அழகியசிங்கர் இலக்கிய உலகம் அமைதியாக இயங்கிக் கொண்டிருப்பது பிடிக்கவில்லை. என்ன செய்யலாமென்று யோசித்தபோது இலக்கியக் கூட்டம் நடத்தலாமென்று தோன்றியது. செப்டம்பர் மாதம் 2012 ஆம் ஆண்டு ஒரு கூட்டம் நடந்தது. நடந்த இடம் பாரதியார் இல்லம். அசோகமித்திரனின் 82 வயது கூட்டம். பலர் கலந்து கொண்டு சிறப்பாக கூட்டம் நடந்தது. அதன்பின் கவிதைகள் வாசிக்கிற கூட்டமொன்றை ஏற்பாடு செய்யலாமென்று நினைத்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. முன்னதாகவே இப்படி கூட்டம் நடத்தப் போகிறேனென்று சொன்னால், கூட்டம் நடக்காமல் போய் விடுகிறது. முயற்சியை கை விட்டுவிட்டேன். ஆட்வான்ஸôக கொடுத்த 300ரூபாய் பணம் போய்விட்டது. இனிமேல் இதெல்லாம் வேண்டாமென்று சும்மாதான் இருந்தேன். அப்போதாவது பணியில் இருந்தேன். நேரம் கிடைக்காது. பிப்ரவரி மாதத்திலிருந்து பதவியிலிருந்து மூப்பு அடைந்தேன். சரி, இனிமேல் இலக்கிய உலகத்தை சும்மா விடக்கூடாது என்று தோன்றியது. என் நண்பர் ஒருவர், ஆடிட்டர் கோவிந்தராஜன், இதுமாதிரி...