அழகியசிங்கர் புத்தகக் காட்சிக்காகக் கொண்டு வரும் என்னுடைய 3வது புத்தகம். கடந்த ஓராண்டுக்கும் மேலாக குமுதம் தீராநதியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஐந்தாண்டுகளுக்கு முன் அம்ருதா பத்திரிகையில் எதையாவது சொல்லட்டுமா என்ற தலைப்பில் கடைசிப் பக்கக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகப் போன ஆண்டு எதையாவது சொல்லட்டுமா என்ற பெயரில் புத்தகம் கொண்டு வந்துள்ளேன். இத் தொகுப்பு தீராநதியில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. தொடர்ந்து ஒரு பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் கட்டுரை எழுதுவது அவ்வளவு சுலபமில்லை. புதுசு புதுசாக கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். சொன்னதையே சொல்லக் கூடாது. இந்த ஆபத்து நம்மை அறியாமல் ஏற்பட்டு விடும். நான் சமாளித்துக்கொண்டு 15 மாதங்கள் கட்டுரைகள் எழுதினேன். ரா.கி டைம்ஸ் என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். ரா.கி ரங்கராஜன் அண்ணாநகர் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வாரம் வாரம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சமீபத்தில்தான் அதைப் படிக்க முடிந்ததால் அவர் எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என்று புரிந்துகொ...