி சு செல்லப்பா எனப் பலர் உடனே நினைவுக்கு வருகின்றனர். இந்திய சுதந்திரத்திற்கு முன்பு பொதுவாக மக்களிடம் இருந்த விடுதலை வேட்கை இவர்களிடமும் இருந்தது. கிட்டத்தட்ட இதே மாதிரிதான் ஷங்கரநாராயணன்-ஏ ஏ ஹெச் கே கோரி - சாந்தன் ஆகியோரைப் பற்றி நினைக்க முடிகிறது. இப்போது சுதந்திரம் என்ற அரூபமான, ஆனால் உணர்ச்சி எழுப்பக்கூடிய இலக்கு தேவையற்றுப் போய் விட்டது. இன்று பெரும்பாலும் பொருளாதாரக் கவலைதான் எல்லா இந்தியரையும் தீண்டுகிறது. எழுத்தாளர்களாகவும் இருந்து விட்டால் பத்திரிகை பிரசுரம், நூல் பிரசுரம் இவற்றுக்கும் மேல் வாசகர் கவனம் போன்றவை சின்னச் சின்னக் கவலைகளாக இருந்து வரும். பொருளாதாரம்தான் குடும்ப உறவுகள், பொறுப்புகளையும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் நிர்ணயிக்கிறது. இன்றைய மசாலாத் திரைப்படங்கள் இந்த ஒரு நம்பகமான சிறிதே பூதம் காட்டும் கண்ணாடி. இந்தப் பொது விதியிலிருந்து சாந்தன் சற்றே விலகியவர். அவர் இலங்கைத் தமிழர். இந்த ...

சி மணி

இ ந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி சி மணி சேலத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி எனக்குத் துக்கம் தந்தாலும் நான் எதிர்பாராதது அல்ல. உத்தமமான அவருக்குத் தன் உடல் நிலையைக் கவனித்துக்கொள்ளத் தெரியாது. யாருக்குத்தான் தெரிகிறது என்று கேட்கலாம். நான் 'எழுத்து' பத்திரிகைக்கு முதலாம் ஆண்டு என் மகத்தான நண்பர்களில் ஒருவரான கி.ரா . அவர்களால் சந்தாதாரன் ஆனேன். (இது கரிசல் கி.ரா அல்ல). அப்போதே சி மணியுடையது அப் பன்னிரண்டு இதழ்களில் வந்திருக்கும். எனக்குப் பத்திரகையே ஒரு சோர்வு தந்தது. எழுத்தின் முக்கியக் கூறுகளைத் தவிர்த்து தவிர்க்கக்கூடியது மீத கவனம் செலுத்துவது போலிருந்தது. நான் சந்தாதாரனாக இல்லாத போதிலும் அவ்வப்போது அது பார்க்கக் கிடைக்கும். நானும் சி சு செல்லப்பாவுமாகச் சேர்ந்து எது எதற்கோ நிதி, பேச்சாளர் என்று ஏற்பாடு செய்ய நிறைய அலைந்திருக்கிறோம். எஸ்.எஸ் வா சன், கிரிஷ் கர்னாட், எஸ்.கிருஷ்ணன், ஆருத்திரா என ஒரு நாளைக்கு ஒருவராகத் தடாலென்று போய் நிற்போம். அப்போது டெலிபோன் சாதாரண மக்கள் புழக்கத்துக்கு வரவில்லை. செல்லப்பா ஒரு முறை கூட அவருடைய பத்திரிகையின் ஆதாரமாக விளங்கியவர்களை...

இரங்கல்கள்

வைதீஸ்வரனின் தாயார் இறந்த தினத்தன்று அவர் வீட்டுக்குச் சென்றபோது நிறைய ஐம்பதாண்டு கால நண்பர்களைச் சந்திக்க நேர்ந்தது. எஸ் வி சகஸ்ரநாமம் என்பவர் போன்றோரின் விடாமுயற்சியில்தான் எம்.கே தியாகராஜ பாகவதர் , என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் சிறை மீட்புக்கு வெற்றி கிடைத்தது. அப்போது இந்தியா சுதந்திரம் அடையவில்லை. கடைசி சரணாலயம் இங்கிலாந்திலுள்ள பிரிவி கவுன்சில் என்பது. வி.எல் எதிராஜ் என்பவர்தான் அதற்குரிய வக்கீல். ஏராளமான செலவு. எஸ் எஸ் வாசனிட மிருந்து கைப்பட ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை சிறை மீட்பு நிதிக்காகப் பெற்றார் என்று கூறுவார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்தபோது அவருடைய நாடகக் குழு செயலிழந்து போகக்கூடாது என்று எஸ் வி சகஸ்ராமம் அக் குழு நாடகங்களைத் தினசரி அரங்கேற்ற வழி செய்தார். அப்படி நடிக்கப் பட்டதுதான் 'மனோகரா' நாடகம். அதில் மனோகரனாக நடித்தது. கே. ஆர் ராமசாமி. நாடகத்தில் வரும் 'செயின்' சீன் மிகவும் புகழ் பெற்றது. இது திரைப்படத்திலும் வரும். மேடையில் பொருந்தி போவது, திரைப்படத்தில் அபத்தமாகத் தோன்றும். அதில் இந்த 'செயின்' சீனும் ஒன்று. சிறைப் பிடித்து வரும் க...

