விருட்சம் இலக்கியச் சந்திப்பு என்ற பெயரில் கூட்டம் நடத்த முயற்சி செய்வதற்கு முதல் காரணம். ஆடிட்டர் கோவிந்தராஜன். இவர் முழுக்க முழுக்க ஒரு சிறுகதை வாசிப்பாளர். பல ஆண்டுகளுக்கு முன் நான் ஆரம்பித்து நிறுத்தி இருந்த இலக்கியக் கூட்டங்களை திரும்பவும் ஆரம்பிக்க என்னைத் தூண்டியவர். இதுவரை நாங்கள் 4 கூட்டங்களை நடத்தி இருக்கிறோம். இலக்கியக் கூட்டம் நடத்தும்போது நான் எதிர்கொள்வதை கோவிந்தராஜனுக்கும் தெரியும். அவர் ஒரு ஆடிட்டர் மட்டுமல்ல. வகுப்பும் நடத்தும் ஆசிரியர். பல இடங்களுக்குச் சென்று அவருடைய துறை சம்பந்தமாக பேச வல்லவர். என்னமோ தெரியவில்லை அவருக்கு தமிழ் சிறுகதைகளைப் படிப்பதில் ஒரு பித்து. எந்தப் பத்திரிகையில் எந்தக் கதை வந்தாலும் படித்து விடுவார். மேலும் சிறுகதைத் தொகுதிகளையும் வாங்கிப் படிப்பார். படிப்பதோடு அல்லாமல் அந்தந்த எழுத்தாளர்களைக் கூப்பிட்டு பாராட்டவும் செய்து விடுவார். அவர் முயற்சியில் இன்னொன்றையும் செய்ய முனைந்து விட்டேன். மாதம் ஒரு சிறுகதையை ப...