Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 156

அழகியசிங்கர்


156) நிராகரிப்பு


கவிதா லட்சுமி


ஒரு குழந்தையின் புன்னகையை
வெறுமே தாண்டிச்செல்வது
பூவைப் பறித்து
இதழிதழாய் கிள்ளிப்போடுவது
தனிமையிற்கூட
முகமூடியன்றைத் தேடி எடுப்பது
மழைக்காலத்தில்
ஜன்னல்களை இறுகச் சாத்துவது
தேநீர் நேரத்தில்
ஒரு நேசத்தை நிராகரிப்பது
என
பிசாசுகளின் பெயரால்
கடவுள்களின் கதவுகளைச்
சாத்தியாயிற்று
தீபமாக தீப்பந்தமாக
சிகரட் துண்டென
அல்லால்
காட்டுத்தீயென
தனிமையின் தரையெங்கும்
ஒரு நெருப்பு
உயிரோடு எரிகிறது!


நன்றி : சிகண்டி (தன்னைக் கடந்தவள்) - கவிதா லட்சுமி - வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ் - 214 புவனேஸ்வரி நகர் மூன்றாவது பிரதான சாலை, வேளச்சேரி, சென்னை 600 042 - பக்கம் : 114 - விலை : 140
May be art of text that says 'C ACදo Acද சகண்டி கடந்தவள் தன்னைக் கவிதா லட்சுமி'
Chandramouli Azhagiyasingar

Comments