அழகியசிங்கர் ஒவ்வொரு ஆண்டும் சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி புத்தகங்கள் கொண்டு வரும் வழக்கம் எனக்குண்டு. ஆரம்பத்தில் நான் ஒன்றோ இரண்டோ புத்தகம் கொண்டு வருவேன். சிலசமயம் அப்படிப் புத்தகம் கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். புத்தகக் காட்சியை முன்னிட்டிதான் அப்படி புத்தகம் கொண்டு வருவேன். அதற்கு முன் வரை சும்மா வெட்டியாய் பொழுதைப் போக்குவேன். இப்போதெல்லாம் அச்சிடும் முறை மாறிவிட்டது. அளவறிந்து செயல் படுகிறார்கள். வழக்கம்போல் நடைப்பயிற்சி செய்துகொண்டு வரும்போது புத்தகக் காட்சி 4ஆம் தேதி என்று சொன்னார் என்னுடன் வரும் நண்பர். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு சீக்கிரமாக வந்து விட்டதே என்ற அதிர்ச்சி. பூங்காவில் ஒரு பெரிய மரம் இருக்கிறது. பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மரத்திடம் போய் பேசினேன். "மரமே மரமே," "என்ன?" "இரண்டு விஷயங்களைப் பற்றி நான் பேச மாட்டேன்." "என்ன இரண்டு விஷயங்கள்" "ஒன்று வந்து ஏன்?" "ஓ ஓ ஏன்னா?" "இன்னொன்று இன்னொரு ஏன்?" "எனக...