Skip to main content

துளி - 83- புத்தகக் காட்சிக்காகக் கொண்டு வந்த வாசிப்போம் வாசிப்போம்

அழகியசிங்கர்




மயிலாடுதுறையில் ஒரு நண்பர் புத்தகங்களைத் தொடர்ந்து வாசிக்கும் வழக்கத்தை திடீரென்று மேற் சொண்டிருந்தார்.  என்னிடமும் சொன்னார்.  முதலில் 50 நாட்களுக்குத் தொடர்ந்து புத்தகம் வாசியுங்கள்.  அவர் தூண்டுதல் பேரில் நானும் வாசிக்கத் தொடங்கினேன். 
அப்போதுதான் ஒரு உண்மை தெரிந்தது.  புத்தகங்கள் நம் கண் முன்னே இருக்கின்றன.  வாங்கி வைத்து விடுகிறோம்.  ஆனால் வாசிக்க முடியவில்லை.  ஏன்?  புத்தகம் வாங்கும் வழக்கம் மட்டும் குறையவே இல்லை.  உடனே ஒரு புத்தகத்தை எடுத்து வாசிப்பது என்று முடிவு செய்தேன்.  முதலில் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிப்பது என்று திட்டம் போட்டேன்.
ஒரு மணி நேரம் படிக்க ஆரம்பித்தபோது மிகக் குறைவான பக்கங்களைத்தான் வாசிக்க முடிகிறது என்று கண்டு பிடித்தேன்.  முதலில் வாசிக்கும் நேரத்தை விட்டுவிட வேண்டும்.  புத்தகம் முடிக்க வேண்டுமென்பதுதான் முக்கியம் என்று பட்டது.
இரண்டாம் தேதி செப்டம்பர் மாதம் முதல் வாசிக்க ஆரம்பித்தேன்.  தினம் தினம் படிக்கிற புத்தகங்களைப் பற்றி எழுதுவது என்று தீர்மானித்தேன். கிட்டத்தட்ட 27 நாட்கள் தொடர்ச்சியாக வாசித்தேன்.  உடனே வாசித்த புத்தகங்களைப் பற்றியும் எழுத ஆரம்பித்தேன்.  100 பக்கங்கள் வந்து விட்டது.  
ஒரு புத்தகமாகக் கொண்டு வர வேண்டுமென்று தோன்றியது. அதுதான் üவாசிப்போம் வாசிப்போம்ý தொகுதி 1 என்ற புத்தகம். இது இன்னும் தொடருகிறது.  தொடரும்.
சமீபத்தில் பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் பேட்டி எடுத்தார்கள்.  5 புத்தகங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்று சொன்னார்.  புத்தகங்களை அதிகமாக வாசித்துக் கொண்டிருப்பதால் மிகச் சுலபமாக 5 புத்தகங்களைப் பற்றி சொல்ல முடிந்தது.  இது ஒரு நல்ல அனுபவம்.  
எனக்கு அபூர்வ திறமையை ஆண்டவன் அளித்திருக்கிறான். நான் படித்த புத்தகங்கள் எல்லாம் சில தினங்களில் என் ஞாபகத்தில் இருக்காது.  அதனால்தான் அவசரம் அவசரமாக நான் படித்த புத்தகங்களைப் பற்றி எழுதி விடுவேன்.  ஏற்கனவே நீங்களும் படிக்கலாம் என்ற தலைப்பில் இரண்டு பகுதிகள் கொண்டு வந்தேன். எல்லாம் புத்தகங்களைப் பற்றி.  அதேபோல் வாசிப்போம் வாசிப்போம்.  இது கொஞ்சம் தீவிரம்.  இதில் பெரிய புத்தகங்களை அதிகப் பக்கங்கள் கொண்ட புத்தகங்களை என்னால் உடனே வாசிக்க முடியவில்லை.  ஆனால் அதையும் முயற்சி செய்வது என்று முடிவு எடுத்துள்ளேன்.  அதனால் பா.ராகவனின் üயதிý என்ற நாவலை எடுத்து 806 பக்கங்கள் படித்து விட்டேன்.  இது பல நாட்கள் முயற்சி.  இது குறித்து கூடிய விரைவில் எழுதுவேன் என்று நினைக்கிறேன்.

இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு சிறிய பகுதி. நகுலன் நாவல் இவர்கள் என்ற புத்தகத்தைப் படித்து நான் எழுதிய வரிகள்.

"இவர் நாவலில் அங்கங்கே பளிச் பளிச்சென்று வரிகள். 'நான் யார்?' என்றுகூட அனுமானிக்க முடியவில்லை.
நான், ராமநாதன், நல்லசிவன் பிள்ளை இவர்களைச் சந்தித்துப் பிரிகையில் 'நேற்றிருந்த மனிதன் நான் இன்றில்லை' என்ற உணர்வோடு திரும்பினேன் என்று எழுதுகிறார்."   

வாசிப்போம் வாசிப்போம் என்ற புத்தகம் விலை ரூ.90.

Comments