Skip to main content

Posts

Showing posts from December, 2012
   ஐராவதம் பக்கங்கள்   ஆகஸ்ட் 15 - நாவல் - குமரி எஸ் நீலகண்டன் - 502 பக்கங்கள் - ரூ.450 - சாய் சூரியா வெளியீடு - டி டி கே சாலை - ஆழ்வார்பேட்டை - சென்னை    ஆகஸ்ட்15 புதினமா இல்லையா? மிகுந்த சர்ச்சைக்குரிய கேள்வி இது.  கல்யாணம் என்ற நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை விவிரிக்கிறது.  அவர் காந்தியின்தனிப்பட்ட காரியதரசியாக இருந்தவர்.  இந்தப் புதினத்தில் காந்தி, நேரு, ராஜாஜி வல்லபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத் எல்லோரும் வருகிறார்கள்.  அமெரிக்க நாவலாசிரியர் John Dos Passon இதே ரீதியில் சில நாவல்களை எழுதியுள்ளார்.  டாகுமெண்டிரி பாணியில் தனிப்பட்ட அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையை வர்ணித்திருக்கிறார்.  இந்த நாவலின் ஆசிரியரோ கல்யாணம் என்பவரின் வாழ்க்கையை நாட் குறிப்பு என்ற விதத்தில் பதிவு செய்துள்ளார். காந்தியின் மூத்த மகன் ஹரிலால் மதுவை விரும்புகிறார்.  கேளிக்கை வாழ்க்கை வாழ்ந்தார். இஸ்லாமியராக மதம் மாறி தன் பெயரை அப்துல்லா என்று மாற்றிக்கொண்டு காந்திக்கு எதிராகப் பிரசாரம் செய்தார்.  காந்தி சுடப்பட்டு இறந்தபோது, குஜராத்தில்...
கூழாங்கற்கள் மணல் வீட்டைக் கட்டி மாளிகை எனக் கொண்டாடுகிறது குழந்தை. ஆர்ப்பரித்துத் தோழர்கள் அளித்த கூழாங்கற்களால் அகழியை அலங்கரித்து அழகு பார்க்கிறது. பிரபஞ்சத்துக்கு அப்பாலும் வர்த்தகப் பரிமாற்றம்.. அன்றாடம் நாம் அனுப்பும் புண்ணிய பாவங்களின் வடிவில். செல்வக் குவியலென நினைத்துச் சேகரிப்பவற்றில் செய்த நல்லன மட்டும் கணக்கில் வருகின்றன. பக்தியும் பவ்யமும் மயங்க வைத்தக் கைத்தட்டல்களும் வைர வைடூரியங்களானாலும், இருட்டத் தொடங்கியதும் ஆட்டம் முடிந்ததென ஆற்றங்கரையோடு குழந்தைகள் விட்டு வந்து விடும் கூழாங்கற்களாகிப் போகின்றன. *** -ராமலக்ஷ்மி
ஐராவதம் பக்கங்கள் ஆட்கொல்லி - நாவல் - ஆசிரியர் க.நா.சுப்ரமண்யம் - வெளியீடு : அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட், முதல் பதிப்பு: July 1957 - விலை ரூ.1.65 - பக்கம் 119 முன்னுரையில் க.நா.சு தன் இலக்கியக் கொள்கையை வெளிப்படுத்துகிறார்.  தொடர்கதை படிக்கும் ரஸிகர்கள் பெருகப் பெருக நாவல் கலை தேய்ந்து கொண்டுதான் வரும்.  அது தவிர்க்க முடியாத இலக்கியவிதி. தொடர்கதையும் நாவல்தானே என்று கேட்பது இலக்கியத்தின் அடிப்படைகளை அறியாததால் எழுகிற கேள்வி.  தொடர்கதை என்பது இலக்கியத்தில் ஒரு தனி ரகம்.  நாவல் என்பது தனி ரகம்.. தொடர்கதை படிக்க சுலபமானது.  சம்பவங்கள் நிறைந்தது.  சுலபமாக வாரா வாரம் பின்பற்றக்கூடிய சுவாரசியமான அம்சங்கள் நிரம்பியது என்று சொல்லும் ஆசிரியர், ஆட்கொல்லி என்ற நாவலை தத்துவச் செறிவுள்ளதாக, இலக்கிய நயம் நிரம்பியதாக எழுதியுள்ளார்.  இது வானொலியில் வாராவாரம் வாசிக்கப்பட்ட ஒரு நாவல் என்னும்போது, ஆசிரியரின் கலை நுட்பம் ரேடியோவில் இடம் பெற முடிந்துள்ளது என்பது நமக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க்கையில் தோல்வியுற்றவனான கதைசொல்லி அவனுடைய மாம...
