அழகியசிங்கர் அழகியசிங்கர் மதியம் 4 மணிக்குமேல் பூங்காவில் மர நிழலில் காத்துக்கொண்டிருக்கிறார். அவரை நோக்கி ஜெகனும், மோகினியும் வருகிறார்கள். மூவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரும் சில மணித்துளிகள் பேசவில்லை. அழகியசிங்கர் : நடந்திருக்கக் கூடாது. மோகினி : நம் கையில் எதுவுமில்லை ஜெகன் : துப்பாக்கிச் சூடு நடந்ததைக் கேள்விப்பட்டவுடன் அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கமே இல்லை. அழகியசிங்கர் : இப்படி ஒரு துயரமான நிகழ்ச்சி நடந்திருக்கக் கூடாது. மோகினி : நம்மால் என்ன செய்ய முடியும். நாமும் சாமானியர்கள். ஜெகன் : சாமானியர்களுக்கு உள்ள தைரியம் கூட நமக்குக் கிடையாது. அழகியசிங்கர் : துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்தனை செய்கிறேன். ஜெகனும், மோகினியும் : நாங்களும். *******...