இரு பத்திரிகைகள்

முதுமையின் மிகப் பெரிய சோகம் நம்முடைய நண்பர்கள் ஒவ்வொருவராக மறைந்து கொண்டிருப்பார்கள் என்று இங்கிலாந்து எழுத்தாளர் சாமர்சாட் மாம் கூறினார். இதையே வேறு பலரும் கூறியிருக்கிறார்கள். தொண்ணூற்றொரு ஆண்டுகள் வாழ்ந்த மாம் பழுத்த அனுபவத்தால்தான் கூறியிருக்கிறார். 'மணிக்கொடி இதழ் தொகுப்பு' படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு மாம்மை நினைவுபடுத்தியவரை நண்பர் என்று கூற முடியாது. ஆனால் அவரை நிழலாகப் பல ஆண்டுகள் நான் அறிந்திருந்தேன். எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும்போது, 'ஆனந்தவிடனி 'ல் ஒரு கதை என் மனதை மிகவும் சங்கடப்படுத்தியது. குடிகாரனான தன் அப்பாவை ஒரு சிறுமி படுக்க வைத்து, உணவு கொடுத்துப் பாதுகாப்பாள். அச் சிறு வீட்டில் அவளும், அவள் தகப்பன் மட்டும்தான். அவன் வியாதி முற்றிப்போய்ப் படுக்கையிலேயே இறந்து விடுகிறான். அவன் இறந்து விட்டான் என்று தெரியாது. அவள் அவனுக்கு உணவு தர முயற்சி செய்வாள். இந்தக் கதை தொடர்ந்து நினைவில் இருந்து வருவதற்கு இன்னொரு காரணம் அது ஒரு முஸ்லிம் கதை. அது முஸ்லிம் கதை என்று அடையாளப் படுத்த அப் பெண்ணின் பெயருடன் அவள் தன் அப்பாவை 'வாப்பா' என்று...

நூலகங்களின் தேவை

ஒ ரு காலத்தில் சில தனியார் நூலகங்களில்தான் நல்ல புத்தகங்கள் இருக்கும். அரசு நூலகங்கள் மிகவும் குறைவு. நகரங்கள், சில முக்கிய ஊர்கள்தான் இந்த நூலகங்களைப் பெற்றிருக்கும். இந்தியா சுதந்திரம் பெற்றவுடனேயே நூலகங்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை. ஐம்பதாண்டுகள் முன்பு கூட மொத்தமாக நூறு பிரதிகளுக்கு நூலக உத்தரவு கிடைக்காது. ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரியின் அங்கீகாரம் கிடைத்த பிறகுதான் அந்த மாவட்டத்திலுள்ள நூலகங்கள் சிலவற்றுக்குப் பிரதிகள் வாங்கப்படும். பதிப்பாளரே அந்த முப்பது நாற்பது நூலகங்களுக்கு தனித்தனியாக நூலும் நூலுக்கான விலை உத்தரவு ரசீதையும் அனுப்ப வேண்டும். இதைத் தவிர அந்த ரசீதின் நகலையும் அந்தக் கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். எல்லா நூலகங்களுக்கும் பிரதிகள் கிடைத்து விட்டன என்ற தகவல் கிடைத்தபிறகு பதிப்பாளருக்கு முதலில் ஓர் ஒப்பந்தங் கடிதம் அனுப்பப்படும். அவர் இப்போது மொத்தப் பிரதிகளுக்கும் சேர்த்து ஒரு ஒப்புதல் ரசீதை அனுப்ப வேண்டும். அதன்பிறகு பணத்திற்குக் காத்திருக்க வேண்டும். அந்த நிலை இப்போதில்லை. இப்போது பிரதிகளும் நிறைய வாங்கப் படுகின்றன. ...

துங்கபத்திரை

எனக்கு நினைவு மங்கிக்கொண்டு வருகிறது என்று சொன்னால் சட்டென்று நம்ப மறுக்கிறார்கள். நுண்ணிய தகவல்கள் நினைவுக்கு வராது. ஆனால் அனுபவம் நிலைத்திருக்கிறது. பாவண்ணனின் ஆரம்பக் கதை 'கணையாழி' யில் வெளியானது. இரு எழுத்துக்களில் தலைப்பு என்ற ஞாபகம். 'இந்த இளைஞன் எவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறான்! தொடர்ந்து எழுதிப் புகழ் பெற வேண்டும்!' என்று நினைத்துக் கொண்டேன். வெகு நேர்த்தியான கையெழுத்து. நல்ல கதையொன்று தபாலில் வந்தால் அது எழுதப்பட்ட விதத்திலிருந்து அந்தக் கையெழுத்துக்குரியவர் எப்படி இருப்பார் என்று சில நிமிடங்கள் யோசிப்பேன். நான் அன்று நினைத்தது பொய்த்துப் போகவில்லை. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து அமெரிக்க எழுத்தாளர்களுடன் கலந்து ஒரு படைப்புக்களம் புது டில்லியில் நடந்தது. அதற்குப் பாவண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தமிழ்ப் பிரிவு நடந்தது போல எந்த மொழிப் பிரிவும் நடக்கவில்லை. அவற்றில் இருந்த மூத்த எழுத்தாளார்கள் அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டு மூன்று நாளையும் முடித்தார்கள் என்று கூறினார்கள். ஒரு பயிற்சியாக ஒரு பத்திரிகைச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு இரு பக்கங்களில் ஒரு ...