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு அழகியசிங்கர் 12 பந்தநல்லூர் எனக்குப் பிடிக்கவில்லை.  கொத்தமங்கலம் சுப்பு ஒரு நாவல் எழுதியிருந்தார்.  பந்தநல்லூரில் பாமா என்று.  அந்தத் தலைப்பே சரியாக வரவில்லை என்று தோன்றியது.  அப்படி வார்த்தைகளை இணைப்பது ஏதோ பகடி பண்ணுவதுபோல் தோன்றியது.   மயிலாடுதுறை நல்ல ஊர்.  எனக்கு அதுமாதிரியான ஊரில் உள்ள வங்கிக் கிளையில் பதவி உயர்வு கொடுத்திருந்தால், மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.  ஆனால் அப்படியெல்லாம் கொடுக்க மாட்டார்கள்.  எல்லாவற்றிலும் ஒரு போட்டி இருக்கும்.  போட்டியில் நான் தோல்வியை தழுவிவிட்டேன்.   ஒவ்வொருநாளும் மயிலாடுதுறையிலிருந்து குற்றாலம் போய், அங்கிருந்து பந்தநல்லூர் செல்லும் சாலை வழியாகச் செல்வேன்.  மயிலாடுதுறையிலிருந்து போகும் வழியில் முதன் முதலாக தமிழில் நாவல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய வேதநாயகம் பிள்ளையின் சமாதி தென்படும். அவருக்கு ஒரு சிலையும் வைத்திருக்கிறார்கள்.  அழகியசிங்கரிடம் இதைக் குறிப்பிட்டு, 'நீங்கள் ஏன் நாவல் எழுதக்கூடாது?' என்று கேட்டேன். ...
  எதையாவது சொல்லட்டுமா....79 அழகியசிங்கர்     என் இலக்கிய நண்பர் ஒருவருக்கு நான் போன் செய்தேன்.  அவர் வருத்தத்துடன் ஒரு தகவலைக் குறிப்பிட்டார. அவர் வைத்திருந்த எல்லாப் புத்தகங்களையும் கடையில் கொண்டுபோய் போட்டுவிட்டாராம். எனக்கும் கேட்க வருத்தமாக இருந்தது.  =வேற வழியில்லையா? + என்று கேட்டேன்.  =வழியில்லை.  அவர்களுடன் இருக்க வேண்டுமென்றால், புத்தகம் இருக்கக்கூடாது..+ இத்தனைக்கும் நண்பர் ஏற்கனவே இருந்த இடத்தைவிட இன்னும் அதிகம் இடம் உள்ள இடத்திற்கு மாற உள்ளார்.  ஆனால் அவருடைய மனைவியும், புதல்வனும் கட்டாயம் புத்தகத்திற்கு இடம் கிடையாது என்று கூறிவிட்டார்கள்.  ==என்ன சார், புத்தகம் வைத்துக் கொள்ளக் கூடாதென்று சொல்லிவிட்டார்கள்..இதிலிருந்து ஒன்று தெரிகிறது..வீட்டைத் தவிர தனியாய் ஒரு ஆபீஸ் வைத்துக்கொள்ள வேண்டும்.++  வீடைத் தவிர தனியாய் புத்தகம் வைத்துக்கொள்ள ஒரு இடமா? முடியுமா?  சாதாரணமானவர்கள் எங்கே போவார்கள்.   என்னுடைய இன்னொரு இலக்கிய நண்பர் இருக்கிறார்.  இவர் பழுத்த இலக்கியவாதி.  உலக இலக...
