காந்தி ட்டி ஆர் நடராஜன் இந்நாளில் இந்தியர்க்குச் சிக்கியதோர் சீதக்காதி. தொழுமரங்கள் ந. மகாகணபதி வேற்றூர்ப் புழுதியை வீசிப் போகும் வண்டிகளுக்குப் பூவிட்டு வணங்கும் மரங்கள்
அழகியசிங்கர் செப்டம்பர் மாதம் சிறுகதை ஒன்றைத் தேர்ந்தெடுக்க பத்திரிகைகளை பலவற்றைப் புரட்டினேன். ஜøலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளிவந்த கதைகளை விட செப்டம்பர் மாதம் வெளிவந்த கதைகளின் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும்போல் தோன்றியது. காலச்சுவடு ஒரே ஒரு கதையைத்தான் பிரசுரம் செய்திருந்தது. அமிருதா ஒரு கதையும் பிரசுரம் செய்யவில்லை. கதைகளின் தன்மையும் முதல் இரண்டு மாதங்களில் தென்பட்ட அவதியை உருவாக்கவில்லை. பல கதைகளைப் படிக்கும்போது வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்கவே தோன்றியது. குறிப்பாக ஆகஸ்ட் மாதம் பல கதைகள் சிறப்பாகவே எழுதப் பட்டிருந்தன. அந்தத் தன்மை செப்டம்பர் மாதக் கதைகளில் தென்படவில்லை. ஆனாலும் சில பத்திரிகைகள் நம்பிக்கைத் தராமலில்லை. இ வில்சன் என்பவர் கல்கி 14.09.2014 இதழில் பாக்கியம் என்ற கதையை எழுதி உள்ளார். அதேபோல் கணையாழி செப...
என்னுடைய மேட்டு நிலம் கலாப்ரியா என்னுடைய மேட்டு நிலம் நேற்றுப் பெய்த மழையில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது என்னுடைய மேட்டு நிலத்தை, இன்றைய வெயில் நெருப்பால் வருத்திக் கொண்டிருக்கிறது (என்னுடைய மேட்டு நிலம் நாளைய 'வெறுமையில்' தவம் புரிந்து கொண்டிருக்கும்) என்னால் - அதன் எல்லா அனுபவங்களையும் உணர முடிகிறது ஏனென்றால், இறந்துவிட்ட - என்னை அதில்தான் புதைத்திருக்கிறார்கள்
2 அழகியசிங்கர் லைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல் என்கிற ராபர்ட்டோ பெனினி இயக்கிய இத்தாலி படம் ஒன்றை பார்த்தேன். 1997ல் வெளியான இந்த இத்தாலி படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த அயல் நாட்டுப் படம் என்று பல விருதுகள் கிடைத்துள்ளன. இதை இயக்கிய ராபர்ட்டோ பெனினி அவர்களே இப்படத்தில் கிய்டோவாக முக்கிய வேடத்தில் சிறப்பாக நடிக்கிறார். படத்தின் முதல் பாதி கிய்டோ அவளது காதலியான தோராவுடன் ஏற்படுகிற உணர்ச்சிகரமான தன்மையை வெளிப்படுத்துகிறது. கிய்டோ ஒரு புத்தகக் கடையை நிறுவ முயற்சி செய்கிறான். தோராவை திருமணம் செய்து கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஜோஸ்வான் என்ற பையன். கிய்டோ யூத இனத்தைச் சேர்...
கசடதபற டிசம்பர் 1970 - 3வது இதழ் ஐராவதம் கரகரத்த உன் குரல் கதிரியக்கத் தாது எனக் காதில் பாயும்; ஊர்ந்து உதறும் உன் உடல் உயிரியக்க வேகமென மனசில் படும். ஆத்மாவின் அழுகுரலாய் அனாசாரத் தீங் கொலியாய் வறண்ட சில வயோதிகர் வர்ணிப்பர் உன் பாட்டை. சாத்திரம் கெட்ட நாம் உன் நாதக் குலைவினை சாதனையாய் ஏற்றிடுவோம். நாதம் பிரம்மம் எனில் நாதக்குலைவுதான் என்ன?
கசடதபற டிசம்பர் 1970 - 3வது இதழ் எஸ் வைதீஸ்வரன் ஓட்டில், ஒரு மாத ஒட்டடை, அரசியல் வேடிக்கையாய், ஆயிரம் சிக்கல் இடைஇடையில் அதில், என்றோ, அரசமிடுக்குடன் வலைகட்டி நடந்த சிலந்தி - பின் பிணமாகத் தொங்கிய முடிவை நான் பார்த்ததுண்டு இன்று, üüசிலந்திப் பிணமும்ýý மாறி ஒட்டடையாய், சிறுபூச்சி வலைகளுக் கொரு கைப்பிடிப்பாய், பிணசாட்சியாய் நிற்கிறது. வலைபின்னும் வாழ்வு மட்டும் நின்ற பாடில்லை.
முத்தச் செய்திகள் வே மாலி கென்னடி விமான நிலையம் இன்னுமோர் சிறப்பு பெற்றது; மூன்றழ கியபெண் களுக்கு நன்றிசொல் லவேண்டும், மாலி பெற்றோர் வரும்வரைக் காத்து நிற்கும் பொழுதை இலவசத் தோற்றம் தருவதில் போக்கச் சற்றும் சகியா அழகியர் வெற்றிகொ டுக்கும் அற்புத மான விற்பனைத் திட்டம் கற்பனை செய்தார். தங்கள் விளம்பர மாக இங்கே முத்தம் கிடைக்கும் ஒன்றின் விலை ஒரு டாலர் என்னும் செய்திப் பலகை காட்டி யவுடன், டாலரை நீட்டி யபடி, நாக்கைத் தீட்டி யபடி, ஆண்கள் கூட்டம் வளைத்துக் கொண்டது. ஐந்து மணித்து ளிகளில் நான்கு டாலர் திரட்டி நின்ற நேரம்; விரைந்து வந்த அதிகா ரிகள்தலை யிட்டுத் தடைவி தித்து விட்டுத் திரும்பிச் சென்றார் என்கி றதொரு செய்தி என்றான் பெரிய சாமி. மற்றொ ருத்தச் செய்தி தர்ம நிதிகு விப்ப தற்கா கஒரு மெத்த உற்சா கமான போட்டி. நின்ற நிலையில் ஒன்றி யஇதழ் ஒன்றி யபடி என்ப துவிதி. பத்தொன் பதாண்களும் பெண்களும் முத்தத் தொடங்கினர். யாவரும் முத்தத் தொடங்கிய கொஞ்ச நே ரத்தில் சலித்தனர். ஆனால் ஜென்னியும் டேவிடும் தொண்ணூற் றைந்தும ணித்துளி நாற்பத் தைந்துவி நாடிகள் முத்தி வ...