செருப்புகள்
தி க கலாப்ரியா
நாங்கள் பிறந்த
உடனே
இணைந்து விட்டோம்
அந்தப் பாவத்திற்காகக்
காதலிக்கத் தொடங்கும்போது
அடிமைகளாகி விட்டோம்.
மனிதர்கள் உறங்கும்போதுதான்
எங்களால் - சிரித்துப் பேசிச் சேர முடிகிறது.
மீதி நேரங்களில்
ஒரே பாதையில்
ஒரே திசையில்
அருகருகே போனாலும்
அணைத்துக் கொள்ள
முடிவதில்லை
எங்கள் வாலிபத்தை
மனிதர்கள் மிதித்தே
சிதைத்து விடுகிறார்கள்.
வீதிகளே சொந்தமான
விபச்சாரிகள் - நாங்கள்
வீடுகளுக்குள் புகவே
முடியாது
Comments