ழ என்ற சிற்றேடு ஆத்மாநாம் மூலம் 1978 ஆம் ஆண்டு உருவானது. அவருக்கு பக்கபலமாக ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன், ஆனந்த், காளி-தாஸ் போன்ற பல நண்பர்கள் செயல்பட்டார்கள். ழ ஒரு சிற்றேடு. மிகக் குறைவான பேர்களே வாசித்திருப்பார்கள். 1978 லிருந்து 10 ஆண்டுகள் செயல்பட்ட ழ பத்திரிகை, ஆத்மாநாமின் தற்கொலையால் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. தமிழ் கவிதைக்கு ஒரு மாற்றத்தை எளிய வழியில் ஏற்படுத்திக் கொடுத்தது. இக் கவிதைகளைப் படிக்கும்போது கவிதை எழுதுவதற்கான ஒருவித ஒழுக்கத்தை பலரும் கற்றுக்கொள்ள முடியும். அழகியசிங்கர் ழ 6வது இதழ் பிப்ரவரி / மே 1979 ஒரு கவிதை இந்தக் காலத்தில் பிரும்மத்தை கள்ளச் சந்தையில் வீடீயில் மந்திரிகளின் பொய்களில் எதிலும் (மே) குறைபிரசவத்தில், அவசரத்தில் தன்மைகள் எல்லாம் தோற்ற தந்திரத்தில் -தான் காணமுடியும் போலிருக்கிறது. -மீண்டும்- இந்தக் காலங்களில் தெய்வத்திற்கும் (கூட) ஊர் சுற்றும் ஆசை ஏற்பட்டுவிட்டது என நினைத்தேன்- சி...