இரண்டு கவிதைகள் அழகியசிங்கர் 1) நான் சொல்வேன் வாய்த் திறந்து ஜெம்பு என்று அவர் ஏன் என்று கேட்க மாட்டார் இன்னொரு முறை கூப்பிடுவேன் ஜெம்பு ஜெம்பு என்று அவர் உம் என்று சொல்லமாட்டார் எனக்குத் தெரிந்தது அவருக்குப் பிடிக்கவில்லை பின் நான் நகர்ந்து அவரிடம் போய் பிடபூள்யு என்பேன் பின் இருவரும் கிளம்புவோம் சலிப்புடன்........ 2. ஒருவர் ரிட்டையர்டு ஆகிறாரென்றால் என்ன நினைக்க முடியும்? அவர் இனிமேல் வரப் போவதில்லை காலையில் சீக்கிரமாய் வந்திருந்து அலுவலகக் கதவைத் திறக்கப் போவதில்லை அவர் பார்த்த அலுவலக இருக்கையில் கொஞ்ச நாட்களுக்குத் தெரியும் அவர் கையெழுத்து மற்றவர்களெல்லாரும் வழக்கம்போல் வந்து கொண்டிருப்பார்கள் நான் பிப்பரவரி 2014ல் வரும் என் ரிட்டையர்மெண்டை நினைத்து காலத்தைத் தள்ளுவேன்
நதியும் நானும் பார்வையின் எல்லைக்குள் எங்கும் மழையேயில்லை எரியும் மனதை ஆன்மீகத்தால் குளிர்விக்க ப்ரிய நேசத்தால் நிறைந்த இன்னுமொரு மழை அவசியமெனக் கருதுகிறேன் நான் சற்று நீண்டது பகல் இன்னும் மேற்கு வாயிலால் உள்ளே எட்டிப் பார்க்கும் பாவங்களை அதற்கேற்ப கரைத்து அனுப்பிவிடத் தோன்றுகிறது வாழ்நாள் முழுவதற்குமாக சுமந்து வந்த அழுக்குகள் அநேகம் வந்த தூரமும் அதிகம் எல்லையற்றது மிதந்து அசையும் திசை இன்னும் நிச்சலனத்திலிருக்கிறது நதி எனினும் கணத்துக்குக் கணம் மாறியபடியும் ஆழத்தில் அதிர்ந்தபடியும் கிடக்கிறோம் நதியும் நானும் - ரொஷான் தேல பண்டார தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
உள் நோயாளி நான் எப்போதும் உள் நோயாளி தான் என் காதலை உன்னிடம் சொல்ல நினைத்ததிலிருந்து. கிடைத்தது பல சமயங்களில் கிடைத்தது என்பதை விட ஏற்றுக்கொண்டேன் என்பதே சரியாயிருக்கிறது பலாச்சுளை சிறு ஊடலுக்குப்பின் அளவுக்கதிகமாக அன்பைத்தெரிந்தே பொழிவது போல இந்தப் பலாச்சுளை ஏகத்திற்கு இன்று தித்திக்கிறது. எல்லோரும்  கொண்டாடப்படும் இடத்தில் குழந்தையும் தெய்வமும் மட்டுமல்ல எல்லோரும் தான். பெயர் நான் வைத்த பெயர் என் மகளுக்கு பிடித்திருக்கிறதாம் நீ வைத்த பெயர் உன் மகனுக்குப் பிடித்திருக்கிறதா ? முதல் பாடல் காலையில் கேட்ட முதல் பாடல் போல் நாள் முழுதும் சுழலும் உன் ஞாபகங்கள் என்னுள். ஒரு பக்கக் காதல் கடலை மடித்துக்கொடுத்த காகிதத்தில் இருந்த பாதிக்கவிதை போலிருக்கிறது என் காதல். - சின்னப்பயல் 
இரு சீன வைத்தியக் கதைகள் அசோகமித்திரன் சீனாவின் பாரம்பரிய வைத்தியம் உலகப் புகழ் பெற்றது. நான் ஒரு முறை வைத்தியம் செய்து கொண்டேன். என் வரையில் அவ்வளவு வெற்றிகரமாக முடியவில்லை. கதைகளில் முதல் கதை நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது சாரணர் ‘காம்ப் ஃபைய ’ ரில் நிழல் நாடகமாக நட்த்தப்பட்டது. அது இரண்டாம் உலக யுத்த காலம். நாங்கள் நேரடியாக யுத்த களத்துக்கு போவதாகக் கற்பனை செய்து கொள்ளுவோம். எங்கள் ‘காம்ப் ’ இரண்டு அல்லது மூன்று தினங்கள் நடக்கும். வெட்ட வெளியில் கூடாரங்கள் போட்டு, நாளெல்லாம் ஓய்ச்சல் ஒழிவில்லாமல் உழைப்போம். பொழுது சாய்ந்ததும் ‘காம்ப் ஃபையர் ’ நடக்கும். ஆசிரியர்கள் உரை ஒரு மணி நேரம் இருக்கும். அதன் பிறகு சாரணர்கள் கலை நிகழ்ச்சி. ஒரு பாட்டு, ஒரு சிறு நாடகம் என மாறி மாறி ஒரு மணி நேரம் நடக்கும். அதன் பிறகு இரவு உணவு. எங்கள் நிகழ்ச்சியில் மூன்று நடிகர்கள். சீன டாக்டர், சீன நர்ஸ், சீன நோயாளி. ஒருவன் ஒரு எலியை விழுங்கிவிடுகிறான். டாக்டர் முதலில் அவன் மண்டையில் ஒரு போடு போட்டு மயங்க வைக்கிறார். டாக்டருக்கும் நர்ஸுக்கும் சண்டை. நர்ஸ் முதலில் ஒரு ரம்பத்தை டாக்டரைப் பார...