போய் வா 2016ஆம் ஆண்டே.... அôகியசிங்கர் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னையில் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பாதிப்பு ஜனவரி மாதத்திலும் இருந்தது. ஜனவரி 2016ஆம் ஆண்டு சரியாக இல்லை. எப்போதும் நடக்கும் புத்தகக் கண்காட்சி சென்னையில் ஜனவரியில் நடக்கவில்லை. பாதிக்கப்பட்ட பதிப்பாளர்களில் விருட்சமும் ஒன்று. புதிதாக அச்சடித்த புத்தகங்கள் வெள்ளத்தால் கூழாகின. சேர்த்து வைத்திருந்த புத்தகங்களும் போய்விட்டன. ஆனால் அந்த மாதம் சர்வதேச சினிமாப் பாடங்கள் ஜனவரி 6ஆம் தேதியிலிருந்து 13ஆம் தேதி வரை நடைபெற்றது. கீழே புத்தகங்கள் வைத்திருந்த அறையைச் சுத்தம் செய்ய எனக்கு ஆறுமாதம் மேல் ஆகிவிட்டது. என்னைவிட சில எழுத்தாளர்கள் வெள்ளத்தின் பாதிப்பால் கண்கலங்கினார்கள். அவர்களில் எனக்குத் தெரிந்து முருகன் என்பவர் ஒருவர். இன்னொரு பதிப்பாளர் பரிசல் செந்தில். . முருகன் அபூர்வமாக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை இழந்து விட்டார். செந்தில் அவர் விற்க வைத்திருந்த புத்தகங்களை எல்லாம் இழந்து விட்டார். அவ...